.

Friday, July 26, 2024

பணி ஓய்வு பாராட்டு விழா

மாவட்ட செயற்குழுவின் ஒரு பகுதியாக கடலூர் பொது மேலாளர் அலுவலக கிளையின் சார்பாக இந்த மாதம் பணி ஓய்வு பெறுகின்ற தோழர் R.செல்வகுமார் அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா கிளைத் தலைவர் தோழர் வெங்கட் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாநில உதவி தலைவர்  தோழர் A.சகாய செல்வன், மாநில உதவி செயலாளர் தோழர் P.சுந்தரமூர்த்தி, மாவட்டச் சங்க நிர்வாகிகள் தோழர்  R.பன்னீர்செல்வம் தோழர்  S பலராமன் தோழர் K. ராகவன் ஆகியோர் தோழரின் சிறப்பான பண்புகளை பாராட்டி உரையாற்றினார்கள். 

மாவட்டத் தலைவர் தோழர் D. ரவிச்சந்திரன் மற்றும் மாவட்டச் செயலாளர் தோழர் D.குழந்தைநாதன் இருவரும் தோழர் செல்வக்குமாரின் பணியினை  பாராட்டி உரையாற்றினார்கள்.

ஓய்வு பெற்ற  நல சங்கத்தின் கடலூர் ஒருங்கிணைப்பாளர் தோழர் E விநாயகமூர்த்தி மாநிலச் செயலாளர் நடராஜ் அவர்களையும் பாராட்டி, தோழர் செல்வகுமாரின் அலுவலகப் பணி மற்றும் தொழிற்சங்க பணிகளை மிக விரிவாக எடுத்துச் சொல்லி அவரை பாராட்டி கௌரவித்தார்
.
 தோழர் குமரகுரு JTO OFC பராமரிப்பு அவர்கள் பங்கு பெற்று தோழரின்  பணியை பற்றி குறிப்பிட்டு பாராட்டி கௌரவித்தார்.

தேசிய செயலாளர் தோழர் ஸ்ரீதர் மாவட்ட செயற்குழு நிகழ்ச்சி நிரல் மற்றும் வருங்கால கடமைகள் ஆகியவற்றை மிக தெளிவாக பதிவு செய்ததுடன் தோழர் செல்வகுமார் நீண்ட நாள் நண்பர் என்ற முறையில் அவரை பாராட்டி சிறப்பான உரையாற்றினார். 

OFC பராமரிப்பு  பகுதியில் மிகக் கடுமையாக பணியாற்றியவர்.  தொழிற்சங்கத்தில் சல்லிவேராக செயல்பட்டவர்.
 எந்த பதவிக்கும் ஆசைப்படாதவர். அனைவரிடமும் தோழமையுடன் பழகக் கூடிய தோழர். 

 மாவட்ட செயற்குழு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா ரெண்டுக்கும் சேர்த்து அனைத்து தோழர்களுக்கும் சிறப்பான  மதிய உணவை ஏற்பாடு செய்துள்ளார்..

பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள். 

நிறைவாக மாநில செயலாளர் தோழர் K.நடராஜன் இன்றைய  தொழிற்சங்க செய்திகள் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சி போக்குகள் ஆகியவற்றை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். 

மாநில மாநாட்டை மிக சிறப்பாக கடலூர் மாவட்டத்தில் நடத்துவதற்கான நல்லதொரு முடிவை எடுத்தமைக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்..

 தோழர் செல்வகுமார் உடன் நானும் இந்த மாதம் பணி ஓய்வு பெறுகின்றேன். தோழர் செல்வகுமார் போன்ற உறுதிமிக்க தோழர்கள் செயல்பாட்டால் தான்  இயக்கம் வலுவாக இருக்கின்றது.
பணி ஓய்வு காலம் சிறக்க மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் .

தோழர் செல்வகுமார் மிக சுருக்கமாக ஏற்புரை ஆற்றினார். 

கிளை சங்கத்தின் சார்பாக தோழர் A.சகாய செல்வன் சாலையை அணிவித்து கௌரவித்தார். மாநிலச் செயலாளர் நினைவு பரிசு வழங்கினார்.மாவட்ட சங்கத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் தோழர் D. குழந்தைநாதன் சால்வைஅணிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.தேசிய செயலாளர் தோழர் ஸ்ரீதர் மாவட்ட சங்கத்தின் சார்பாக நினைவு பரிசினை வழங்கினார்.
 
மூத்த தோழர் S. தமிழ்மணி,  V.நீலகண்டன், தோழரின் நீண்ட நாள் நண்பரும் இயக்கத்தின் முன்னணி தோழர் V. இளங்கோவன், ஓய்வு பெற்ற நல சங்கத்தின் அகில இந்திய துணை பொதுச் செயலாளர் தோழர் P.ஜெயராமன், மாவட்டத் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிறைவான தோழர்கள் பங்கு பங்கு பெற்று தோழரை கௌரவித்தனர். 

மாவட்ட உதவி செயலாளர் தோழர் R  மலர்வேந்தன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

தோழர் செல்வகுமார் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் பங்கு பெற்றது சிறப்பானதாகும்.

No comments:

Post a Comment