.

722412

Friday, January 28, 2011

இப்போது இல்லையெனில்... எப்போதும் இல்லை..


முதல் சம்பள பேச்சுவார்த்தைக்கு - நமக்குதேவைப்பட்டது..4 மாதமே.  
இவர்களுக்கு இரண்டாவது சம்பளம் முடிவு செய்ய 4 ஆண்டுகள்..
இதிலும் எத்தனை குழப்பங்கள்..குளறுபடிகள்..
குறைந்த பட்ச சம்பள உயர்வினை உறுதி செயய முடிந்ததா?
TTA-RM தோழர்களுக்கு சம்பளம் குறைந்தது உண்மையா இல்லையா?
Diet Allowance - ஐ கோட்டைவிட்டது எப்படி?


பதவி உயர்வுத்திட்டத்தில் நமக்கு இழைக்கப்பட்ட துரோகம் பற்றி .அநீதி பற்றி இந்த வலைத்தளத்திலேயே பன்முறை விளக்கப்பட்டுள்ளது!


நம்புதிரியின் "போனஸ்" சாதனை நாடறிந்தது!


BSNL நிறுவனத்தை "கடை நிலைக்கு தள்ளிய"  அரசின் முயற்சிகளை 
எதிர்க்க வக்கற்று போனதுடன் -  ஒத்துழைப்பும் நல்கியது ஏன்?  தனியார் 
நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு போட்ட உத்திரவுகளை கண்டும் 
காணாமல்  ஏன் இருந்தார்கள்?


அருமைத் தலைவர் குப்தா கொண்டுவந்த "மருத்துவ"  திட்டத்தினை 
நீர்த்துப் போகும்படி ஏன் செய்தார்கள்?


கருணை அடிப்படை  வேலைத்திட்டத்தைக் கூட கோட்டை விட்டது ஏன்?
நன்னடத்தை விதிகளில்-55 வயது ஆன ஒருவரை வீட்டுக்கு அனுப்பும் ஷரத்து 
பற்றி "மௌனவிரதம்" ஏன்?


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் பற்றி BSNL -ன் இரட்டை வேடம் நாடறிந்தது!


LTC -யின் போது பத்து நாட்கள் லீவினை சம்பளமாக்கிக் கொள்ளலாம் என்ற உத்திரவினை எதிர்த்து அபிமன்யூ கடிதம் ஏன் கொடுத்தார்?


சென்ற தேர்தல்களின் போது 'BSNLEU'  அள்ளி வீசிய 5-நாள் வேலை - MTNL சம்பளம் - அதிகாரிகளுக்கிணையான பதவி உயர்வுத்திட்டம்- ௨௦0௦ நாள் கேஷுவல் லீவு 
1200௦௦ இலவச கால்கள் இன்னும் எத்தனை-எத்தனையோ வாக்குறுதிகள் 
எல்லாம் என்ன ஆச்சு?


மேற்கண்ட "சாதனைகள்" மூலம் நிரூபணமாவது:


1. சொல்புத்தியும் இல்லை ..சுயபுத்தியும் இல்லை   என்பதற்கு ஒரு வாழும் 
    உதாரணமாய் விளங்குவது - BSNLEU.


2. ஊழியர் கோரிக்கை பற்றி எந்தவித  தெளிவும்-சிந்தனையும்     அற்றவர்கள்.
    தீர்மானிக்கும் திறனுமற்றவர்கள்.


3. போராடுவதற்கும்-கோரிக்கைகளை வெல்வதற்கும்   தேவையான தெம்பும்-
    திராணியும் அற்றவர்கள்.


4.  இவர்களை நம்புவது மண் குதிரையினை நம்புவது - போல!


5.  இவர்கள் மீண்டும் வந்துவிட்டால் -     BSNL-க்கும் அதன் ஊழியர்களுக்கும் 
     இறுதி அத்தியாயம் எழுதப்படுவது நிச்சயம்.


மதியற்று உறங்கிக் கிடப்பதற்கும் அரசின் சீர்குலைவு கொள்கைகளுக்கு துணை 
போவதற்கும் எப்படி இவர்களால் முடிந்தது?
ஊழியர் விரோத போக்கினையே கொள்கையாக கொள்வதற்கு "சிவப்பு" எதற்கு?
சுய நலமே பிரதானமாக நடந்து கொள்வதற்கு  "சித்தாந்தம்" எதற்கு?
வெட்கமின்றி மீண்டும் வாக்கு கேட்க எப்படி "BSNLEU"  - ஆல் முடிகிறது?


நாம் இழந்தவகைகளை நினைத்தால்...
BSNL-நிலையினை கண்டால்... நெஞ்சு பதறுகிறது!


நாம் பெற்ற அவமானங்கள் துடைத்தெறியப்பட வேண்டாமா?
இழந்த உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டாமா?
BSNL - இழந்த கௌரவத்தினை மீட்டிட வேண்டாமா?
BSNL -ஊழியர்களின் நலன்கள்  காக்கப்பட வேண்டாமா?
இந்த இழி நிலைக்கு நம்மைத் தள்ளியர்வகளுக்கு
 பாடம் புகட்டிட வேண்டாமா?


வாய்ப்பு வந்துவிட்டது!!


அனைத்து ஊழியர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம்!
NFTE -க்கு இணைந்த கரங்களில் வாக்களியுங்கள்.
'அங்கீகாரம்'  பெறுவதற்காக மட்டுமே 
உங்களை நாடி வரும் சங்கமல்ல NFTE!
NFTE-க்கு அங்கீகாரம் என்பது நிறுவனத்திற்கான உத்திரவாதம்!
ஊழியர்கள் நலனிற்கான உத்திரவாதம்.


===============================================================
குறிப்பு:  
பல்வேறு மாவட்டங்களில் 'திருமங்கலங்கள்'  உலாவருவதாக செய்திகள்
வருகின்றன.. இப்படியும் ஒரு "சீரழிவா?"   இதுவும் ஒரு  பிழைப்பா?
 ==============================================================

No comments:

Post a Comment