மாவட்டத்தின் வருவாயைப் பாதிக்கும் சுமையாக
நாள் தோறும் அதிகரிக்கும் தொலைபேசி பழுதுகள், பிராட்பேண்ட் பழுதுகள், FTTH குளறுபடிகள்,
FTTH புது வேட்டைக் காடாகி, FTTH இணைப்பு கேட்பவர்களுக்கு முறையான சீனியாரிட்டி லிஸ்ட்
கிடையாது, செல் டவர்கள் பழுது, டீசல் இல்லாது சேவை முடக்கம், சிக்னல் கிடைக்காதது என
இப்படிக் கவனிக்க வேண்டியவை எவ்வளவோ இருக்கு…
ஆனால்,
பொழுது விடிந்தால் எந்த ஒப்பந்த ஊழியர்களை வேலையை விட்டு விரட்டலாம் என்பதே நிர்வாகத்தின்
ஓயாத வேலையா?
வாடிக்கையாளர் சேவை மையம் உட்பட
BSNLலில் 8 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய கோரி,
கோவிட் ஊரடங்கு பாதிப்பு காலத்தில் பணிநீக்கம்
கூடாது, சம்பள வெட்டு கூடாது என்ற மாண்புமிகு பாரதப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அரசின்
வழிகாட்டலை மீறிய சட்ட விரோத வேலை நீக்கத்தை ரத்து செய்ய வற்புறுத்தி
BSNL கடலூர்
மாவட்டப் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு
ஜூலை 28 செவ்வாய்
அன்று
ஒரு
நாள் தர்ணா போராட்டம்
அநீதி களைய, நியாயம் நிலைநாட்டப்பட அணி திரள்வீர்!
தோழமையுடன்
BSNLEU NFTE-BSNL
TMTCLU NFTCL TNTCWU
மாவட்டச் சங்கங்கள்
No comments:
Post a Comment