.

Tuesday, July 30, 2024

மாநில செயலாளர் தோழர்  K.நடராஜன் பணி ஓய்வு பாராட்டு விழா





மாநிலச் செயலாளர் தோழர்  K.நடராஜன் பணி ஓய்வு  பாராட்டு விழா 30 7 2024 நண்பகல் மதியம் 2 மணி 30 நிமிடத்திற்கு மாநிலத் தலைவர் தோழர் G.S. முரளிதரன் தலைமையில் தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேசிய செயலாளர் தோழர் ஸ்ரீதர் விழாவில் பங்கு பெற்ற அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். 

தோழர் நடராஜன் அவர்களை பாராட்டி குறிப்பாக அவரது எளிமையான வாழ்க்கையை பற்றியும் தோழமை உணர்வுகளையும் மிக அழகாக எடுத்துரைத்தார். ( முழு குறிப்பு முன்பே பதிவு செய்யப்பட்டுள்ளது) அகில இந்திய துணைத் தலைவரும் மாநில பொருளாளரும் ஆகிய தோழர் S. பழனியப்பன் தனக்கே உரிய பாணியில் மிக சுருக்கமாக பாராட்டி துவக்க உரையாற்றினார் .

மாநிலத் தலைவர் தனது தலைமை  உரையில்  எட்டு ஆண்டு காலம் தோழர் நடராஜன் உடன் நெருங்கி பழகி பயணம் செய்த அனுபவத்தை பதிவு செய்தார். பங்குபெற்ற அனைத்து தலைவர்களுக்கும் கையில் கதர் ஆடை கொடுத்து, மூத்த தோழர் S.தமிழ்மணி அவர்கள் எழுதிய புத்தகத்தை கொடுத்து அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்குபெற்று சிறப்பித்தனர்.  குறிப்பாக நாகர்கோவில் இருந்து மூத்த தோழர் ஜோசப் அவர்களும் குன்னூர் பகுதியில் இருந்து தோழர் ரங்கன் அவர்களும் கலந்து கொண்டது மிகவும் சிறப்பானதாகும்.

நம்முடைய பொதுச் செயலாளர் தோழர் CC சிங்க் முழுமையாக பங்கு பெற்றது மிகவும் சிறப்பான அம்சமாகும்.

மேனாள்  ஆற்றல் மிகு தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் பட்டாபி அவர்கள் பங்கு பெற்று தோழர் நடராஜன் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை மிக தெளிவாக குறிப்பிட்டு தமிழ் மாநிலத்தின் மரபை கடைபிடித்த நடராஜனுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பதிவு செய்தார்.

தமிழகத்தின் மூத்த தொழிற்சங்க தலைவர் தோழர் ஆர் கே அவர்கள் அவரது துணைவியாருடன் தோழியர் சௌதா அவர்களுடன் பங்கு பெற்று சிறப்பான முறையில் வாழ்த்துரை வழங்கினார்.  தஞ்சை  மண்ணின் பெருமையை காத்திட்ட நடராஜனுக்கு சிறப்பான வாழ்த்துக்களை பதிவு செய்தார். ஓய்வு பெற்ற பிறகு தொடர்ந்து சமூகப் பணியை மேற்கொள்ள வேண்டும். ஓய்வுக்கு ஓய்வு தர வேண்டுமே ஒழிய இன்று போல் என்றைக்கும் நடராஜன் பணியாற்ற வேண்டுகோளுடன் தனது வாழ்த்துரையை நிறைவு செய்தார்.

BSNLEU சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் S செல்லப்பா பங்கு பெற்று  தொழிற்சங்கத்தில் பல முரண்பாடுகள் இருந்தாலும் தமிழகத்தில் ஒற்றுமையை கட்டுவதற்கும் கூட்டு இயக்கத்திற்கு வலு சேர்ப்பதற்கு தோழர் நடராஜனின் பங்கு மிக முக்கியமானது .மிக எளிமையாக அணுகக்கூடிய  தோழரின்  பணியை பாராட்டினார். BSNLEU இயக்கத்தின் மாநில செயலாளர் தோழர் ராஜு மற்றும் மாநிலத் தலைவர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பங்கு பெற்று சிறப்பித்தனர்.

மாநில செயலாளர் தோழர் நடராஜன் பணி ஓய்வு பாராட்டு விழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக நமது பொதுச் செயலாளர் தோழர் CC Singh சென்னை வந்திருந்தார். கிரீம்ஸ் ரோடு மாநில சங்க அலுவலகத்தில் அவரை சந்திக்கின்ற வாய்ப்பை பெற்றேன். 

