பெரும்திரள்
ஆர்ப்பாட்டம்
LIC,EPF,PLI, வங்கி,சொசைட்டி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பிடித்தங்களை செலுத்தாத
நிர்வாகத்தை கண்டித்து
10-10-2019 அன்று
“பெருந்திரள்
ஆர்ப்பாட்டம்”.
அன்பார்ந்த தோழர்களே ,,
நாம் மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் எடுத்த
முடிவின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு பல
மாதங்களாக தவணைகளை செலுத்தாத நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக செலுத்திட
வலியுறுத்தியும் 10-10-2019 ஆம் தேதி அனைத்து
கிளைகளிலும் பெரும்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம்.
வங்கிக்கடன் தவணை ஜூலை வரை செலுத்தப்பட்டிருந்த
போதும்
அபராத வட்டி
ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படுகிறது. இன்சுரன்ஸ் தவணை தவறியதால் பாலிசி
காலவதியாகும் நிலையில் உள்ளது. இனி இன்சூரன்ஸ் தொகை பிடித்தம் செய்ய வேண்டாம், ஊழியர்களே நேரடியாக
செலுத்துவார்கள் என மாநில நிர்வாகத்தை கேட்டுள்ளோம். GPF,
சொசைட்டி பிடித்தம்
செய்து தொகையை செலுத்திட தவறியதால் கடன் பெற முடியாமல் ஊழியர்கள் பெறும் அவதி
பட்டு வருகின்றனர். பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உரிய நிறுவனத்தில் செலுத்திட , கடன் பாதிப்பை களைந்திட
நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி அக் 10 ம் தேதி
ஆர்ப்பட்டத்தை வெற்றிகரமாக்குவோம். நமது தோழமை (SEWA,PEWA,PEWA) சங்கத்தின் தோழர்கள்ளோடு பெரும்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம்.
D.குழந்தை நாதன்
மாவட்ட செயலாளர்
No comments:
Post a Comment