திரு V.ராஜு Sr DDG , எர்ணாகுளம் (முன்னாள் CGM தமிழ்நாடு circle) அவர்கள் 1.4.2020 அன்று இரவு 10.30 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணமடைந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.31.03.2020 பணியில் இருந்து ஓய்வு பெற்றார்கள். பழகுவதற்கு இனிமையான மனிதர். மனிதாபிமானம் மிக்க நல்ல அதிகாரி. நெருக்கடியான காலகட்டத்தில் தலைமைப் பொது மேலாளராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றியவர். திருநெல்வேலி, திருச்சி,காரைக்குடி, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் பணியாற்றியவர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது மறைவிற்கு அஞ்சலியையும், அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கு கடலூர் மாவட்ட சங்கம் தனது ஆறுதலையும் பதிவு செய்கிறது. குழந்தை நாதன், மாவட்டச்செயலர், NFTE-BSNL.
No comments:
Post a Comment