.
Monday, May 30, 2022
Saturday, May 28, 2022
Tuesday, May 24, 2022
கள்ளக்குறிச்சி கிளை மாநாடு
கள்ளக்குறிச்சி கிளையின்
8வது மாநாடு தோழர் K.செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது. சம்மேளன கொடியினை தோழர் K.பாண்டியன்
ஏற்றி வைத்தார். மாநில துணைத்தலைவர் தோழர் A. சகாயசெல்வன் துவக்க உரை ஆற்றினார். கிளைச்செயலர்
தோழர் R.ராஜேந்திரன் ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தார். தோழர்கள் R.செல்வம்
பொதுச்செயலர் TMTCLU, மாநில உதவிச்செயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி, மாவட்ட
செயலர் தோழர் D.குழந்தை நாதன், மாவட்ட துணைத்தலைவர் தோழர் P.அழகிரி, விழுப்புரம் கிளைச்செயலர்
தோழர் D.சரவணக்குமார் மற்றும் மாவட்ட உதவிச்செயலர் தோழர் S.மணி ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர். மாநில செயலர் தோழர் K.நடராஜன் சிறப்புரை ஆற்றினார்.
தோழர் K.ராமன் நன்றியுரை ஆற்றினார். புதிய நிர்வாகிகளாக தோழர்கள் K.ராமன்,
N.ராஜாராம், L.ஏழுமலை முறையே தலைவர், செயலர், பொருளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
D.குழந்தைநாதன்
மாவட்ட செயலர்
Wednesday, May 11, 2022
தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்
மாவட்டச் சங்கம், கடலூர்-01.
மாவட்ட செயற்குழு
மேலும் கருத்துரையில் மாவட்டத்திலிருந்து வருகை புரிந்த
மாவட்ட சங்க , கிளைச் சங்க நிர்வாகிகள் தங்களது பகுதியில் உள்ள பிரச்சனைகளை குறித்து
பேசினார்கள். குறிப்பாக ஒப்பந்த ஊழியர்களின் சம்பள நிலுவை, கொடுக்கப்பட வேண்டிய ஊதியம்,
பணித் தன்மை குறித்தும் பேசினார்கள், அதே போல் நிரந்திர ஊழியர்களின் பணி பாதுகாப்பு
, சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைத்திற்கும் மாவட்ட செயலர் பதிலளித்தார்.
இறுதியாக நமது சம்மேளனச் செயலர் தோழர் P.காமராஜ் மைசூரில் நடைபெறவுள்ள நேரடி நியமனம் பெற்று வேலைக்கு வந்தவர்களுக்கான CONVENTION நமது மத்திய சங்கத்தின் சார்பில் நடைபெறுகிறது , அதில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும் நமது நிர்வாகத்தின் இன்றைய செயல்பாடுகள், CLUSTER maintenance, FTTH, OFC OUTSOURCING, ஊதிய மாற்றம். சங்க அங்கீகார தேர்தல் ஆகியவற்றினை பற்றி மிக தெளிவாக பதிவு செய்தார்.
இறுதியாக மாவட்ட
பொருளாளர் A.S.குருபிரசாத் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.
தோழமையுடன்
NFTE- மாவட்ட சங்கம்,
கடலூர்.