.

Monday, June 13, 2011

"BRPSE" MEETING AND FOLLOW UP ACTION

சென்ற 21.12.2010 அன்று 86-ஆவது BRPSE -கூட்டம் நடைபெற்றது தோழர் களுக்கு நினவிருக்கலாம்.  இக்கூட்டம்,BSNL-ன் நிதி மற்றும் கட்டமைப்பு உபாதைகளை களைவதற்காக,  
பல பரிந்துரைகளை அளித்தது. 


இது குறித்து ஏற்கனவே, இந்த வலையினில் குறிப்பிட்டுள்ளோம். (மார்ச் 26 அன்று "உறுப்பினர்களின் கவணத்திற்கு" என்ற தலைப்பில் வெளியான கட்டுரையினை படிக்கவும்)    (http://nftecdl.blogspot.com/2011/03/blog-post_1838.htmlஇப் பரிந்துரைகள் குறித்து BSNL நிர்வாகம் தனது விளக்கங்களை அளித்துள்ளது. 



இவ் விளக்கங்களின் முக்கியமான சுருக்கத்தினை மட்டும் கீழே அளித்துள் ளோம்.


(1) ITI-BSNL இணைப்பு குறித்து:


       ஐ.டி.ஐ என்பது உபகரணங்கள் தயாரிக்கும் அமைப்பு.  இதனுன் தொலை தொடர்பு சேவை அளிக்கும் BSNL -ஐ இணைப்பது சரியாகாது. ஏனெனில் 


(அ) ஐ.டி.ஐ தொழில் நுட்ப ரீதியாக போட்டியிடும் நிலையில் இல்லை. 


(ஆ) போதுமான நிபுணத்துவம் அதனிடம் இல்லை.


(இ)  அதன் தயாரிப்புகள் விலை கூடியவை.


(ஈ)   இணைப்பு ஐ.டி.ஐ-க்குக் கூட, மேலும் நட்டத்தை ஏற்படுத்தக் கூடியது.


(உ)  வியாபார நோக்கில் BSNL -க்கு நலன் பயக்கக்கூடியதில்லை.


(உ)  BSNL-ஏற்கனவே நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போது, இணைப்பு மேலும்     நட்டத்தை கூட்டவே செய்யும்.


(ஊ) BSNL-தனது ஊழியர்களை VRS-ல் அனுப்ப பரிந்துரைத்த இந்த BRPSE அமைப்பே, ஒரு நொடித்து போன நிறுவனத்தின் ஊழியர்களயும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சொல்வது முன்னுக்குப் பின் முரணாணது.


(2) MTNL-இணைப்பு குறித்து:


(அ)    லைஸென்சிங் கொள்கைப்படி,  BSNL,  MTNL பகுதியிலும், MTNL, BSNL பகுதியிலும்   சேவை அளிக்க முடியாது. ஆணால், இணைவதற்கு பதிலாக, இந்த நிறுவனங்கள்  "இசைந்து" பணியாற்றுவது இரு நிறு 
வனங்களுக்கும் பலனளிக்கக் கூடியது.


(ஆ)    MTNL-ன் சம்பள விகிதம் BSNL-ன் சம்பள விகிதத்தை விட அதிகமானது. இதனால் BSNL  ஊழியர்கள் MTNL-சம்பளத்தினை கேட்ப்பார்கள்.


(இ)     MTNL-ன் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பென்ஷன் தொகையினை MTNL-லே  அளித்துவருகிறது.  ஆணால் BSNL-ன் பென்ஷன் மத்திய அரசால் consolidated fund       மூலம் வழங்கப்படுகிறது. இணைப்பு மேலும் குழப்பத்தினையே ஏற்படுத்தும்.


(3)  BSNL-சீரமைப்பு குறித்து:


          இதற்காக தனியான குழு அமைக்கப்பட்டது..இக்குழு பல்வேறு விதமான  பரிந்துரைகளை அளித்துள்ளது.  இவைகள் பரிசீலனையில் உள்ளன.


(4)  விருப்ப ஓய்வு பற்றி:


      தொழிற்சங்கங்கள், விருப்ப ஓய்வு திட்டத்த்னை எப்போதுமே எதிர்த்து வந்திருந்தாலும் கூட , தானாகவே விரும்பி ஓய்வு பெற விரும்புப வர்களுக்காக, இத்திட்டத்தினை "கவர்ச்சிகரமானதாக" ஆக்க வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளது.  இதன் மூலம் "நிறுவனம்-ஊழியர்கள்" இருவருமே பயனடையலாம். இதற்காக இரு திட்டங்கள் பரிசீலிக்கப் படுகின்றன.


திட்டம்-1: 


  பணி செய்து முடித்த ஒவ்வொரு முழுமை பெற்ற ஆண்டுக்கும் 35 நாட்கள் விகிதம் சம்பளம் மற்றும் இனி வர இருக்கும் பணி ஆண்டுகளுக்கு, ஆண்டொன்றுக்கு 25 நாட்கள் விகிதம் சம்பளம்.  இதன்படி குறைந்த பட்சமாக ரூபாய் 25,000/- அல்லது 250 நாட்கள் சம்பளம்-இதில் எது அதிகமோ அது.ஆணால் இந்த தொகை முழுமையாக வேலை பார்த்தால் பெறக்கூடிய சம்பளத்தொகையினை விட அதிகமாக இருக்கக் கூடாது.


திட்டம்-2:  


1. இத்திட்டம் 55 வயதுக்கு மேற்பட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்  அனைவருக்கும் பொருந்தக் கூடியது.   


2. தற்போதைய சம்பளத்தில், இயல்பாக,பணி மூப்பு அடைந்தால் பெறக்கூடிய அளவுக்கு 'நோஷனல் இங்கிரிமெண்ட்'  இப்போதே கொடுத்து , விருப்ப ஓய்வு அளிப்பது.  உதாரணமாக 56 வயது நிரம்பிய ஒருவருக்கு, மூன்று இண்கிரிமெண்ட் அளிப்பது. இந்த மாற்றிய சம்பளத்தின் அடிப்படையில் விடுப்பினை காசாக்கிக்கொள்ளும் திட்டத்தினை அமுல் படுத்தலாம். 


3. இந்த இங்கிரிமெண்டுகளுக்காக BSNL, DOT-க்கு எந்தவிதமான கூடுதல் தொகையும், பென்ஷனுக்காக செலுத்தாது.  


      BSNL-ன் தற்போதைய நிதி நிலையினை கருத்தில் கொண்டு, விருப்ப ஓய்வுத்திட்டதிற்கான அனைத்து செலவுகளையும் DOT-யே ஏற்றுக் கொள்ள வேண்டும்.


 (5)  இது தவிர, உட் கட்டமைப்புகள் மற்றும் உபரி சொத்துக்களை நிர்வகிப்பதற்கான செலவினங்களை குறைத்திடுதல், (நிலம்-கட்டிடங்கள் உட்பட), வியாபாரரீதியாக லாபமற்ற சேவைகள் குறித்தும் (கிராமப்புர தொலைபேசிகள்,  Wi-MAX, தந்தி சேவை போன்றவை) தனது நிலை பாட்டினைத் தெரிவித்துள்ளது.



Click to Print This Page

No comments:

Post a Comment