குறிப்பாக மருத்துவ காப்பீடு மற்றும் மூன்றாவது ஊதிய மாற்றம் இரண்டு பிரச்சினைகளில் அதிகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற  வேண்டுகோளோடு மாற்று ஆலோசனைகளையும் வழங்கி உள்ளோம்.

1. மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 2/3 பிரிமியம் தொகையை கட்டாயமாக நிர்வாகம் செலுத்த வேண்டும்.1/3 தொகையை ஊழியர்கள் செலுத்தலாம். பிஎஸ்என்எல் மெடிக்கல் MRS திட்டத்தை ஆய்வு செய்யலாம். நமது நிறுவனம் ஊழியர்  நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

2. மூன்றாவது ஊதியக்குழு எந்த விதமான  காலதாமதமின்றி உடனடியாக அமல்படுத்த வேண்டும் .இன்றைய சூழலில் 60% க்கு மேல் ஊழியர்கள் தேக்க நிலையில் உள்ளனர் என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாநிலச் செயலாளர் பணி ஓய்வு பாராட்டு விழாவில் அனைத்து சங்க  தலைவர்களும் பங்கு பெற்று தோழர் நடராஜன் சிறப்பு இயல்புகளை குறிப்பிட்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

சேவா சங்கத்தின் மத்திய சங்க தலைமை ஆலோசகர் மரியாதைக்குரிய தோழர் P.N.பெருமாள் அவர்கள் தலைமையில் நிறைவான தோழர்கள் பங்கு பெற்று சிறப்பித்தனர்.

மாநில செயலாளர் மற்றும்  மத்திய  சங்கத்தின் பொருளாளர் ஆகிய தோழர் பன்னீர்செல்வம் அவர்கள் தனது வாழ்த்துறையில் தமிழகத்தில் தோழர் நடராஜன் தோழமையின் காரணமாக கடந்த மூன்று தேர்தலாக NFTE இயக்கம் சேவா சங்கத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது .அனைத்து தேர்தலிலும் தமிழகத்தில் வெற்றியை பெற்றது.
தமிழகத்தில் சேவா சங்கத்திற்கும் NFTE இயக்கத்திற்கும் தோழமையான உறவுக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ள மாநில செயலாளர் நடராஜன் பணி ஓய்வு காலம் சிறக்க சேவா சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

சேவா சங்கத்தின் தலைமை ஆலோசகர் தோழர்  P.N.பெருமாள் அவர்கள் கடுமையான பணிகளுக்கு மத்தியிலும் பங்கு பெற்று தோழர் நடராஜன் அணுகுமுறையை சிறப்பான முறையில் எடுத்து சொல்லி வாழ்த்துரை வழங்கினார்..

ஜாதி, மத ,கேடர்  வித்தியாசமன்றி மிக எளிய முறையில் அணுக கூடிய தோழனாக செயல்பட்டவர்.
தஞ்சையில் எங்களது இயக்கத்தின் சார்பாக அண்ணல் பட திறப்பு விழாவிற்கு அழைக்காமலேயே  பங்கு பெற்றவர். நாங்கள் தோழர் நடராஜனையே அண்ணல் படத்தை திறந்து வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தோம்  .இதை அன்பாக ஏற்றுக் கொண்டு அண்ணல் படத்தை திறந்தது மட்டுமில்லாமல் நிகழ்ச்சி முடியும் வரை இருந்து சிறப்பித்தவர்.
எங்கள் இயக்கத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் பங்குபெற்று  சிறப்பிக்க கூடியவர். 
சென்ற மூன்று ஆண்டுகள் மத்திய கூட்டு ஆலோசனை குழு ஏன் நடைபெறவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். NFTE மத்திய சங்கம் குறிப்பாக எனது அன்புக்குரிய தோழர் CC சிங் அவர்கள் என்னை  தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமித்தார். அதை ஏற்றுக் கொள்ள முடியாது ஜீரணிக்க முடியாத புரட்சிகரமான தலைவர்கள் எதிர்ப்பின் காரணமாக சிக்கல் எழுந்தது. NFTE மத்திய சங்கம் , குறிப்பாக தோழர் சிங் அவர்கள் உறுதியான நிலைப்பாட்டின் காரணமாக சேவா சங்கத்தை தவிர்த்து நடத்த இயலாது என்பதை உறுதிபட கூறினார்கள்.

