உண்ணாவிரதப்
போராட்டம் ஒத்திவைப்பு.
நாளை
5.4. 2019 அன்று நடைபெறவிருந்த மாவட்டம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
இன்று 4.4.2019 கடலூர் மாவட்ட பொது மேலாளர் திரு. ஜெயக்குமார் ஜெயவேலு
அவர்கள் நாம் அறிவித்த உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி நம்மைப் பேச்சுவார்த்தைக்கு வரும்படி
அழைத்து இருந்தார். அவருடன் சுமார் இரண்டு மணி நேரமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அவருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையிலும், அவர் நமது ஊழியர்
பிரச்சினைகளை இரண்டொரு நாட்களில் தீர்ப்பதாக உறுதிமொழி அளித்ததன் அடிப்படையில் நாளை
நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. பிரச்சனைகளில் தீர்வு
ஏற்படாவிட்டால் வருகின்ற 12.4.2019 அன்று மீண்டும் நமது உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது
என நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை முடிந்தவுடன் நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்ற
ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் தோழர் இரா ஸ்ரீதர்,
மாநில உதவிச் செயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர்
தோழர் V.இளங்கோவன் கலந்து கொண்டனர். மாவட்ட பொதுமேலாளர் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
மாவட்ட சங்க பொறுப்பு செயலர் தோழர் D.குழந்தை நாதன், மாவட்டத் தலைவர் தோழர் G.கணேசன்,
மாவட்டப் பொருளர் தோழர் A.S. குருப்ரசாத், மாவட்ட உதவிச் செயலர் தோழர் S.மணி, மாவட்ட
அமைப்பு செயலாளர் தோழர் R.பன்னீர்செல்வம், GM அலுவலக கிளைச் செயலாளர் தோழர் S.ராஜேந்திரன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment