தோழர் குருதாஸ்தாஸ் குப்தா மறைந்தார்
ஏஐடியூசி மாபெரும் இயக்கத்தின் மாபெரும் தலைவர் மறைந்தார். என்எல்சி வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்த தொழிலாளர் போராட்டத்திற்கு வித்திட்டு
முன்னின்று நடத்திய தோழர்.
NLC ஒப்பந்த தொழிலாளர்களுக்களின் கோரிக்கையின் மீது தனி கவனம் செலுத்தி அதனை
நிறைவேற்றிட பாடுவட்ட மாபெரும் தலைவர் தோழர் குருதாஸ்தாஸ் குப்தா. தொழிலாளர்களின்
நலனுக்காக நாடாளுமன்றத்தில் 40 வருடங்களாக தொடர்ந்து சிங்கமென கர்ஜித்த மாபெரும் சிறந்த
நாடாளுமன்றவாதி.
2003 தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்
போது பல லட்சம் தமிழக அரசு ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம்
செய்ததை கண்டித்து ஒரு கருத்தரங்கில் அன்றைய இந்திய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் திரு
வாஜ்பாய் அவர்களே தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக நடைபெறும் நடவடிக்கையின் மீது
உரிய கவனம் செலுத்திட கர்ஜித்தவர் . அன்றைய பிரதமரை நேரடியாக கண்டனம் தெரிவித்த ஒரே மாபெரும்
தலைவர் தோழர் குருதாஸ் தாஸ்குப்தா.
ஏ.ஐ.டியுசி நூற்றாண்டு தொடங்கிய இன்னாளில் மறைந்த தோழருக்கு கடலூர்
மாவட்ட சங்கத்தின் செவ்வணக்கம்.
தோழருக்கு நமது சங்கங்களின் சார்பில்
பொது மேலாளர் அலுவலகத்தில் தோழருக்கு அஞ்சலி இன்று மதிய உணவு இடைவேளை நேரத்தில் நிகழ்ச்சி
நடைபெறும் . தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தோழமையுடன்
D.குழந்தைநாதன்
மாவட்டச் செயலர், கடலூர்-01.
No comments:
Post a Comment