.

Sunday, July 18, 2021

ஒரு குழந்தையின் கோடுகள்
மறைந்த தோழர் ரகு அவர்கள் மதம், அரசியல், சமூகம் சார்ந்த கட்டுரைகளை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இப்பதிவுகள் பலரது பாராட்டுகளை பெற்றது. கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் அக்கட்டுரைகளை தொகுத்து நூல் வடிவில் வெளியிட உள்ளோம். இந்நூலைப் பெற தோழர்கள் கடலூர் மேனாள் மாவட்ட செயலாளர் தோழர் இரா.ஸ்ரீதர் ( Cell: 94432 12300) அவர்களிடம் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும். இப்புத்தகம் குறைந்த அளவிலேயே அச்சிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் விலை ரூபாய் 100.

புத்தகம் பெற விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்கவும்.

A.S.GURUPRASAATH ,
DISTRICT TREASURER,
NFTE-BSNL
 CUDDALORE.

Bank Details:
Bank of Baroda
Account No:
12220100002591
IFSC CODE:
BARB0CUDDAL
(fifth character is zero)

Google Pay 9442343899

தோழமையுள்ள
D.குழந்தை நாதன்
மாவட்ட செயலர்
*NFTE BSNL*
*கடலூர்*


Saturday, July 17, 2021

மாநில கவுன்சில் கூட்டம்-சென்னை







புதிய  CGM பொறுபேற்று  குறைந்த நாட்களில் 25 வது மாநில  குழு கூட்டத்தினை  ஏற்பாடு செய்தார்.. பொறுப்பேற்று சிறிது நாட்களில் நடைபெற்ற  முதல் கூட்டம்   புதிய தலைமை பொது மேலாளர் தலைமையில்  நடைபெற்றது.

                 கூட்டத்திற்கு நமது மேனாள் மாவட்ட செயலாளரும்,  மாநில WELFARE கமிட்டி உறுப்பினரும்... மாவட்ட WORKS கமிட்டி உறுப்பினரும், கடலூர் மாவட்டக் குழு       ( LOCAL COUNCIL COMMITTEE) கூட்டத்தின் தலைவரும், மாநிலக் குழு உறுப்பினருமாகிய அருமைத் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்கள் சென்னையில் CIRCLE COUNCIL கூட்டத்தில் கலந்து  கொண்டார்...

CIRCLE கவுன்சில் கூட்டத்திற்கு ஊழியர் தரப்பு தலைவரும், NFTE   மாநில செயலருமாகிய தோழர் K. நடராஜன் மாநிலக் குழு கூட்டத்தில் சேவை மேம்படுத்துதல் மற்றும் ஊழியர் தரப்பு விவாத குறிப்புகளை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். மேலும் நமது  மாநில உதவி செயலர் G.S. முரளிதரன்  ஆகியோர் கலந்து கொண்டனர்..

நிர்வாக தரப்பில் முதன்மை பொது மேலாளர் மற்றும் சென்னை  CGM அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்..  பிற மாவட்டத்தில் இருக்கும் GM, DGM ஆகியோர் WEBEX மூலமாக கலந்து கொண்டனர்...

             மேலும் சேலம் மாவட்ட செயலர் தோழர் C. பாலகுமார், வேலூர்  தோழர் லோகநாதன், காரைக்குடி மாவட்ட செயலர் தோழர் மாரி ஆகியோர் WEBEX ( இணைய வழியாகமூலமாக கலந்து கொண்டனர். இணைய வழியில் பல இடர்பாடுகள் ஏற்பட்டதனால் அவர்களால் சரியாக கலந்துரையாடலில் கவனம் செலுத்த முடியாமல்  போனது வருந்தத்தக்கது.

தோழர் இரா.ஸ்ரீதர் விவாதத்தில் ஊழியர் தரப்பு  நியாயங்களை அழகிய தமிழில்  எடுத்துரைத்து குறைகளை தீர்வு காண வழி வகை செய்தார்..

                   நமது மாவட்டத்தில்  வாடிக்கையாளர் விரும்பும் FTTH சேவையை விரைந்து கிடைத்திட அதிகப்படியான FSPக்களை உருவாக்கிட மாவட்ட நிர்வாகத்தினை தயார்படுத்திட  உரிய நடவடிக்கை எடுத்திட அழுத்தம் கொடுக்கப்பட்டது.

           ஊழியர் குடியிருப்பில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்வு கண்டிட உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பதிவு செய்தார்...

             மற்றும் CLUSTER, FTTH சேவையினை வழங்கிட MULTI VENDOR முறையினை கொண்டு வர வேண்டும் என பதிவு செய்தார்.. அதுவும் ONLY BSNL NET PROVIDER ஆக இருத்தல் வேண்டும்.. இதனை கண்காணிக்க NODEL OFFICER நியமிக்க வேண்டும்  என வலியுறுத்தப்பட்டது.

              E-office மூலம்  staff, வாடிக்கையாளர் குறைகளை களைந்திட அதிவேக   ftth சேவையினை AGM அளவில்  வழங்கிட  வலியுறுத்தப்பட்டது..

                மேலும் ஊழியர்களின் நலன் காத்திட மாநில அரசாங்கத்தினால் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளிடம்   மாவட்ட நிர்வாகம் பேசி அனுமதி வாங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். குறிப்பாக புதுச்சேரி SSA வில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் கடலூர் மாவட்ட ஊழியர்களுக்கும் அனுமதி வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

           ஊழியர்களின் SERVICE புத்தகத்தினை நேரிடையாக காண்பித்து அதிலுள்ள பிரச்சனைகளை சரி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மத்திய நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட  சங்கங்களுடன்  மாவட்டத்தின் பொதுமேலாளர்.. மற்றும் துணை பொதுமேலாளருடன் முறைப்படி கூட்டங்களை நடத்திட  வேண்டும்... அதில் வலியுறுத்தப்படும் விவாதங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

தொழிற்சங்க  பணிகள் மட்டுமல்லாது,  நிர்வாகப் பணிகளிலும், ஊழியர் தரப்பு பிரச்சினைகளில் அதிக அக்கறை கொண்டு சென்னையில் நடைபெற்ற மாநில குழு கூட்டத்திற்கு நேரிடையாக சென்று பங்கேற்றார்.

மாநிலக் குழு கூட்டத்தில் சிறப்பாக   செயல்பட்ட நமது அருமை தோழர் இரா.ஸ்ரீதர் அவர்களுக்கு  மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

 

                                                                                     தோழமையுடன்

                                                                                                            D. குழந்தைநாதன்

                                                                                                                             மாவட்ட செயலர் NFTE

                                                                                                                                                                   கடலூர்.


BSNL பணியில் உள்ள ஊழியர்களுக்காக... அவர்களுடைய பங்களிப்பில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் துவங்குவது பற்றி அமைக்கப்பட்ட குழுக்கூட்டம் 22/07/2021 அன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. நியூ இந்தியா காப்பீட்டுக்கழக முகவர்கள்... நிர்வாக அதிகாரிகள்... மற்றும் சங்கத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

Thursday, July 8, 2021



தோழர் ஞானையாவின்
 நினைவைப் போற்றுவோம்.
நம்முடைய மேனாள் சம்மேளனப் பொதுச் செயலாளரும், சிறந்த மார்க்சிய அறிஞரும், பல நூறு தோழர்களுக்கு ஆதர்ச வழிகாட்டியாய் வாழ்ந்தவரும் தோழர்களின் பெரும் அன்பிற்குரிய நமது ஞானத்தந்தையின் தோழர் ஞானையா அவர்களின் நினைவு நாள் இன்று. 
கடலூரில் நடைபெற்ற கருத்தரங்கில் தோழர் ஞானையாவோடு பழகிய மூத்த தோழர் கடலூர் ரகு அவர்கள் ஆற்றிய உரையின் மூலம் தோழர் ஞானையா அவர்களை நினைவு கொள்வோம்.
 ஞானையா இமயம் போன்ற அறிஞர். இவ்வளவு நூல்கள் எழுத அவர் எவ்வளவு படித்திருக்க வேண்டும்? படித்ததை விரித்துரைத்தார். தமிழ் மாநிலத்திற்குத் தபால் தந்தி அளித்த பெரும் கொடை தோழர் ஞானையா. மேலும் ஞானையா போலவே ஜெகன், பிரேமநாதன் என எத்தனைத் தலைவர்கள் நமக்குக் கிடைத்த பெரும் பேறு. நான் அவர் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லப் போவதில்லை. சில அம்சங்களை விளக்கினாலே போதும்.
 1963ல் நான் பணியில் சேரும்போது நமக்கு 3 நாட்கள் மட்டுமே விடுமுறை. எனவே சொந்தப் பணிகளைச் செய்ய வேண்டி டூட்டி எக்ஜேஞ்ச் செய்யத் தடை இருந்தது. அதைப் போராடி உடைத்தோம். 1947ல் விடுதலை அடைந்த பிறகு நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டது, தொழிலாளர்கள் வாழ்வில் இல்லை. தபால் தந்தியில் 9 சங்கங்கள். அதில் கேடர்களுக்கு இடையேதான் எத்தனை மோதல்கள். மெக்கானிக்களுக்கு 9 மாதம், ஆப்பரேட்டர்களுக்கு 2 மாதம் பயிற்சி. பயிற்சி முடித்த பிறகுதான் இன்கிரிமெண்ட். எனவே மெக்கானிக்குகள் சம்பளவிகிதத்தை மாற்றக் கோரிக்கை. தந்திப்பிரிவில் டெலிகிராபிஸ்ட், தந்தி கிளார்க்குகள் இடையே மோதல். ஆர்எம்எஸ் வாழ்வு அழுக்கு தபால் பைகளோடு முடிந்தது. தோழர் ஞானையா பொறுப்புக்கு வந்தபோது இதுதான் ஊழியர்கள் நிலை. 
 எவ்வளவு தலமட்டப் போராட்டங்கள், விதிப்படி வேலை. ஓவர்சீஸ் சம்பளவிகிதம் கேட்டு டெலிகிராபிஸ்ட்கள் 83 நாட்கள் விதிப்படி வேலை போராட்டம் செய்தனர். சம்மேளனம் அந்தப் பிரச்சனையை அட்வான்ஸ் இன்கிரிமெண்ட் பெற்று முடித்து வைத்தது. இப்படி அனைத்துப் பிரிவினர் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டன. அதனால்தான் தோழர் ஞானையா தனது காலம் விறுவிறுப்பாக இருந்தது என்றும் பொறுப்பிலிருந்து விடுபடும்போது அதில் சோர்வு இல்லை என்றும் கூறினார். 1960ல் ஐந்து நாள் வேலைநிறுத்தம். அதில் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள பிரச்சனைகள் தீர்ந்தன.
 1966ல் கூட்டு ஆலோசனைக் குழு அவருடைய சாதனை. ஜெசிஎம் வந்தபோது ‘போராட்ட உணர்வு மழுங்கடிக்கப்படும்’ என சில வீரர்கள் விமர்சித்தனர். ஆனால் ஜெசிஎம் வந்த ஒன்னரை ஆண்டுகளில் 1968ல் மத்திய அரசு ஊழியர்களின் மாபெரும் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இந்தியில் ஒரு பாடல் உண்டு, ‘வீணை நரம்பை அதிகம் தளர்த்தாதே, அதிகமாக முறுக்கவும் செய்தாதே’ என்று. அப்போதுதான் நல்ல இசை பிறக்கும், அதுபோலத்தான் போராட்டம். போராட்டம் என்பது போலீஸ் கவாத்து பயிற்சி அல்ல, நாள்தோறும் செய்ய. தோழர் குப்தா ‘ஒருசிலர் தாவிப் பாய்வதல்ல போராட்டம், ஒன்றாய் ஓரடி முன்னே வைப்பது’ என்றார். (அப்படித்தான் விவசாயிகள் 9முறை பேச்சுவார்த்தை வெற்றி அடையா விட்டாலும், 10வது முறையும் பேச்சு வார்த்தையை நிராகரிக்கவில்லை)
 இத்தகைய தலைவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது பெரும் பேறு. அவரிடம் நாம் ஒதுங்கி மரியாதையாகக் கைகட்டி நிற்க வேண்டியதில்லை, அப்படிப்பட்டத் தலைவர்களை இங்கே நான் பார்த்திருக்கிறேன். ஞானையாவிடம் நாம் உரிமை எடுத்துக் கொள்ளலாம், அவ்வளவு தோழமை. தோழர் குப்தாவும் இங்கே பேச வரும்போது சாதாரணத் தோழர்களிடம் தோளில் கைபோட்டு அணைத்துத்தான் பேசுவார். மொழி அவர்களுக்கிடையே உணர்வுப் பரிமாற்றத்திற்குத் தடையாய் இருந்ததில்லை.
 எஸ்சி ஜெயின் போன்ற ஜாம்பவான்கள் கேபினட் செயலராக இருந்தபோது – நேரு இந்திரா போன்ற தலைவர்கள் இருந்தபோதே நாம் போராடி இருக்கிறோம் -- நமது என்எப்டிஇ பேரியக்கத்தை அவர்களால் உடைக்க முடியவில்லை. காரணம் எவ்வளவு பெரும் தலைவர்களை நாம் பெற்றிருந்தோம். இப்படிப்பட்ட தியாகத் தலைவர்களை மறக்காமல் நினைந்து போற்றுகின்ற இயக்கத்தை ஒருவராலும் ஒருபோதும் அழிக்க முடியாது.

Monday, July 5, 2021

*FTTH இணைப்பிற்கு சலுகை*


FTTH இணைப்பிற்கு  BSNL பணிபுரியும் அதிகாரிகள்/ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு 40% சலுகை வழங்கப்பட்டு உத்தரவு வெளிவந்துள்ளது.

*#Plan 599 க்கு மேல் உள்ள பிளான்களுக்கு இது பொருந்தும்.*

*உதாரணமாக plan 599க்கு ரூ.240 சலுகை(அதிகபட்சமாக ரூபாய் 300 சலுகை) வழங்கப்படும்*

*ஏற்கனவே FTTH இணைப்பு பெற்றிருப்பவர்கள் இச் சலுகையில் மாற்றிக் கொள்ளலாம்*

*புதியதாக இணைப்பு பெறுபவர்கள் ஏற்கனவே உள்ள தரைவழி தொலைபேசி (land line) இணைப்பை FTTHக்கு மாற்றிக்கொள்ளலாம்*

*ஏற்கனவே FTTH இணைப்பில் 10% சலுகை பெறுபவர்களுக்கும் இது பொருந்தும்.*

*இச்சலுகை பிளான் சார்ஜுக்கு மட்டுமே (மோடம், இன்ஸ்டாலேஷன் சார்ஜ் ஆகியவைகள் சாதாரண வாடிக்கையாளர்களுக்கு உள்ளதுபோல்)*

*ஓய்வுபெற்று இறந்தவர்களின் மனைவி/கணவர்(Spouse) ஆகியோர்களுக்கும் இச் சலுகை கிடையாது. (பெற முயற்சிப்போம்)*

*இந்த FTTH சலுகை இணைப்பு வாய்ப்பு உள்ள இடங்களில் மட்டுமே வழங்கப்படும்*

*இச் சலுகையை பெற தொடர்ந்து முயற்சித்து உத்தரவு வெளிவர உதவிய மத்திய nftebsnl சங்கத்திற்கு நன்றிகள் பல*

இவ்வாய்ப்பை அனைவரும் பெறுவோம்!

*தோழமையுடன்*
*D.குழந்தை நாதன்*
*மாவட்ட செயலர்*
*NFTE BSNL*
*கடலூர்*