NFTE இயக்கம் அனைவரையும் அரவணைத்து செல்கின்ற இயக்கமாக  இருக்கின்றது. குறிப்பாக தமிழ் மாநிலச் செயலாளர் அவர்களை எத்தனை முறை பாராட்டினாலும் பாராட்டி கொண்டே இருக்கலாம்.

அவருடைய பணி ஓய் காலம் சிறக்க ,மேலும் தொடர்ந்து இயக்கப் பணிகளை ஆற்றிட சேவா மத்திய சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்..

தலைமை பொது மேலாளர் அலுவலகத்தின் சேவா இயக்கத்தின் செயலாளர் தோழியர் பரிமளா செல்வி, CAO அவர்கள் மிக சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்கள். தோழர் நடராஜன் அவர்கள் குறிப்பாக தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் அனைத்து தோழர்களிடமும்  கேடர் வித்தியாசம் இன்றி , ஜாதி மத பேதமின்றி மிக எளிமையாக அணுகக் கூடிய தலைவர் .

குறிப்பாக மகளிர்க்கு ஒரு பிரச்சனை என்றால் உடனடியாக எதிர்வினை ஆற்ற கூடியவர். அனைத்து  மகளிர்களும்  சேர்ந்து அவரை கௌரிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தோம்.  கால தாமதமானதால் அனைத்து  தோழியர்களாலும் முழுமையாக பங்கேற்க இயலவில்லை.தலைமை பொது மேலாளர்  அலுவலக அனைத்து மகளிர் சார்பாக தோழரை வாழ்த்தி  கௌரவிக்கின்றேன்.

மாநிலச் செயலாளர் நடராஜன் பணி ஓய்வு பாராட்டு விழாவில் தலைமை பொது மேலாளர்  உயர் திரு  B வெங்கடேஸ்வரலூ, ITS, பொது மேலாளர் உயர்திரு ஜெயக்குமார் ஜெயவேலு , துணைப் பொது மேலாளர்  திரு ரமேஷ், பயிற்சி கேந்திரத்தின் முதல்வர் திரு சக்திவேல் ஆகியோர் பங்கு பெற்று மாநில செயலாளர் அவர்களை வாழ்த்தி உரையாற்றினார்கள்.

துணைப் பொது மேலாளர் ரமேஷ் அவர்கள் தனது வாழ்த்துறையில் நமது இயக்கத்தின் பெருமைகளை மிக அழகாக தஞ்சை அனுபவத்தின் மூலம் கிடைக்கப்பெற்றதை பதிவு செய்தார்.
நான் ஒரு தொழிற்சங்கத்தை சார்ந்தவனாக  இருந்தாலும், தொழிற்சங்க அனுபவங்களை  NFTE மூலம் தான் பெற்றிருந்தேன். தஞ்சையில் வெளிப்புற பகுதி அதிகாரியாக இருந்த பொழுது தோழர்களுடன்  நெருங்கி பழகக் கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.

 இயக்கத்தில் ஆக்ரோஷமாக பேசக் கூடியவர்கள் ஆனால் துறை சார்ந்த பணிகள் செய்வதில் மிகவும் திறமையாக செயல்பட கூடியவர்கள்  தோழர்கள் என்பதை  என் அனுபவத்தில் உணர்ந்தேன்.

குறிப்பாக தஞ்சை லைன் ஸ்டாப் தோழர்கள்  கடும் பணியை நேரில் பார்த்து அசந்து போனவன். ஆனால் அதற்கெல்லாம் நேர் மாறாக தோழர் நடராஜன் செயல் பட்டதை கண்டு  வியந்து போனேன். தோழர் நடராஜன் எந்த சூழலிலும் கடுமையாக நடந்து கொள்ளாதவர். பிரச்சனை தீர்வில் உறுதியாக இருக்கக் கூடியவர் . பிரச்சனைகள் முடிவுக்கு வரும் வரை தொடர்ந்து விவாதித்துக் கொண்டே இருப்பார். நிர்வாகப் பிரிவில் துணைப் பொது மேலாளர் ஆக பணியாற்றிய பொழுது அவருடைய அணுகுமுறையை நேரில் பார்த்தவன் . எங்களது உறவு ஆசிரியர் மாணவனுக்கு உள்ள உறவு போன்று இருக்கும் எல்லைக்கோட்டை தாண்டாமல் இருக்கக் கூடியவர்.

அவர் வணக்கம் வைக்கக்கூடிய முறையிலேயே அவரது நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும். தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் நானும் பெருமை கொள்கின்றேன்.தோழர் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்.

