வாழ்த்தி
அனுப்புவோம்
முந்தைய தஞ்சை ஜில்லாவின்
சீர்காழி இவரின் சொந்த ஊர். இந் நகரின் சீர்காழி பெருமைமிகு
முதலியார்
உயர் நிலைப்பள்ளியிலும்
சிதம்பரம்
அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலும் பயின்று தொலைத் பேசித்துறையில்
கடலூர் நகரில் நாற்பதாண்டுகள்
பணியாற்றி
ஓய்வுபெற்றவர்.
தமிழகம் அறிந்த தொலைபேசி தொழிற்சங்க
ஆசான் ஜகன் அவர்களுக்கு
மிகநெருக்கமானவர்
அண்மையில்
மறைந்த தொலைபேசி ஊழியர் தலைவர் கடலூர் ரகு நாதன்.அவர்களோடு மாவட்டச்ங்கத்தில் பல பொறுப்புகளில் பணியாற்றிய பெருமை இவருக்குண்டு..
தொழிற்சங்க இயக்கங்களில் புதிய கோஷங்களை படைப்பதிலும்,
அதனை உணர்ச்சிப்பெருக்கோடு
வெளிப்படுத்துவதிலும்
தனித்திறம்
பெற்றவர். மாநாட்டு அமர்வின்போது தீர்மானங்களை வடிவமைப்பதில்,
ஆண்டறிக்கையை
செழுமைப்படுத்துவதில்
முத்திரை பதித்தவர்.
கடலூர் மாவட்ட கலை இலக்கியப்பெருமன்றம் சிறப்பாக செயல்பட்ட
ஒரு பத்தாண்டுகளில் பல முக்கிய பொறுப்புகளை எடுத்துச்செயலாற்றியவர். கடலூர் சிரில் நினைவு அறக்கட்டளை ஆண்டுதோறும் நிகழ்த்தும் தமிழ் விழாக்களில்
முன்வரிசையில் நின்று பணியாற்றுபவர்.
கடலூர் மாவட்ட தொலைபேசி ஊழியர் சங்க இதழான தொலைபேசித்
தோழனின் வளர்ச்சிக்குக்
கடுமையாக உழைத்தவர். கடலூர்
தொலைபேசி மாவட்ட சங்கத்து அனைத்து எழுத்துப்
பணிகளுக்கும் தோழர் நீலகண்டனின் பங்களிப்பு மகத்தானது.
கடலூர் நகரில் இயங்குகின்ற
பல்வேறு தமிழ் இலக்கிய அமைப்புக்களிலும்
நெருக்கமான
தொடர்புடையவர். தினமணியிலும் ஜன சக்தியிலும் கருத்தாழமிக்க கட்டுரைகளை த்தமிழில் மொழிபெயர்த்து மொழிப்பணியும் ஆற்றிவருகிறார் என்பதனைப் பெருமையோடு
குறிப்பிடவேண்டும்.
தோழர் நீலகண்டன். தோழரின் துணைவியார் பானுமதி தமிழாசிரியை. அரசுப்பள்ளியிலிருந்து
அண்மையில்
ஓய்வுபெற்றவர். இலக்கிய ஈடுபாட்டோடு
தமிழ்ப்பற்றும்
மிக்கவர். இத்தம்பதியினரின் மகளார் பாரதி வாலண்டினா
மருத்துவ முதுகலை (MS)
சென்னையில்
ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில்
பயில்கிறார். மகளாருக்கு துணையாக உதவும்பொருட்டுத் தோழர் நீலகண்டன்
கடலூரிலிருந்து
சென்னைக்கு
த்தன் குடும்பத்தை
மாற்றுகிறார்.
இதுகாரும்
கடலூர் தொலைபேசி மாவட்டச்சங்கத்துக்குப்
பணி ஓய்வுக்குப்பின்னரும்
அவர் ஆற்றிய சேவைகள் எத்தனை எத்தனையோ. அவற்றைப்பெருமையோடு எண்ணி எண்ணி மகிழ்கிறோம். அவருக்கு பாசத்தோடு
வாழ்த்துச்
சொல்லி விடைகொடுத்து
அனுப்பி
வைக்கிறோம். சென்னையிலிருந்துமே அவர் எங்கள் தொழிற்சங்கப்பணி சிறக்க என்றும் உதவுவார் என்பதில் நிறைவு.
தோழர்
நீலகண்டன்
என்றென்றும்
கடலூர்
மாவட்டத்தொலைபேசி
ஊழியர்சங்கத்தின்
தோழமை
உறவே.
வணங்குகிறோம்
வாழ்த்துகிறோம்
சிறக்கட்டும்
உமது பணி.
-கடலூர்
NFTE-BSNL மாவட்டச்சங்கம்
No comments:
Post a Comment