.

Wednesday, May 13, 2015

கள்ளக்குறிச்சி தோழர். N.தமிழ்ச்செல்வன்-TM
அவர்களின் பணி ஓய்வு  பாராட்டு விழாவும்,
தோழர்.P.இராமலிங்கம்-SSO
அவர்களின் சேவையை  பாராட்டி பாராட்டுவிழா

கிளைத்தலைவர் தோழர்.K.பாண்டியன் தலைமையில்
இன்று (13-05-2015) நடைபெற்றது.
தோழர்.N.இராஜாராம் கிளை உதவிச்செயலர் வரவேற்புரை நல்கினார். துவக்கவுரையாற்றினார் 
மாநில துணைத்தலைவர்
தோழர். V.லோகநாதன்.
 மாவட்டதலைவர் தோழர் R.செல்வம்,
மாவட்டசெயலர் தோழர். இரா.ஸ்ரீதர், 
 மாவட்ட உதவித்தலைவர் தோழர் S.அன்பழகன், 
மாவட்ட அமைப்புசெயலர் தோழர் K.அம்பாயிரம்,
 மாவட்ட உதவிசெயலர்கள் தோழர்.P.அழகிரி, D.குழந்தைநாதன்,
RGB தோழர்.V.இளங்கோவன்  
மற்றும்
ஒய்வு பெற்றோர் நலசங்கம் சார்பில் தோழர்.L.ஜெகநாதன்  
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பல்வேறு அலுவல்களுக்கிடையேயும் நாம் அழைத்ததின் காரணமாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய
 மாநில உதவிசெயலர் தோழர்.P.சென்னகேசவன்
அவர்களுக்கு நமது நன்றியை உரித்தாக்குகிறோம்.
நன்றியுரை கிளைபொருளர் தோழர்.R.ராமன் வழங்கினார்.

விழாவை சிறப்பாகவும், நிறைவாகவும் நடத்த ஏற்பாடுகள் செய்த கிளைசெயலர் தோழர்.S.மணி அவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம்.







வருமானவரி பிடித்தம்
2015-2016 ஆம் ஆண்டிற்கான வருமானவரி பிடித்தம் ஏப்ரல் '2015 சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.

தங்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் சேமிப்பை தவிர இதர சேமிப்பு, டியூசன் பீஸ், வீட்டுவாடகை ரசீது, வீட்டு லோன், இன்சூரன்ஸ் பாலிசி போன்றவற்றின் விபரங்களை உடனடியாக கணக்கதிகாரி அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்து சம்பளத்தில் வரும் பிடித்தத்தை தவிர்க்கவும். தற்போது ரசீது இல்லாதிருப்பவர்கள் அதன் விபரங்களை கடிதம் மூலம் தெரிவிக்கவும். பின்னர் ரசீதை அளித்தால் போதும்.

Monday, May 11, 2015

WORKS COMMITTEE


இணைந்த WORKS COMMITTEE கூட்டம் புதன் கிழமை (13-05-2015) நடைபெறும். தோழர்கள் தங்களது பகுதியில் உள்ள  பிரச்சினைகளை உடனடியாக தங்கள் பகுதி WORKS COMMITTEE உறுப்பினரிடம் உடனடியாக தெரிவிக்கவும்.
செயலகக்கூட்டம்

கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்ட அளவிலான செயலகக்கூட்டம் 09-5-2015 சனிக்கிழமை மாவட்டத்தலைவர் தோழர்.R.செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலசங்க துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன், மாவட்ட செயலர் தோழர். இரா.ஸ்ரீதர், மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசங்க நிர்வாகிகள், மற்றும் முன்னணித் தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

செயலகக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

  •   மாவட்டத்தில் அனைத்துகிளைகளிலும் பொதுக்குழுவை   உடனடியாகக் கூட்டுவது. அதில் ஊழியர் பிரச்னைகளை பேசித் தீர்வு காண்பது.
  •  சிரில் அறக்கட்டளை கூட்டத்தை ஜுன் மாதத்திற்குள் நடத்துவது.
  •   சிரில் அறக்கட்டளை நிதியை மாவட்ட சங்கத்திடம்  ஒப்படைப்பது குறித்து  மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர் அவர்கள்  சம்மேளன செயலர் தோழர்.G.ஜெயராமனுடன் பேசுவது எனவும்,
  • அமைப்பை பலப்படுத்த அனைத்து கிளைதோறும் தோழர்களை சந்திப்பது.
  • திருக்கோவிலூர் உட்பகுதி மாற்றல் பிரச்சனை, மாவட்ட சங்க அலுவலகத்திற்கு BROADBAND வசதி, மாவட்ட உதவிசெயலர் தோழர்.குழந்தைநாதன் அவர்களுக்கு தொழிற்சங்க ரீதியிலான மாற்றல் பெறுவது குறித்த பிரச்சனைகளின்பால் விரைவில் தீர்வு ஏற்படாவில்லையெனில் இந்த மாதம் இறுதிக்குள் உண்ணாவிரதம் மேற்கொள்வது.


