.

Sunday, November 3, 2019

கண்டன ஆர்ப்பாட்டம்
தோழர்களே  நமது மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன் ( JE/CDL ) மற்றும் நமது  மேனாள் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்கள் மீது   முன்பு குற்றப்பத்திரிக்கை  வழங்கியது அனைவரும் அறிந்ததே.  அந்த குற்றச்சாட்டுகளுக்கு போதுமான அளவில் விளக்கங்களுடன் பதில் அளித்தும் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கியுள்ளது .  நிர்வாகம் யாரையோ  திருப்திபடுத்தும் நோக்கில் தவறான முடிவெடுத்து பழி வாங்கும் செயலை அரங்கேற்றி உள்ளது என்பதாக கருதுகிறோம்.  BSNL லில் புத்தாக்க திட்டம் அமுலாக்கம் செய்யும் நேரத்தில்  தோழர்கள் மீது அவசரமாக  தண்டனை வழங்குவது  நியாயமற்றது. இச்செயலை  எந்த ஒரு ஊழியரும் இந்த நடவடிக்கையினை  ஏற்கவில்லை ,  நமது சங்க தோழர்களின் உணர்ச்சியின் வெளிப்பாடக இச்செயலுக்கு நமது கடலூர்  மாவட்ட சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
        பழி வாங்கும் இச் செயலை திரும்ப பெற வேண்டியும் , மாநிலச்  நிர்வாகம் இதன் மீது கவனம் செலுத்த வேண்டியும்   வரும் 05.11.2019  செய்வாய் கிழமை அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடுமாறு  கிளைச் செயலர்களை  கேட்டுக் கொள்கின்றோம். மேலும்  நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட , மாநில சங்க நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.

( குறிப்பு: தோழர் V.இளங்கோவன் BSNL ல் உள்ள அனைத்து சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தத்தின் போது நடைபெற்ற சம்பவத்திற்காகவும், தோழர் இரா.ஸ்ரீதர்     மத்திய தொழிற்சங்க இயக்கத்தில் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தோழமை ஆதரவு  அளித்தற்கும்  மேற்கொண்ட குற்றச்சாட்டு வழங்கப்பட்டது)

                                               நன்றி
                                                                                                                           தோழமையுடன்
                                                                                                 D.குழந்தைநாதன்
                                                                                                    மாவட்ட செயலர்

போராட்டத்தில் திரளாக பங்கேற்போம்!... , அநீதி களைவோம்!!,...

No comments:

Post a Comment