பொது மேலாளர் NWP உயர்திரு ஜெயக்குமார் ஜெயவேலு  அவர்கள் வாழ்த்துரை வழங்குவதற்கு முன்பு தமிழகத்தின் 4g 5g  சேவையின் தற்போதைய நிலைமைகளை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். மிக விரைவில் தமிழக முழுவதும் 4G சேவை கிடைக்க பெறும் குறிப்பாக டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து பகுதிகளுக்கும் 4ஜி சேவை கிடைக்க பெறும் என்று நம்பிக்கை உடன் பதிவு செய்தார்.

CORE பணிகள் திருச்சியில் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 
5G சேவைகளும் எந்த விதமான சிரமம் இல்லாமல் உடன் கிடைக்க பெறும். 
கடலூர் பாண்டிச்சேரி உள்ள கூட்டத்தை போன்று இங்கு நான் பார்க்கின்றேன். தோழர் நடராஜன் மேல் அதிக பாசத்தை வைத்து தமிழக முழுவதும் தோழர்கள் இங்கே வந்திருப்பதை பார்க்க முடிகின்றது. 

தோழர் நடராஜன் குறிப்பாக கடலூர் மற்றும் பாண்டிச்சேரி பிரச்சினைகளை பற்றி என்னுடன் அடிக்கடி  வாதிக்க கூடியவர். பிரச்சினைகளை மிகப் பணிவுடன் பண்புடன் அதே சமயத்தில் உறுதியாக எடுத்து வைப்பதில் வல்லவர். எளிமையான  தோழர் நடராஜனின் பணி ஓய்வு காலம் திறக்க வாழ்த்துக்கள்.

தலைமை பொது மேலாளர் அவர்கள் தமிழக அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்து விட்டு மாலை ஆறு மணிக்கு மேல் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.  நான்  தமிழகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டு ஒரு மாதம் கூட முடியவில்லை. தோழர் நடராஜன் பெயரை எப்பொழுதும் என் நினைவில் வைத்துக் கொண்டிருக்கின்றேன். தமிழகத்தில் தலைமை அலுவலகத்தில் முதலில் சந்தித்தது இவரை தான்.

அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டு  உங்களது இயக்கத்தின் மாநில செயற்குழுவில் கலந்து கொள்கின்ற வாய்ப்பையும், ஊழியர்களையும் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றேன். மிக எளிமையாக அதே சமயத்தில் பிரச்சினைகளை உறுதியாக எடுத்துரைப்பதில் மிகவும் சிறப்பானவர்.

பல மொழிகளில் வல்லமை பெற்றிருந்தாலும் தற்போது தான் தமிழை கற்றுக் கொண்டிருக்கின்றேன் என்னால் புரிந்து கொள்ள முடியும் மிக விரைவில் அதாவது ஒரு மாதத்திற்குள் உங்கள் அனைவரிடமும் தமிழில் பேச முயற்சி செய்கின்றேன் அனைவருக்கும் மாலை வணக்கம் . தோழரின் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்.

சென்னை  மீனம்பாக்கம் பயிற்சி  கேந்திரத்தின் முதல்வர் திரு சக்திவேல் அவர்கள் கலந்து கொண்டு மிக சுருக்கமாக தோழர் நடராஜனை பாராட்டி, அவர் ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

மாநிலச் செயலாளர் தோழர் நடராஜன் பணி ஓய்வு பாராட்டு விழாவில் AITUC அகில இந்திய செயலாளர் தோழர் டி எம் மூர்த்தி, தமிழ் மாநில பொதுச் செயலாளர் தோழர் M. ராதாகிருஷ்ணன், தோழியர் ராஜேஸ்வரி மூர்த்தி,  தோழியர் காமாட்சி ராதா கிருஷ்ணன் ஆகியோர் பங்கு பெற்று தோழரை வாழ்த்தினார்கள்.

தோழர் மூர்த்தி அவர்கள் தனது வாழ்த்துறையில் நீங்கள் எல்லாம் அவர் 40 ஆண்டு காலம் ஆற்றிய பணிகளை பாராட்டி சிறப்பு செய்தீர்கள். நாங்கள் இனிமேல் அவர் எங்களது இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றுவதற்காக வாழ்த்த வந்திருக்கின்றோம். தொலைத்தொடர்பு துறையில் சாதாரண தொழிலாளியாக பணியை தொடங்கி இன்று இளநிலை பொறியாளராக பணி ஓய்வு பெறுகின்றார்.

திருவாரூர் அருகில் கிராமத்தில் வாழ்க்கை துவங்கி சென்னை மாநகரத்தில் வாழ்க்கை நடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அனைத்து  பெருமைகளும் அவரது துணைவியாருக்கு தான் சாரும் .மகன் விரும்பியப்படியே திருமணத்தை  சிறப்பாக நடத்தி வைத்தவர். தோழர் நடராஜனின் துணைவியார் அதை மிக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டது தான் மிகவும் சிறப்பம்சம் ஆகும். 

தோழா நடராஜனை பொறுத்தவரை அலுவலகப் பணிகளுக்கு மட்டும் ஓய்வு ஒழிய தொடர்ந்து தொழிற்சங்க பணிகளில் வேகமாக செயல்பட வாழ்த்துக்கள்.

மாநில பொதுச்செயலாளர் தோழர்  M.ராதாகிருஷ்ணன் அவர்கள்  தனது உரையில் நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
சென்னையில் வாழ்வது என்பது ஒரு போராட்டம் தான். அதற்கு மத்தியிலும் அவர்கள்  இல்லத்தில் எப்பொழுதும் சொந்தங்கள் இருந்து கொண்டே இருக்கும். அவர்களையும் அன்புடன் தோழமையுடன் அரவணைக்க கூடியவர்.
AITUC தமிழ் மாநில சங்கத்தில் இணைந்து  செயல்பட தோழமையுடன் அழைக்கின்றேன். தோழருக்கும், தோழர் குடும்பத்திற்கும் எனது வாழ்த்துக்கள்.

கன்டோன்மெண்ட் சங்கத்தின் CBEU  பொதுச் செயலாளர் தோழர் P.பாலகிருஷ்ணன் அவர்கள் தோழர்களுடன் பங்கு பெற்று தோழரை வாழ்த்தினார்.

தோழியர் ராஜேஸ்வரி மற்றும் தோழர் காமாட்சி இருவரும் தோழருக்கு சால்வை  அணிவித்து கௌரவித்தார்கள்.

மாநில செயலாளர் பணி ஓய்வு பாராட்டு விழாவில் மேனாள் AIBSNLEA பொதுச் செயலாளர் தோழர் K.சிவகுமார், TEPU சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர்  தோழர் J. விஜயகுமார், FNTO சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் S. லிங்கமூர்த்தி, TEPU சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் M.ரவீந்திரன்,STR பகுதியின் சார்பாக தோழர் ராமகிருஷ்ணன், BTEU சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் M.சுந்தரேசன் ஆகியோர் பங்கு பெற்று மாநிலச் செயலாளர் நற்பண்பையும் மற்றும் அவரது எளிமையான அணுகுமுறையும் பாராட்டி அனைவரும் கௌரவித்தார்கள்.

குடந்தை தோழர் MSR, ஓய்வு பெற்ற நல சங்கத்தின் மாநில செயலாளர் AIBSNLPWA தோழர் S. சுந்தரகிருஷ்ணன், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் Y. மில்டன், தோழர் நடராஜன் உறவினரும், தோழரை நமது துறைக்கு அறிமுகப்படுத்திய ஓய்வு பெற்ற DE STR தோழர் A. ஆனந்த ராமன் ஆகியோர் மிக சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்கள்..

SNEA சங்கத்தின்  மாநில செயலாளர் தோழர் G.  வளனரசு நிகழ்ச்சியில் முழுமையாக பங்கு பெற்று தோழரிடம் தலைமை அலுவலகத்தில் உள்ள உறவுகளை மிகத் தெளிவாக எடுத்துரைத்து  பாராட்டுரை வழங்கினார். 
தோழர்  நடராஜனும் நானும் சென்னை தலைமை அலுவலகத்தில் ஒரே நேரத்தில் தொழிற்சங்கத்திற்காக மாற்றலாகி வந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

NFTE  நிகழ்ச்சியில் தொடர்ந்து  பங்கேற்றுக் கொண்டிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். முதன் முதலில் தூத்துக்குடி மாவட்டத்தில் NFTE இயக்கத்தின் மாவட்ட மாநாட்டில் அதிகாரி சங்கத்தின் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றியதை பெருமையாக  நினைவு படுத்தினார்.

AUAB தமிழகத்தில் மிகச் சிறப்பாக செயல்படுவதற்கு முக்கிய காரணியாக இருப்பது அருமை தோழர் நடராஜன். அனைவரையும் அரவணைப்பதிலும்  தோழமையுடன் அணுகுவதிலும் தோழர் நடராஜனுக்கு நிகர் தோழர்  நடராஜன் மட்டும் தான்.

