.

722535

Sunday, November 3, 2019


கண்டன ஆர்ப்பாட்டம்

தோழர்களே!!
நமது மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன் JE-CDL மற்றும் நமது மேனாள் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்கள் மீது முன்பு குற்றப்பத்திரிக்கை வழங்கியது அனைவரும் அறிந்ததே. அந்த குற்றச்சாட்டுகளுக்கு போதுமான அளவில் விளக்கங்களுடன் பதில் அளித்தும் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கியுள்ளது . நிர்வாகம் யாரையோ திருப்திபடுத்தும் நோக்கில் தவறான முடிவெடுத்து பழி வாங்கும் செயலை அரங்கேற்றி உள்ளது என்பதாக கருதுகிறோம். BSNL லில் புத்தாக்க திட்டம் அமுலாக்கம் செய்யும் நேரத்தில் தோழர்கள் மீது அவசரமாக தண்டனை வழங்குவது நியாயமற்றது. இச்செயலை எந்த ஒரு ஊழியரும் இந்த நடவடிக்கையினை ஏற்கவில்லை.
நமது சங்க தோழர்களின் உணர்ச்சியின் வெளிப்பாடா
இச்செயலை நமது கடலூர் மாவட்ட சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
பழி வாங்கும் இச் செயலை திரும்ப பெற  வலியுறுத்தியும் ,
மாநில நிர்வாகம் இதன் மீது கவனம் செலுத்த வேண்டியும்
  05.11.2019 செய்வாய் கிழமை
மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைகளிலும்
 கண்டன ஆர்ப்பாட்டம்
 நடத்திடுமாறு கிளைச் செயலர்களை கேட்டுக் கொள்கின்றோம். மேலும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட , மாநில சங்க நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.
நன்றி
போராட்டத்தில் திரளாக பங்கேற்போம்!... ,
அநீதி களைவோம்!!,...

தோழமையுடன்
D.குழந்தைநாதன் மாவட்ட செயலர்,


No comments:

Post a Comment