.

Thursday, January 27, 2011

உப்பு லேது..பப்பு உந்தி!!

ஒரு 77 பேருக்கான அரியர் லிஸ்ட் படித்தீர்களா?


நாம் கேட்டது அரியர் லிஸ்ட் அல்ல...அதிகாரிகளுக்கு 5 கட்ட பதவி உயர்வு.
நமக்கு மட்டும் ஏன் 4 கட்டம்?


அதிகாரிகளுக்கும் நமக்கும் 1.10.2004 முதல்தான் பதவி உயர்வு திட்டம் அமுலாகியது.  ஆனால் அதிகாரிகளுக்கு 1.10.2004 முதலே அரியர்... நமக்கு 1.4.2008 
முதல்தான் அரியர்.   ஏனிப்படி?  இந்த 42 மாத வித்தியாசம் ஏன்?


அதிகாரத்தில் இருந்துகொண்டு இந்த பாரபட்சத்தை எப்படி அனுமதிதீர்கள்?


இந்த வினாக்களுக்கு பதிலளிக்காமல் அரியர் லிஸ்ட் "படம்" காண்பிப்பது யாரை ஏமாற்ற? 


உங்கள் லிஸ்ட்டில் உள்ள தோழர்களும் 42-மாத அரியர் தொகையினை இழந்தது 
உண்மையா இல்லையா?


அவர்கள் போட்ட லிஸ்டை ஆராய்ந்து பார்த்தால் பல உழியர்களுக்கு பட்டியலில் 
கண்டதை விட பல ஆயிரம் குறைவாகத்தான் வருகிறது என்கிறார்களே? பலருக்கு அரியரே இல்லை என்கிறார்களே? ஒருவேளை அந்த 77 பேர்களை தேர்ந்தடுத்து 
போட்டார்களோ?  தைரியாமாக 1300 பேர்களுக்கும் லிஸ்ட் போடவேண்டியது தானே? 



1 comment: