.

Wednesday, May 6, 2020

தலித் எழில்மலை மறைந்தார்
தலித் எழில்மலை 1998- 99 இல் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் சிதம்பரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வாஜ்பாய் பிரதமராக இருந்த மந்திரிசபையில் தனி அந்தஸ்து சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். பின்னர் 2001 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திருச்சி பொதுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடலூர் மாவட்ட தொலைத்தொடர்பு  ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர்  இருந்த காலத்தில் கடலூர் சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையம் மற்றும் நெய்வேலி டவுன்ஷிப் தொலைபேசி நிலையம் ஆகியவற்றை இவர் திறந்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று தனது 74ஆவது வயதில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். கடலூர் மாவட்டம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமையுடன்
குழந்தை நாதன் 
மாவட்ட செயலர் 
கடலூர்

No comments:

Post a Comment