எந்த சூழ்நிலையும் மிக அமைதியாக,  பதட்டப்படாமல் செயல்படக் கூடியவர். 
மிக எளிமையாக அணுகக் கூடிய தோழனாக செயல்பட்டவர். கருப்பு சட்டைக்கு இலக்கணமாக வாழ்க்கையை நடத்தியவர். தன்னுடைய மகனின் திருமணத்தை மிக எளிய முறையில், சாதிய மறுப்பு திருமணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்று நடத்திக் காட்டியவர். 

தோழரின் ஓய்வு காலம் சிறக்க  snea தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

AIBSNLEA சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் S.. ஆனந்தன் தனது வாழ்த்துறையில் தோழர் நடராஜன் போன்று தோழமை மிக்க தோழனை பார்ப்பது மிகவும் அரிது. எங்களது அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைக்கும் தோழர் நடராஜன் உடைய பங்கு பெரியது. தோழரின் ஓய்வு காலம் சிறக்க AIBSNLEA தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

AIGETOA சங்கத்தின் மாநில பொறுப்பாளர் தோழர் செந்தில்குமார் பங்கு பெற்று தோழரை வாழ்த்தினார். தோழருடன்  தலைமை பொது மேலாளர் அலுவலக செயலாளர் தோழியர் ராஜேஸ்வரி மற்றும் மாநில உதவி செயலாளர் அருமை தம்பி தோழர் K  அருண் பிரசாத் ஆகியோர் பங்கு பெற்று சிறப்பித்தனர்.

நமது இயக்கத்தின் முதுபெரும் தலைவர்கள் தோழர் S  தமிழ்மணி, தோழர் K. சேது மற்றும் தோழர் P. காமராஜ் ஆகியோர் பங்கு பெற்று தோழரை மிக சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாநில செயலாளர் தோழர் நடராஜன் பணி ஓய்வு பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக விழா நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பாகவே 29 7 2024 அன்று நமது இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர்  C.C Singh அவர்கள் சென்னை வந்து சேர்ந்தார். 
30 7 2024 காலையில் தலைமை அலுவலகத்தில் உள்ள தமிழ் மாநில சங்கத்தின் அலுவலகத்திற்கு வருகை புரிந்து தோழர்களுடன் கலந்து உரையாடினார்.
தேசிய செயலாளர் ஸ்ரீதர் இரண்டு முக்கிய பிரச்சினைகளில் பற்றி ஒரு தெளிவான குறிப்பினை தந்து ஊழியர்களின் உணர்வுகளை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார் .
1. மருத்துவக் காப்பீடு திட்டம் 
2. மூன்றாவது ஊதிய குழு. 
 
ஐந்து ஆண்டுகள் முடித்து  Rule 8 விதியின்படி சொந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டிய  இரு JE தோழர்கள் சந்தித்து முறையிட்டனர்.

தலைமை பொது மேலாளர் அவர்களை நமது பொதுச் செயலாளர்  மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
Rule 8  JE கேடர் மாற்றல்களை குறிப்பாக கல்கத்தா மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கு செல்வதற்கான தோழர்களின் விண்ணப்பங்களை கனிவுடன் அணுக வலியுறுத்தினார்.

பாராட்டு விழாவில் துவக்கத்திலிருந்து முடிகின்ற வரை முழுமையாக பங்கேற்று விழாவை ரசித்துக் கொண்டிருந்தார்.
இரவு 7 மணி 30 நிமிடத்திற்கு நிறைவுறை ஆற்றினார்..

தனது நிறைவுறையில் நான் காலையிலிருந்து கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறேன்.
தோழர் நடராஜன் மேல் தோழர்கள் அன்பை பொழிந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகம் என்றைக்கும் மத்திய சங்கத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளது. தோழர் ஜெகன் முதல் இன்று உள்ள நடராஜன் வரை தமிழகத்திடம் ஆலோசிக்காமல் எந்த முடிவும் மத்திய சங்கம் பொதுவாக எடுப்பதில்லை.

 மத்தியில் கூட்டணிகள் அமைவதற்கு தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது. தொழிற்சங்க முன்னோடிகள்  தோழர்கள் ஆர்கே, பட்டாபி,  சேது போன்றவர்கள் இங்கே அமர்ந்திருக்கின்றார்கள்.

