விழாச் செய்திகள்
29/04/2013 –
புழுக்கமில்லாத இதமான மாலைப் பொழுது. பொது மேலாளர் அலுவலக வாயில்.
“சின்ன ரகு” என அன்புடன அனைவராலும் அழைக்கப் படும் தோழர்
V. ரகுநாதன் அவர்களுக்கு பாராட்டு விழா!
தோழர் வெங்கட்ராமன்
வரவேற்க விழா துவங்கியது.
“பெரிய ரகு”
தான் நேரில் வர
இயலாத காரணத்தால் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அதனை விழாத் தலைவர் தோழர்
B.K அவர்கள் வாசித்தார்.
அவரை
வாழ்த்துவதற்காக மாவட்டத்தின் தொலைதூரங்களிலிருந்தும், ஏன் சேலம் போன்ற
இடங்களிலிருந்தும் கூட, ஓய்வு பெற்றவர்கள் வந்திருந்தனர். தூரம் அதிகம் தான்.
ஆனால் மனதால் நெருங்கிய வராயிற்றே! ரகுவின் கூற்றுப்படியே எதிரிகளே
இல்லாத தோழர் அல்லவா இவர்!
இவரை வாழ்த்திய
திருமதி ஜெயந்தி அபர்ணா (DGM-CFA)
இவரை ‘ஸ்திதப் பிரக்ஞை’ (கலங்காத-அசையாத-உறுதியான மனம் என்று
பொருள்) உள்ள இவருக்கு எதிர்கள் அமைவது எங்கனம் சாத்தியமாகும் என்றார்.
அனைத்துத் தரப்பினரும்
வந்திருப்பதே இவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதைச் சொல்லும் என்றார்
திரு.ராதாகிருஷ்னன் (DGM-CM)
. நிறைவான குண நலன்களைப்
பெற்றவர் எனப் புகழ்ந்தார் திரு.சாந்தகுமார் (DGM-FIN).
தோழர் ரகுவின்
பாராட்டத் தக்க இலாக்காப் பணிகளப் பட்டியலிட்டார் பொது மேலாளர் திரு. லியோ
அவர்கள். நமக்கே ஆச்சர்யம்..! இந்தப்
பணிகளுக்குப் பின்னால் இருந்தது தோழர் ரகுவா?
திருப்பாதிரிப்புலியூர்
பகுதியில் ரகு ஏற்பாடு செய்திட்ட கேபிள் பிளேனிங் தான் இன்னமும் உள்ளது என நம்மை வியப்பிலாழ்த்தினார், ஓய்வு பெற்ற DGM திரு ரவீந்திரன்
அவர்கள்.
தோழர் ரகுவினை
“திருத்தொண்டருடன்” உவமையாக்கிக் காட்டினார், நமது தோழர் லோகனாதன்.
BSNLEU மாவட்டச் செயலர் தோழர் சம்பந்தம் அவர்கள்
ஓய்வு பெறுபவர்களுக்கு இது போன்று அனைவரும் இணைந்து பிரிவு உபசார விழா நடத்த
வேண்டும் என்ற, இன்றைய தினங்களுக்கேற்ற பொருள் நிறைந்த ஆலோசனை தந்தார். களங்கமற்ற மனிதர், நேர்மையானவர், மன வலிமை
மிக்கவர் என புகழ்ந்துரைத்தார்.
“பாண்டு”
என
உரிமையுடனும், அன்புடனும் அழைக்கப் படும் தோழர் பாண்டுரங்கசன் (SNEA மாவட்டச் செயலர்), ரகு போன்ற தோழர்களைப் பார்ப்பது
அபூர்வம் என்றார். ரகுவிற்கும் அவரது துணைவியார் திருமதி சாவித்திரிக்கும்
பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
FNTO மாவட்டச் செயலர் தோழர் ஆர்.ஜெயபால்
அவர்கள், வாடிய முகத்தைக் கூட காணச் சகியாதவர் ரகு என்றார்.
எஸ்ஸார்ஸி அவர்கள் ரகு போன்ற தோழர்களால்தான் NFTE பெருமைபெற்றது என்றார். ரகுவின் இலக்கிய ரசனையையும்
கிலாசித்துச் சொன்னார். ராமலிங்க சுவாமிகளின் வரிகளுக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர்
தோழர் ரகு என்றார்.
தோழர் ஸ்ரீதர் ரத்தினச் சுருக்கமாக, தான் ரகுவின் சீடன் என்றுதான் சொல்லிக்கொள்வேன் என்றார்.
இறுதியாக விழா நாயகன் தோழர் ரகு ஏற்புரை வழங்க, தோழர் வேதராமன் நன்றி நவில,
தோழர் ரகு அளித்த சிறப்பான விருந்துபச் சாரத்துடன் விழா இனிதே முடிவடைந்த்து.
அவருடைய நண்பர்கள் பலரும் தோழர் ரகுவிற்கு புத்தகங்களையும், சால்வைகளயும்
பரிசளித்து மகிழ்ந்தனர்.
விழாவில் பங்கேற்ற
அத்துனைத் தோழியர்களுக்கும், தோழர்களுக்கும் நமது நன்றி!