.

Tuesday, October 13, 2020

ஒற்றுமையின் பலம்

தோழர்களே அனைவருக்கும் வணக்கம்,

         நமது கடலூர் மாவட்ட நிர்வாகம் நமது மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை வரும் அக்டோபர்-16ந் தேதி முதல் நிறுத்தப்படுவதாக    முடிவெடுத்து அதனை ஒப்பந்தகாராரின் வாயிலாக அமுல்படுத்திட  நடவடிக்கை எடுத்து வந்தது. இதனை அறிந்த நமது  NFTE-BSNLEU ஒன்று சேர்ந்து ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர்  .

        நமது NFTE, BSNLEU, மற்றும் TNTCWU, TMTCLU, NFTCL  உள்ளிட்ட அனைத்து   மாவட்ட செயலர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்திட முடிவு செய்து வரும் 14-10-2020 முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்குமாறு அறைகூவல் விடுத்தது. அந்த அறைகூவலுக்கிணங்க  14 முதல் தொடர் உன்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக் மாவட்ட நிர்வாகத்திற்கு அனைத்து சங்கங்களின் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.

        அதனை தொடர்ந்து நமது NFTE, BSNLEU , TMTCLU, TNCWU, NFTCL  உள்ளிட்ட  மாவட்ட சங்க பொறுப்பாளர்களை அழைத்து இன்று மதியம்  மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.

        அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சில உறுதிமொழி கொடுத்தது அதில் வரும் 31.10.2020 எந்த ஒரு ஒப்பந்த ஊழியர்களையும் வேலை விட்டு நீக்குவதில்லை என்றும்... மாவட்டம் முழுவதும் EOI பிரிவில் சில ஒப்பந்த ஊழியர்களை கூடுதலாக நியமிப்பதற்கு உறுதிமொழி கொடுத்துள்ளது .

        மேற் சொன்ன சில வாக்குறுதியின் அடிப்படையில்  நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக  NFTE, BSNLEU , TMTCLU, TNTCWU, NFTCL உள்ளிட்ட அனைத்து மாவட்ட செயலர்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

        ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதனை மெய்பித்துள்ளோம்...  போராட்ட அறைகூவலுக்கு தயாராக  இருந்த அனைத்து  தொழிற்சங்க தலைவர்களுக்கும், ஒப்பந்த ஊழியர்களுக்கும் நன்றி,,,, நன்றி..


தோழமையுடன்

NFTE, BSNLEU , TMTCLU, TNTCWU, NFTCL

மாவட்ட செயலர்கள், கடலூர்.

No comments:

Post a Comment