.

Thursday, October 27, 2022




ன்பதாவது பிஎஸ்என்எல் ஊழியர்கள் சரிபார்ப்பு தேர்தல் 12 10 2022 அன்று இந்தியா முழுவதும் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் மிகவும் அமைதியாக  நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் சிறந்தமுறையில் நடைபெற்றது.  

நமது மாவட்டத்தில் 157 ஊழியர்களில் 156 பேர் வாக்களித்தனர். இந்த தேர்தலில் கடலூர் மற்றும் விழுப்புரம் இரு வாக்கு சாவடிகள  மட்டும் செயல்பட்டன.
அனைத்து ஊழியர்களும் தங்களது ஜனநாயக கடமையை  செய்தனர். 2019 விருப்பு  ஓய்வுக்குப் பிறகு நடைபெறுகின்ற தேர்தல் என்பதால் கூடுதலான எதிர்பார்ப்பு இருந்தது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் , ஊழியர் எண்ணிக்கை குறைந்தாலும் , தொழிற்சங்க உணர்வில் எந்த குறைபாடும் இல்லாமல் தோழர்கள் நமது கடமையை செய்தனர்.

நமது நெய்வேலி தோழர் N.ஜெயசீலன் குடும்ப அவசர வேலையின் காரணமாக மும்பை சென்றதால் வாக்களிக்க இயலவில்லை .மிகவும் வேதனைப்பட்டார்.

வாக்குகள் 12 10 2022 அன்று எண்ணப்பட்டன. நமது மாவட்ட செயலாளர் தோழர் D.குழந்தைநாதன் முகவராக செயல் பட்டர்.
வழக்கம்போல் நமது மாவட்டத்தில்  பல வினோதங்கள் நடந்தது. அனைத்து சித்து வேலைகளையும் மீறி மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக தொடர்ந்து திகழ்கின்றோம் .101 (66 சதவீத)வாக்குகளை பெற்று ஊழியர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம்..

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய பிறகும் மாற்று சங்கத்தின் தலைவர் நாங்கள் இந்தியாவில் 55 சதவீத உறுப்பினர்களை பெற்றுள்ளோம். ஆகியால் இந்தியாவில் நாங்கள் ஒரே சங்கம் தான் என்று  கொக்கரித்தார். இது எங்கள் பொதுச்செயலாளர் மைசூரில் மத்திய செயற்குழுவில் சொன்ன சத்திய வாக்கு. (பூஜ்யம் சதவீதம் போல்)
தமிழகத்தில் மாற்று சங்கத்தினர் அதிக உறுப்பினர்களை பெற்றிருந்தாலும் வெற்றி கொள்ள முடியவில்லை .

இன்றைய அரசியல் பொருளாதார சூழ்நிலையை புரிந்து கொண்டு ஒற்றுமையை பலப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் .வீண் பேச்சும் வீராப்பும் எதற்கும் உதவாது . பெரியண்ணன் போக்கை மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கடலூர் தலைமையகத்தில் 15 .10 .2022 அன்று மாநில உதவிச் செயலாளர் தோழர் P.சுந்தரமூர்த்தி தலைமையில் நன்றி அறிவிப்பு கூட்டம் ,பொது மேலாளர் அலுவலக வாயலில் காலையில் நடைபெற்றது.

 நமது மூத்த தோழர் E. விநாயகமூர்த்தி வெற்றிக்குப் பின் உள்ள  கடமைகளை பற்றியும் ,தோழருக்கு நன்றி தெரிவித்தும் ,தோழமை சங்கத்தை வாழ்த்தியும்,நிர்வாக செயல்பாட்டை பாராட்டியும் நல்லதொரு கோஷமிட்டார்.
மூத்த தோழர் S. தமிழ்மணி, மாநில துணைத்தலைவர் A.சகாய செல்வன் ,SEWA இயக்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் J.செந்தில்குமார் மாவட்ட செயலாளர் தோழர் D.குழந்தைநாதன் ஆகியோர் சுருக்கமாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். நிறைவாக தேசிய செயலாளர் தோழர் R.ஸ்ரீதர் நிறைவறை ஆற்றினார் .அவரது உரையில் நமது வருங்கால கடமைகள் பற்றியும் , உடனடி வேலைகளைப் பற்றியும் சுருக்கமாக பதிவு செய்தார் .இறுதியாக மாவட்ட பொருளாளர் தோழர் A S. குரு பிரசாத் நன்றியுடன் கூட்டம் நிறைவு பெற்றது.






No comments:

Post a Comment