மாவட்ட செயற்குழு
12-02-2019 அன்று நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் K.அம்பாயிரம்
கொடியேற்றிட வெளிப்புற பகுதி கிளைச்
செயலர் தோழர் E.விநாயக மூர்த்தி வின்னதிர கோஷமிட, மாவட்ட தலைவர் தோழர் G.கனேசன் தலைமையில் செயற்குழு துவங்கியது. செய்றகுழுவிற்கு வந்திருந்தவர்களை
மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் R.பன்னீர்செல்வம்
வரவேற்புரையாற்றினார். செயற்குழுவில் மாவட்டச் சங்க நிர்வாகிகள், கிளைச் செயலர்கள் பெரும்பான்மையோர்
பங்கேற்றனர். சிறப்புரையாக தோழர் S.பழனியப்பன் அகில இந்திய துணைத் தலைவர் பங்கு பெற்று நமது இன்றைய BSNL நிலைமை, நாம் செய்ய வேண்டிய
செயல்பாடுகள் போன்றவற்றினை பதிவு
செய்தார். மற்றும் மாவட்ட சங்க, கிளைச் சங்க நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை
பதிவு செய்தனர். நிறைவுரையாக தோழர் இரா.ஸ்ரீதர்
வேலை நிறுத்தத்தின் அவசியத்தை சங்க நிர்வாகிகளிடம் தெளிவு பெற எடுத்துரைத்தார்.
இறுதியாக தோழர் D.குழந்தைநாதன் நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது.
தீர்மானம்
v
18,19,20 தேதிகளில்
நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்ததில் முழுமையாக பங்கேற்று வெற்றி பெற செய்ய வேண்டும்.
v
வாழ்வாதார பிரச்சனையாக தேச நலனில் அக்கறையோடு செயல்படும்
மக்களின் நிறுவனமான BSNLஐ காக்க ஒன்றினைந்து போராடிட பங்கேற்றிடுவோம் வேலை நிறுத்தத்தில்.
தோழமையுடன்
இரா.ஸ்ரீதர்
மாவட்டச் செயலர், NFTE.
No comments:
Post a Comment