.

Saturday, May 2, 2020

மே தின கொடியேற்றம்  


கடலூர் பொது மேலாளர் அலுவலகம் 


           நமது கடலூர் பொது மேலாளர் அலுவலகத்தில்  NFTE  சங்க கொடியினை  மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் R.பன்னீர்செல்வம்   ஏற்றி வைத்து மே தின வாழ்த்துக்களை தெரிவித்தார். அதே போல் பொது மேலாளர் அலுவலக்த்திலிருந்த TMTCLU சங்க கொடியினை மாவட்டச் செயலர் தோழர் A.S.குருபிரசாத் ஏற்றி வைத்தார்.  TRA அலுவலக்த்தில் உள்ள நமது NFTE  சங்க கொடியினை தோழர் K.மகேஷ்வரன் ஏற்றி வைத்தார். மற்றும் நமது தொலைபேசி நிலையத்தில்  தோழர் K.சுப்புரயலு அவர்கள் மே தின கொடியினை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


       மேற்கண்ட மே தின கொடியேற்ற நிகழ்வு  நமது  மாவட்டச் செயலர் தோழர் D.குழ்ந்தைநாதன் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.   தோழர் S.சகாயசெல்வன், தோழர் M.S.குமார், தோழர் R.சுப்ரமணியன், தோழர் T.கலைச் செல்வன், தோழர் M.செல்வகுமார், தோழர் வீரமணி, தோழர் வெங்கடேசன், தோழியர் S.சுகந்தி உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றி கலந்த  செவ்வணக்கம்.
 










சிதம்பரம்

   சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் தோழர்.A.தமிழ்வேந்தன் அவர்கள் சம்மேளன கொடியை ஏற்றினார்.விழாவில் கலந்துகொண்ட தோழர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.தோழர் இரா.ஸ்ரீதர் மேனாள் மாவட்ட செயலர் அவர்கள் கலந்துக்கொண்டார்கள். அதனை தொடர்ந்து இரண்டாம் முறையாக விடுபட்ட ஒப்பந்த ஊழியர்கள் 7 பேருக்கு ரூ.1000 பெருமானமுள்ள உதவி பொருள்கள் வழங்கப்பட்டது. மற்றும் ஏற்கனவே அங்கு பணி செய்த ஒப்பந்த ஊழியர்களுக்கு  அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவை  சங்க வேறுபாடின்றி வழங்கப்பட்டது.
குறிப்பு : விழாவில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.





உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும் 11 ஒப்பந்த ஊழியர்களுக்கு அந்த கிளைச் சங்கத்தின் சார்பில் அரிசி 10 கிலோ, மளிகைப் பொருட்கள் கொடுக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் நமது மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் K.அம்பாயிரம் இம்மாதம் பணி ஓய்வு பெறுவதனை முன்னிட்டு சங்க வேறுபாடின்றி கூடுதலாக காய்கறி முதற்கொண்டு தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்தார். தோழருக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்





விருத்தாசலம்

இன்று காலை விருத்தாசலம் தொலைபேசி நிலையத்தில் தோழர் B.கிருஷ்ணமூர்த்தி கிளைச் செயலர் தலைமையில் நமது சங்க கொடியினை ஏற்றி செவ்வணக்கம் செலுத்தினார்கள். இந்த மே தினத்தில் விருத்தாசலம் தொலைபேசி நிலையத்தில் பணி புரியும் 10 ஒப்பந்த ஊழியர்களூக்கு அரிசி 10 கிலோ, மளிகைப் பொருட்கள், காய்கறிகள்  அடங்கியவற்றினை கொடுக்கப்பட்டது. முன் நின்ற அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றி...



விழுப்புரம்




நெய்வேலி

திண்டிவனம்


செஞ்சி

கள்ளக்குறிச்சி






No comments:

Post a Comment