AUAB சார்பில் பிப்18,19,20
ஆகிய மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தத்திற்கு நமது அதிகாரிகள், ஊழியர்கள்
ஆகியோரிடமும், மற்றும் நமது வேலைநிறுத்தத்தின் கோரிக்கைகளை மக்களிடம் விளக்கும் வகையிலும்
கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் அனைத்து ஊர்களுக்கும் பிரச்சார வேன் மூலம் சென்று
வாயிற்கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டது. அனைத்து ஊர்களிலும் நமது
போராட்டக்கோரிக்கைகள் விளக்கி நமது தோழர்கள் பலர் உரையாற்றினர்.
11.2.2019 அன்று கடலூரில்
துவக்கப்பட்ட கூட்டத்தில் AUAB கூட்டமைப்பு தலைவர்கள் NFTE சார்பில் சம்மேளனச்செயலர்
தோழர் S.பழனியப்பன், BSNLEU சார்பில் மாநிலச்செயலர் தோழர் A.பாபுராதாகிருஷ்ணன்,
SNEA சார்பில் தோழர் B.பெர்லின் ஐசக், AIBSNLEA தோழர் R.மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு
கோரிக்கை விளக்கவுரையாற்றினர். அதனைத்தொடர்ந்து 12.2.2019: சிதம்பரம், காட்டுமன்னார்கோயில்,
13.2.2019: பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி,
14.2.2019: உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை, அரகண்டநல்லூர், திருக்கோயிலூர், தியாகதுருகம்,
கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் நடைபெற்றது. நமது சங்க நிர்வாகிகள் P.சுந்தரமூர்த்தி,
V.லோகநாதன், V.இளங்கோவன், D.குழந்தைநாதன், D.ரவிச்சந்திரன், R.அகஸ்டின், S.ராஜேந்திரன்,
தோழர்கள் R.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அனைத்து ஊர்களிலும் கலந்துகொண்டனர். தோழர்களுக்கு
கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment