.

Tuesday, January 7, 2020


3/1/2020 மாநில செயற்குழுவின் முடிவின்படி
 10.1.2020 வெள்ளிக்கிழமை
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகள்.
1.    அகில இந்திய நிர்வாகமே,  கார்ப்பரேட் அலுவலகமே விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கான out of department cases ஐ காரணம் காட்டி அவர்களுக்கான ex-gratia தொகையை நிறுத்தாதே. விருப்ப ஓய்வில் செல்பவர்களை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட  13/12/2019  உத்தரவை உடனடியாக வாபஸ் பெறுக.
2.    ஒரு வருட காலமாக வழங்கப்படாத ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சம்பளத்தை பொங்கலுக்கு முன்பாக பட்டுவாடா செய்திடுக.
3.    கார்ப்பரேட் நிர்வாகமே ,ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையை உடனடியாக செலுத்துவதற்கு ஏற்பாடு செய்திடுக. செலுத்தப்படாத காலத்திற்கான அபராத தொகையை நிர்வாகமே ஏற்றிட வேண்டும். ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யாதே.
4.    ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட அனைத்து வகையான பிடித்தங்களையும் காலதாமதமின்றி உடனடியாக அந்த அந்த நிறுவன கணக்கில் வரவு வைத்திடக்கோரி …
5.    மாவட்ட நிர்வாகங்கள் விருப்ப ஓய்வு அமல்படுத்தப்பட்ட பின்னால் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் மாவட்டச் சங்கங்களோடு கலந்து ஆலோசித்து கருத்தொற்றுமை அடிப்படையில்  முடிவு செய்திட வேண்டும் எனக்கோரி,
6.    மாநில நிர்வாகமே சொசைட்டிக்கு ஊழியர்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையை மட்டும் பிடித்தம் செய்து அனுப்பிடுக.
7.    சொசைட்டி நிர்வாகமே VRS ல் செல்கிற ஊழியர்கள், society ல் இருந்து விலகி இருக்கிற தோழர்கள் அனைவருக்கும் உடனடியாக அவர்களுக்கு சேர வேண்டிய தொகையை  settle செய்திடுக.
8.    மாநில, மாவட்ட நிர்வாகங்களே ,  VRS ல் செல்பவர்களுக்கு TSM PERIOD ஐ கணக்கெடுப்பதில் ஏற்பட்டிருக்கிற நடைமுறை சிக்கலை தீர்த்து அவர்களுக்கு சேர வேண்டிய TSM period க்கான பணப்பலனை பெற்றுத் தருவதற்கு துரித நடவடிக்கை எடுத்திடக்கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கடலூரில் 10.1.2020 வெள்ளிக்கிழமை மதிய உணவு இடைவேளையில் மாவட்டப் பொதுமேலாளர் அலுவலக வாயிலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தோழர்கள் அனவரும் திரளாக கலந்து கொண்டு் வெற்றிபெறசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுள்ள
D.குழந்தைநாதன்
மாவட்டச் செயலர்

No comments:

Post a Comment