தோழர் நடராஜன் தேசிய குழுவில் உறுப்பினராக நல்ல முறையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றார். 
தினந்தோறும் மத்திய சங்கத்துடன் தொடர்பில் இருக்கக்கூடியவர். 
மிக  தோழமையுடன் அனைவரிடமும் அணுகக் கூடியவர்.
மத்திய செயற்குழுவில் மிகத் தெளிவாக கருத்துக்களை முன் வைப்பவர்.

தொழிற்சங்க பணியில் 40 ஆண்டு காலம்  தொய்வின்றி ஈடுபடுவதற்கு உறுதுணையாக இருந்த அவரது குடும்பத்தாருக்கு எனது நன்றிகளும்  பாராட்டுகளும்.

அனைத்து தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர்களும் மற்றும் அதிகாரி சங்கங்களின் தலைவர்களும் பங்கேற்றது மிகவும் பெருமையாக கருதுகின்றேன்.

தமிழகம் முழுவதும் இருந்து நிறைவான தோழர்கள் பங்கேற்று இருப்பது நடராஜனின் மேல் உள்ள அன்பையும் அக்கறையும் வெளிப்படுத்துகின்றது.

தோழர் நடராஜன் பணி ஓய்வு காலம் சிறக்க மத்திய சங்கத்தின் சார்பாக  வாழ்த்துகள்.

நிறைவாக மாநில செயலாளர் தோழர் நடராஜன் ஏற்புரை ஆற்றினார். தொலைத் தொடர்பு துறைக்கு வருவதற்கு முக்கிய காரணியாக அமைந்திருந்த என்னுடைய மாமாவும் , ஓய்வு பெற்ற கோட்ட பொறியாளர் STR ஒரு திரு A. அனந்தராமன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

எனக்கு கொடுக்கப்பட்ட பணியினை அதாவது மாநிலச் செயலாளர் பொறுப்பை  நல்ல முறையில் செய்திருக்கின்றேன் என்ற மனத் திருப்தியுடன் நான் ஓய்வு பெறுகின்றேன்.
எனக்கு வழிகாட்டியாக அமைந்திருந்த மூத்த  தோழர்கள் ஆர்கே, பட்டாபி ,சேது அவர்களுக்கு நன்றிகளை பதிவு செய்கின்றேன்.
என்னை நல்ல முறையில் செதுக்கிய திருவாரூர் கிளைக்கு  நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றேன்.
2016 இல் வேலூர்  மாநில மாநாட்டில் மாநிலச்  செயலாளராக பணியாற்றக்கூடிய வாய்ப்பு பெற்றேன்.
நான் உடனடியாக  தஞ்சையில் இருந்து  சென்னைக்கு மாற்றலாகி தலைமையகத்தில் பணியாற்ற துவங்கினேன்.
அன்றைய மாநில தலைவர்
 தோழர் P. காமராஜ் , மாநிலத் தலைவர் தோழர்  G S.முரளிதரன், CGM அலுவலக மாவட்ட செயலாளர் தோழர் மனோஜ்  ஆகியோர் மாநில தொழிற்சங்கப் பணியில் எனக்கு ஆலோசனை வழங்கி மேலும் மாநில சங்க செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
அவர்களுக்கு எனது நன்றிகளை பதிவு செய்கின்றேன்.

 தலைமை பொது மேலாளர்
அலுவலகத் தோழர்கள் G.ஜெயச்சந்திரன், TV பாலு களப்பணி ஆற்றுவதில் பெரிதும் உதவி செய்துள்ளனர்.
அவர்களுக்கும் எனது நன்றிகள். 

மாநில சங்க பணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருந்த தோழர் வேலூர் மதியழகன், தூத்துக்குடி பாலு, விருதுநகர் மதிவாணன், கடலூர் நீலகண்டன் ஆகியிருக்கும் எனது வணக்கங்களை பதிவு செய்கின்றேன்.

மாநில சங்க சிறப்பான செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்டச்  செயலாளர்களுக்கு எனது நன்றிகள்.

தொழிற்சங்க ரீதியாக முரண்பாடுகள் இருந்தாலும் தலைமை  பொது மேலாளர் அலுவலகத்தில் மிக தோழமையுடன் அணுகிய அனைத்து தொழிற்சங்க மாநில சங்க நிர்வாகிகளுக்கும்  எனது நன்றிகள்.

அன்றாடம் எனக்கு உதவி செய்து கொண்டிருந்த எனது குடும்பத்தாருக்கும், தமிழ் மாநில  AITUC சங்கத்திற்கும் எனது நன்றிகள்.
பாராட்டு விழாவில் முழுமையாக பங்குபெற்ற மத்திய சங்க நிர்வாகிகளுக்கும் மற்றும் பொதுச் செயலாளர் அவர்களுக்கும் எனது நன்றிகள். 

