வருகின்ற
பிப்ரவரி 18,19,20 வேலை நிறுத்த "போராட்ட
களத்தில் நீ கலந்து கொள்ளவில்லை" எனில்
உன்
எதிர்கால வாழ்க்கை "போராட்ட களமாகிவிடும்" என்பதை மறந்துவிடாதே••
"போராட்ட களத்தை வேடிக்கை பார்க்கும் வீணர்களாய் இருந்து விடாதே"
உன் எதிர்
கால வாழ்க்கை வீணாய் போய் விடும் என்பதை நினைவில் கொள்••
"உனக்காக போராடும் தோழனை ஏளனமாய் பார்க்காதே".
போராடுபவன்
பெறும் வெற்றிக்கனி., போராடுபவனுக்கு
இனிக்கும்
உனக்கு
அந்த கனி கசக்கும்••
யாரோ
போராடட்டும் என இருந்து விடாதே•|
போராடி
வெற்றி பெற்றவனின் ஏளன பார்வை உன்னை காலம்
முழுவதும் கொள்ளும்..
அவர்
சொன்னார்., இவர் சொன்னார்., என வேலைக்கு சென்று விடாதே••
மூன்று
நாட்கள் சம்பளம் போய்விடுமோ என்று கவலை படாதே••
BSNL தனியார் மயமாக்கப்பட்டால் மக்கள் மத்தியில் உன் மவுசு காணாமல்
போய்விடும்..
இப்போது
உள்ள சலுகைகள்.. பதவி உயர்வுகள், ஊதிய
உயர்வுகள், பழைய பென்சன், புதிய
பென்சன், எதுவும் கிடைக்காது••
ஏன் இவைகள்
எல்லாம் பெற்று தரவில்லை என சந்தா கொடுத்த
உரிமையில் தொழிற்சங்கங்களை எதிர்த்து நீ இனி கேள்வி கேட்க முடியாது..
BSNL இல்லையென்றால்? தொழிற்சங்கங்களே இனி இருக்காது..
அப்போது
யாரிடம் கேள்வி கேட்பாய் ?
உனக்காக,
உன் மனைவி
மக்களுக்காக..
எதிர் கால
சந்ததிக்காக..
உன்
குழந்தைகளின் கல்விக்காக••
நீ வாங்கிய
வீட்டு கடன்..
சொந்த கடனை
கட்டுவதற்காக.. போராட்ட களத்திற்கு வா..
இன்று போல்
என்றும் இருக்க வேண்டுமென நினைத்தால் போராட்ட களத்திற்கு வா.. சுயநலத்திற்காக,
அரசியலுக்காக.,
வேலை
நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளாதே என்று சொல்லும் தலைவர்களை புறந்தள்ளி
விட்டு வா களத்திற்கு..
இந்த ஒரு
விசயத்தில் தொழிற்சங்க வித்தியாசம் பார்க்காமல் ஒன்று பட்டு போராடுவோம் வா
களத்திற்கு••
இன்று
போராடவில்லை எனில்..
இனி
எதற்காகவும் போராட முடியாது..
இனியும்
ஏன் தயக்கம்
வா
களத்திற்கு,
வேலை
நிறுத்த போராட்டத்தை வெற்றியாக்குவோம்..
நம்
முன்னோர் இரத்தம் சிந்தி, பல உயிர்கள் பலி
கொடுத்து பெற்று தந்த உரிமை, சலுகைகளை பேணி காப்போம்••
நம் BSNL
பொதுத்துறையாக நீடிக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் சக்தி
உன்னிடம் மட்டுமே உள்ளது••
நம் BSNL
பொதுத்துறை நிறுவனமாக மக்கள் சேவையாற்றிட••
நாடு நலம்
பெற நாமும் நலம் பெற பிப்ரவரி 18,19,20 மூன்று
நாட்கள் மட்டும் வேலைக்கு செல்லாதே••
NFTE மாவட்ட சங்கம்
கடலூர்
No comments:
Post a Comment