.

Monday, June 15, 2020

தோழர்களே வணக்கம்.
         13.6.2020 zoom app ன் வழியாக  மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் 3.15 க்கு ஆரம்பித்து 8.15 மணி வரை நடைபெற்றது. மாநிலத் தலைவர் தோழர் காமராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்  தோழர்கள் மாவட்டச் செயலர்கள், மாநிலச் சங்க நிர்வாகிகள்  என 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் தோழர் சுப்பராயன் அவர்களும், மூத்த தோழர் சென்னகேசவன் அவர்களும், அகில இந்திய துணைத் தலைவர் தோழர் பழனியப்பன் அவர்களும், அகில இந்திய சிறப்பு அழைப்பாளர் தோழர் செம்மல் அமுதம் அவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள்  மிக ஆழமாக விவாதிக்கப்பட்டது.

மாநிலச் செயற்குழு தீர்மானங்கள்:

குறிப்பாக இன்றைக்கு    outsourcing முறையால் வந்திருக்கக்கூடிய பிரச்சினைகள்,  BB,தொலைபேசி பழுது நீக்கத்தில் நிலவுகிற சுணக்கம், கவனிப்பாரற்றுக் கிடக்கும் நிலைமையில் லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் சரண்டர் அதிகமாக நடைபெறுவதை தடுப்பதற்கு மாவட்ட தலைநகரங்களில் கிளஸ்டர் இன்சார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதன்மீது உரிய கவனம் செலுத்த வேண்டும்.  FTTH இன்சார்ஜ் நிர்வாகத் தரப்பில் நியமிக்க வேண்டும். அசீம் மற்றும் அலுவலக எண்கள் கிளஸ்டர் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது தவறு என சுட்டிக்காட்டி அதற்காகும் செலவை குறைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

கஸ்டமர் சர்வீஸ் சென்டர் டெண்டர் விடப்பட்ட நிலையில் 179 ல் எத்தனை CSC டெண்டர் இறுதி செய்யப்படுகிறதோ அதுபோக மீதம் இருக்கிற  கஸ்டமர் சர்வீஸ் சென்டர் பற்றி நாம் மாநில நிர்வாகத்திடம் பேசி அதற்கான முடிவை எட்ட வேண்டும். 

3.ATT, TT redeployment செய்யும் போது மாவட்ட சங்கத்தோடு கலந்தாலோசித்து முடிவு எட்டப்பட வேண்டும் என நாம் உறுதி செய்து இருக்கிறோம். மாவட்ட செயலர்கள் கவனத்தில் கொண்டு அதில் நமது தோழர்களுக்கு தேவையான விஷயங்களை மாவட்ட நிர்வாகத்தோடு பேசி  இறுதி செய்யவும். 

FTTH இணைப்புகள் கொடுப்பதில் நிலவுகிற ஊழல் மற்றும் குளறுபடிகள் பற்றி கவலையோடு விவாதிக்கப்பட்டது.  குறிப்பாக கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இது குறித்து விஜிலன்ஸ் புகார் கொடுக்க வேண்டும் என கடந்த கூட்டத்தில் 13.05.2020 ல் முடிவு செய்தோம். இதன் மீது தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிற போராட்டம் குறித்து மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.மாநில நிர்வாகம் இதில் முறையாக தலையிட்டு பிரச்சனையை தீர்க்க வலியுறுத்துவோம்.இதில் நிலவுகிற விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.

திருநெல்வேலி பொதுமேலாளர் அலுவலகம் முற்றிலுமாக வாடகைக்கு விடப்படும் என்கிற முடிவை நாம் ஏற்பதற்கில்லை. மாவட்டச்சங்கங்களோடு கலந்து ஆலோசித்து முடிவை எட்ட வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டது. திருநெல்வேலி AUAB சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்து பேச முடிவெடுக்கப்பட்டது. மாநில நிர்வாகத்திடம் இங்கு அலுவலகம் இயங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவோம்.

மதுரை அவுட்சோர்சிங் ஏஜென்சி ஒன்று நமது அலுவலக முகவரியை கொடுத்து இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம். அதன் மீது உடனடியாக மாவட்ட சங்கம் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்து அதனுடைய நகலை மாநில சங்கத்திற்கு அனுப்ப வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.     

தற்போது விருப்ப ஓய்வில் சென்றவர்களின் PPO வில் அவர்களின் TSM period க்கான entry ல் குளறுபடிகள் இருப்பதாக அறிகிறோம். அது CCA மட்டத்தில் பேசி சரி செய்யப்படும்.

சொசைட்டி பிரச்சினைக்கு இப்பொழுது NFTE, BSNLEU, AIBSNLEA, SNEA இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாவட்டங்களில் கையெழுத்து இயக்கத்தை விரைவுபடுத்தி அதன் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்துவோம்.

Provisional pension பெறுகிறவர்களின் leave encashment payment பற்றி மாநில நிர்வாகத்திடம் பேசி இருக்கிறோம். 20.06.2020 க்குப் பிறகு அதன் மீதான தீர்வை எட்ட முடியும் என நம்புகிறோம். 

தஞ்சை சுந்தர்ராஜன் விருப்ப ஓய்வில் சென்ற அவரின் leave encashment மாநில மட்டத்தில் பேசியுள்ளோம். மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்தோடு பேசி அதை விரைவுபடுத்த கோரியுள்ளோம்.

மாவட்டத்தில் உடனடியாக works committee members பட்டியலை மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்திட வேண்டுகிறோம்.

சங்க உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்துமாறு வேண்டுகிறோம்.

ஒலிக்கதிர் நன்கொடை மற்றும் மாநில மாநாட்டிற்கான நன்கொடையை விருப்ப ஓய்வில் சென்றவர்களிடம் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.      

தோழமையுடன்
D.குழந்தைநாதன்
மாவட்டச் செயலர், கடலூர்.

No comments:

Post a Comment