ஜெகன் நினைவத்தில் அமர்ந்து வாழ்க்கை நடத்துவேன் என்று கற்பனை கூட நான் செய்யவில்லை.
அதற்கு வாய்ப்பளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியுடன் எனது உரையை நிறைவு செய்கின்றேன். 

கோயம்புத்தூர் மாவட்ட செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியம் நன்றி கூற விழா இரவு 8 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.

நிறைவுப் பகுதி

தமிழ் மாநில செயற்குழு முடிவின்படி மாநில செயலாளர் தோழர் K.நடராஜன் பணி ஓய்வு பாராட்டு விழா ,மாநில தலைவர் தோழர் G.S. முரளிதரன் தலைமையில் 30 7 2024 மதியம் 2:30 மணி முதல் இரவு 8 மணி 30 நிமிடம் வரை சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகம் கிரீம்ஸ் ரோட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 
தமிழகம் முழுவதும் 350 க்கு மேற்பட்ட தோழர்கள்  தோழியர்கள் பங்கு பெற்று சிறப்பித்தனர்.

தமிழ் மாநில சங்கத்தின் மாநில நிர்வாகிகளும் மற்றும் மாவட்டச் செயலாளர்களும் வாழ்த்துவதற்கான வாய்ப்பு இல்லாதது மிகப் பெரிய வருத்தம் தான்.
தமிழ் மாநில சங்கத்தின் இயக்கப் பணியில் அன்றாடம் தொடர்பில் இருக்கின்றவர்கள் ஒரு சில நிமிடம் வது வாழ்த்தியிருந்தால் நிகழ்வு முழு வெற்றியை பெற்றிருக்கும். 

அனைத்து மாவட்ட சங்கங்களும் மாநிலச் செயலாளரின் பணியை பாராட்டி கௌரவித்தனர்.

மேனாள் மாநில பொருளாளர்  தோழர் L.  சுப்புராயன் கலந்து கொண்டு மாநில செயலாளர் தோழர் நடராஜனை வாழ்த்தி மிக சுருக்கமாக உரையாற்றினார்.

தோழர் நடராஜன் குடும்பத்தின் சார்பாக அவருடைய அண்ணன் மகன் தனது சித்தப்பாவின்  சிறப்பு இயல்பையும், NFTE இயக்கத்தின் பெருமைகளையும் மிக அழகாக எடுத்துக் கூறினார். திருவாரூர் மே தின நிகழ்ச்சிகள் மிகவும்  உணர்ச்சிகரமாக இருக்கும். எனது சித்தப்பா குடும்பத்திலும் மிக அமைதியாக அனைவரும் அனைவரிடமும் மிகவும் தோழமையுடன் இருப்பார். நான் அவரை அப்பா என்றுதான் அழைப்பேன். எனது தந்தையும் பிஎஸ்என்எல் பணிபுரிந்து இயற்கை எய்திவிட்டார். 
அவரின் சிறப்பான குணத்திற்கு
எனது சித்தப்பா என்றைக்கும் மகிழ்ச்சியாக வாழ்வார் என்று பதிவு செய்து தனது உரையை நிறைவு செய்தார்..

கடலூர் மாவட்டத்திலிருந்து மாவட்ட செயலாளர் தோழர் குழந்தைநாதன் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட தோழர்கள் முழுமையாக பங்கேற்றனர். விழா   துவக்கத்திலிருந்து நிறைவு  பெறுகின்ற வரை பங்கு பெற்றனர். 

கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பாக  விழாவில் பங்கு பெற்ற அனைவருக்கும் இனிப்பு காரம் வழங்கப்பட்டது.

 தோழர் நடராஜனுக்கு பாராட்டு சிறப்பு விழா என்பதைவிட , NFTE தமிழ் மாநில சங்கத்தின் செயல்பாட்டிற்கும் மற்றும் தோழமைக்கும் அங்கீகரமாக கருதக்கூடிய விழாவாக அமைந்திருந்தது .

விழாவை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த தலைமை பொது மேலாளர் அலுவலக மாவட்ட செயலாளர் தோழர் மனோஜ், மற்றும்  களப்பணி ஆற்றிய தோழர் ஜெயச்சந்திரன், தோழர் பாலு மற்றும் தோழர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும்.


















No comments:

Post a Comment