தோழமையுடன்.
இரா.ஸ்ரீதர்

மாவட்ட செயலர்








Tuesday, May 5, 2015

இரங்கல் செய்தி

கள்ளக்குறிச்சி மூத்த ஓய்வு பெற்ற தோழர்.P.பூபாலன் ( டெக்னீசியன்) அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று ( 4-5-2015) இயற்கை எய்தினார்.  அவரது பிரிவில் வாடும் தோழர் தம் குடும்பத்தருக்கும் அவரது உறவினர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான முரார்பாளயம் என்ற ஊரில் இன்று                      ( 5-5-2015 ) மாலை 3.00 மணியளவில் நடைபெறும்.
இத் தோழர் 1968 வேலை நிறுத்த போராட் ட த்தில் கலந்து கொண்டு வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்,  தோழர் நமது சங்கத்தில் தம்மை முழு வீச்சில் ஈடுபடுத்திகொண்டு பல போராட்டங்களிலும் கலந்து கொண்டவருமாவார்.

Sunday, May 3, 2015

பணி  நிறைவு பாராட்டு 

திருச்சி மாவட்ட முன்னணி  தோழர். S.மனோகரன்  அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா மாவட்ட துணைத்தலைவர் தோழர் சுப்பிரமணியன்  அவர்களின் தலைமையில் 
திருச்சியில் 02-05-2015 அன்று நடைபெற்றது .
 மாநில செயலர் தோழர் பட்டாபி, 
மூத்தத் தோழர்கள் ஆர்.கே , K.சேது, S.தமிழ்மணி, 
சம்மேளன செயலர் தோழர்.G.ஜெயராமன்,  
மத்திய சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.P.காமராஜ், 
மாநிலத்தலைவர்.  தோழர்.M.லட்சம், மாநில உதவிசெயலர்கள் தோழர்.K.நடராஜன், தோழர்.A.இராபர்ட். மாநில அமைப்பு செயலர்கள் தோழர்.C.விஜயரங்கன், 
காரைக்குடி தோழர்.V.மாரி,
 மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன், மாவட்ட தலைவரும், TMTCLU மாநில பொது செயலருமான தோழர்.R.செல்வம் , மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் கலந்து கொண்டு தோழரை வாழ்த்தி சிறப்புரையாற்றினர். மேலும்  மாநிலம் முழுவதுமிருந்து  மாநில, மாவட்ட  சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் பலரும் கலந்துகொண்டு அத் தோழரை வாழ்த்தினர். 
தோழரின் ஓய்வுகாலம் சிறக்க நமது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.






Saturday, May 2, 2015

இரங்கல் செய்தி
திண்டிவனம் -கிளியனூர் தோழர்.P.கலியமூர்த்தி , TM அவர்களின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று (2-5-2015)இயற்கை எய்தினார். அவரது பிரிவால் வருந்தும் தோழருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதி நிகழ்ச்சி ஓமந்தூரில் நாளை (3-5-2015) மாலை 3-மணிக்கு நடைபெறும்.
மேதினக்கூட்டம்-கடலூர்

கடலூரில் AITUC-CITU சார்பில் இணைந்து மேதினக்கூட்டம் மேதினப்பேரணி நடைபெற்றது. பேரணியில் மாவட்டசெயலர் தோழர்.இரா. ஸ்ரீதர் தலைமையில் பெருந்திரளாக கலந்து கொண்டனர். பேரணி முடிவில் நடந்த பொதுக்கூட்ட த்தில் நமது மாநில துணைத்தலைவர் தோழர்.லோகநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். AITUC சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழியர் பத்மாவதி கலந்து கொண்டார்.






Friday, May 1, 2015

மே தினக் கொடியேற்றம் 
கடலூர் 
  TMTCLU மாநில பொதுச் செயலரும், மாவட்டத் தலைவருமான  தோழர்.செல்வம் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.




விருத்தாசலம் 
NFTE , BSNLEU  ஆகிய இரு சங்கங்களும்   25 ஆண்டு காலத்திற்குப்பின் 
இணைந்து மே தின கொடியேற்றி சிறப்பித்தனர்.
இரு சங்கத் தோழர்களும் இணைந்து கலந்து கொண்டது சிறப்பாகும். நிகழ்ச்சியில் 
NFTE மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.







உளுந்தூர்பேட்டை 





விழுப்புரம் 
கிளையின் மூத்தத் தோழர்.வீரமணி சங்கக் கொடியேற்றினார்.
மாவட்ட செயலர் தோழர். இரா.ஸ்ரீதர் 
கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.




 திண்டிவனம் 
மூத்தத் தோழர்.A. அரிகிருஷ்ணன் கொடி ஏற்றி சிறப்பு செய்தார்




.
செஞ்சி 
மூத்தத் தோழர்.A.R.கௌஸ்பாஷா கொடியேற்றினார்.