.

Saturday, February 29, 2020

திரு P. சந்தோஷம் B.Tech., M.B.A., I.T.S.
பணி நிறைவு வாழ்த்து
*****
திரு P. சந்தோஷம் அவர்கள் இன்று இலாக்கா பணியிலிருந்து பணி ஓய்வு பெறுகிறார். இவர் நமது மாவட்டத்தின் வளர்ச்சியோடுத் தொலைத் தொடர்பு இலாக்காவின் T.D.M., ஆக, BSNL ஆக மாறிய போது நமது மாவட்டத்தின் பொது மேலாளராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டவர்.
கூடுதல் பொறுப்பு வகித்தாலும் ஊழியர்களைத் தனிப்பட்ட முறையில் பெயர் சொல்லி அழைக்கும் அளவு ஊழியர்களோடு நெருங்கிப் பழகிய பண்பாளர். தொழிற்சங்கங்களோடு நல்ல உறவைப் பேணியவர். பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு விரைவாக முடிவெடுப்பதிலும் அதனை முழுமையாக நிறைவேற்றுவதிலும் முத்திரை பதித்தவர்.
நமது சங்கம் நடத்திய பல விழாக்களில் பங்கேற்றுச் சிறப்பித்தவர். இவருடைய மனிதநேயம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. நமது மாவட்டத் தோழர்கள் அந்த மனிதநேயத்தை, அவரின் பரிவை நேரடியாக அனுபவித்தவர்கள்நமது இலாக்கா வாகனம் எதிர்பாராத விபத்திற்குள்ளாகி அதில் இலாக்கா பணிக்காகப் பயணம் செய்த தோழர்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
செய்தி அறிந்த திரு சந்தோஷம் அவர்கள் உடனடியாகக் கடலூர் கிருஷ்ணா மருத்துவமனைக்கு நடந்து வந்து சிகிச்சைபெறும் தோழர்களை நலம் விசாரித்தார். மேல் சிகிச்சைக்கான உதவிகளைச் செய்ததுடன், அவர்களுக்கான மருத்துவ விடுப்பையும் முயன்று பெற்றுத் தந்தார். என்றும் நம் நன்றிக்குரியவர் அவர்.
திரு சந்தோஷம் அவர்கள் தொலைத் தொடர்பின் பல பிரிவுகளில் தலைமையேற்று பணியாற்றிய பிரிவுகள் ஒவ்வொன்றும் சிறக்கப் பாடுபட்டார்.
தமிழ் மாநிலத் தொலைத்தொடர்பு வட்டத்தின் தலைமைப் பொதுமேலாளராகப் பொறுப்பு வகித்தவர்.
தற்போது சென்னை தொலைத்தொடர்பு வட்டத்தின் தலைமைப் பொது மேலாளராகப் பணிநிறைவு செய்கிறார்.
ஐயா அவர்களின் பணி ஓய்வுக்காலம் சிறந்து விளங்க கடலூர் NFTE மாவட்டச் சங்கம் மற்றும் கடலூர் மாவட்ட ஊழியர்களின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உளம் நிறை வாழ்த்துகளுடன்,
மாவட்டச் சங்கத்தின் சார்பில்,

             இரா. ஸ்ரீதர்.

Friday, February 28, 2020


பணி ஓய்வுக்காலம் சிறக்க வாழ்த்துக்கள்….
                                                                                                           



இன்று 29.2.2020 ஓய்வு பெறும் நமது மாவட்டத் தலைவர் தோழர் G.கணேசன் அவர்களின் ஓய்வுக்காலம் சிறக்க கடலூர் மாவட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள்.




மேலும் இன்று ஓய்வு பெறும்
  • திரு  G.A.கமால்தீன் DGM கடலூர்

    மற்றும் 
  • தோழியர் N.சியாமளா தேவி OS கடலூர்
  • தோழர் K.தமிழ்மணி TT கடலூர்
  • தோழர் P.அன்பு TT கடலூர்
  • தோழர் ஸ்ரீ தரன் TT இராம நத்தம்
  • தோழர் V.சுந்தர் TT திருக்கோயிலூர்
  • தோழியர் A.தமிழரசி OS கடலூர்
  • தோழர் G .கலியமூர்த்தி TT STR விழுப்புரம் 

ஆகியோரின் பணி ஓய்வுக்காலம் சிறக்க கடலூர் மாவட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுடன்
 தோழர் D.குழந்தைநாதன் மாவட்டச்செயலர்


Sunday, February 16, 2020



Ex-gratia தொகை பெறும் VRS-2019ல் சென்ற தோழர்கள் வருமான வரி விதி 10C அல்லது 89-A இரண்டில் ஒன்றின்படி ரூ 5லட்சம் வரை வரிவிலக்கு பெற்றிட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது (உத்தரவுக் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது). அதன்படி, 10C விதியின்படி கொடுப்பது நல்லது. அதற்கான படிவம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.  தோழர்கள் படிவத்தை பூர்த்தி செய்து நிர்வாகத்திடம் கொடுக்கவும்.


                                                             தோழமையுள்ள
                                                             குழந்தைநாதன்
                                            மாவட்டச்செயலர் nfte-bsnl

.

Monday, February 10, 2020

BSNL அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பு கூட்டம் 06.02.2020 அன்று தோழர்.சந்தேஸ்வர்சிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டமைப்பில் உள்ள அனைத்து சங்கங்களின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டமைப்புக் கூட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து மட்டங்களிலும் போராட்ட இயக்கங்கள் நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில்,
11.2.2020  செவ்வாய்க்கிழமை
கடலூர் பொதுமேலாளர் அலுவலக வாயிலில்
மதிய உணவு இடைவேளை
ஆர்ப்பாட்டம்
24.02.2020 அன்று அனைத்து மட்டங்களிலும்
உண்ணாவிரதம்

கோரிக்கைகள்:-
#    2019 டிசம்பர் மற்றும் 2020 ஜனவரி மாதங்களின் ஊதியத்தை உடனே வழங்கு. ஒவ்வொரு மாதமும் முறையாக ஊதியம் வழங்கிடு.
#    ஊழியர்களின் ஊதியத்தில் ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனடியாக அந்தந்த அமைப்புகளுக்கு உடனே செலுத்திடு.
# BSNLன் 4G சேவைகளை உடனடியாக துவங்கிடு.
# BSNL கடன் பத்திரங்களை வெளியிட அரசின் உத்தரவாதத்தை உடனடியாக  வழங்கிடு.
#    FR17(A)-ன் கீழ் வழங்கப்பட்ட அறிவிப்புகளை உடனடியாக திரும்ப பெற்றிடு.
# VRS அமலாக்கப்பட்டதன் காரணமாக, ஊழியர்களை தன்னிஷ்டப்படி மாற்றல் செய்யக் கூடாது.
அனைத்துத் தோழர்களும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுள்ள
D.குழந்தைநாதன்
மாவட்டச்செயலர்