.

Saturday, March 26, 2011

உறுப்பினர்களின் கவணத்திற்கு

ஒய்வு பெறும் வயது 58 - ஆக மாற்றப்படும் என்று ஒரு வதந்தி
உலவுகின்றது.  இது சம்பந்தமாக ஒரு விளக்கம். BRPSE என்று ஒரு அமைப்பு உள்ளது. (Board for Reconstruction of Public Sector Enterprises).  அதனுடைய 86வது கூட்டம், கடந்த 21/12/2010 அன்று நடந்தது.   

அக்கூட்டத்தில் BSNL-ஐ "கரையேற்றும்" நோக்கத்தில், ரிடயர்மெண்ட் வயதினை 58 ஆக மாற்ற வேண்டும். VRS திட்டம் கொண்டு வரப்பட வேண்டும், லேண்ட் லைன் இழப்பினை -வேல்யூ ஆடட் சர்வீஸ் மூலம் சரிகட்ட வேண்டும,  துறையினை நவீனப்படுத்த வேண்டும், நிர்வாக குறைபாடுகள்-திட்டமிடுதலில் உள்ள குறைபாடுகள் ஆகிய வற்றை களைய வெண்டும், வாடிக்கை யாளர்களின் குறைகளை அக்கறையுடன் தீர்க்க வேண்டும், Take over of ITI by BSNL (இது நொடிந்து போன நிறுவனம்),  BSNL உடன் MTNL சேர்த்தல் (இது நம்மைவிட அதிக நஷ்டம் காட்டும் நிறுவனம்) -என்பன போன்ற பல விதமான 'நிவாரணிகளை'  பரிந்துரைத் துள்ளது. 
இவற்றை நடை முறைப்படுத்துதல்
அவ்வளவு சுலப மானதல்ல - இவை யாவும் வெறும் பரிந்துரைகள் தான். எதுவும் உடனடியாக நடந்து விடக்கூடிய
சாத்தியக்கூறுகள் கொண்டது இல்லை.

மேலும் இந்த கமிட்டி VRS, மற்றும் ஓய்வு வயதினை மாற்றும் அதிகாரம் பெற்றது அல்ல. எனவே தோழர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்; பரப்ப வேண்டாம். 



நமது மேல்மட்ட நிர்வாகம் BSNL-ஐ சுரண்டி தின்பதில் காட்டும்  ஆர்வத்தினை,  நிறுவனத்தை மீட்கும் முயற்சிகளில் காட்டுவதில்லை; மாறாக இது போன்ற காகித அம்புகளை விடுவதில்தான் ஆர்வம்.  
 எனவே தோழர்கள் இந்த கமிட்டியின் ரிப்போர்ட்டினையே இறுதி யாகக் கொள்ள வேண்டியதில்லை.  நமது நிறுவனத்தின் உபாதைகள் என்னென்ன என்பது அனைவரும் அறிந்தததே!

 
ஐ.டி.எஸ் அலுவலர்கள் உள்ளே வந்த பாடில்லை!


அரசாங்கமே தனது நிறுவனத்திற்கு எதிராக முடிவெடுக்கும் பரிதாபம்!


டெண்டர்கள் முடிவெடிப்பதில் எப்போதும் குழப்பம்?


பொறுப்பேற்பதற்கு யவரும் தயாரில்லாத நிலை!


நீக்கமற நிறைந்திருக்கும் "நேர்மையற்ற நிலை"!


தலைகீழாய்ப் போன பணிக் கலாச்சாரம்!


இவற்றைசரி செய்வதற்கு / செய்துகொள்ள யாரும் தயாரில்லை. 


இவைகளை சரி செய்தாலே இன்னும் இரண்டு ஆண்டுகளிலாவது ஓரளவு நிலைமை மேம்படலாம். 
==================================================================

2 comments:

  1. BRPSE பற்றிய அறிவிப்பும் அதைத் தொடர்ந்து தங்களின் விளக்கமும் வெகு சிறப்பு. சரியான விளக்கம்! இந்த அடிப்படையில் தாங்கள் எழுதுவதை விரும்புகிறேன். தங்களுக்கு வாழ்த்துக்கள்.

    S. சிவசிதம்பரம்,
    பட்டுக்கோட்டை.

    ReplyDelete
  2. Comrad Sivachidambaram. Thanks for your encouraging words. Such comments will motivate me to do better. Thanks again.
    Balaraman R
    Cuddalore

    ReplyDelete