.

Sunday, May 18, 2014

நிர்வாகத்திற்கு நன்றி

தற்காலிக மாற்றலில் வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்கள் திரும்பி வரும்போது, அவர்கள் முன்பு பணியாற்றிய இடத்தை தருவதே மரபாக இருந்து வந்துள்ளது.


JTO ஆக TCIL லிருந்து திரும்பி வந்தபோது தற்போது ஓய்வு பெறவுள்ள DGM (CM ) அவர்களுக்கு அந்தவகையில் விழுப்புரம் மறுக்கப்பட்டதை 16-05-14 அன்று நடைபெற்ற பணி  ஓய்வு பாராட்டு விழாவில் நினைவு படுத்தினர்.

ஆனால் NON-EXECUTIVE பிரிவில் அந்த மரபு முதலில் மீறப்பட்டது, விழுப்புரம் தோழர் சுப்ரமணியன் TM  மாற்றலின் போதுதான். அப்போது அதை ஏற்றுக்கொண்ட அன்றைய NFTE தலைவர்கள், இப்போது தோழர் கோதண்டராமன் TM  சென்னையிலிருந்து வந்த போது பொங்குகிறார்கள்....

இன்றைய NFTE மாவட்ட சங்கத்திற்கு ஊழியர் பிரச்சினையில் அக்கறை இல்லை என்று குசு..குசு.. பிரச்சாரம்  என்ன?...பாண்டியிலிருந்து நான் தீர்த்து வைக்கட்டுமா என 'அ ....ராஜாக்கள்' போருக்கு புறப்படுவது தான் என்ன?...

NFTE மாவட்ட சங்கம், பிரச்சினை தீர்வில் அணி பார்ப்பதில்லை என்பதை எவரும் தம் நெஞ்சை தொட்டு பார்த்தால் உணர முடியும் .

கடலூரிலிருந்து சென்ற தோழர் கோதண்டராமனுக்கு கடலூர் மறுக்கப்படுவது நியாயமில்லை என நாம் நிர்வாகத்திடம் எடுத்து கூறிய பின் 17-05-2014 அன்று கடலூர் புதுப்பாளையத்தில் பணியில் சேர உத்திரவு வழங்கப்பட்டுள்ளது .

இதன் மூலம் பழைய தவறு சரிசெய்யப்பட்டுள்ளது என்பதில் மாவட்ட சங்கத்தின் பெருமை உயருகிறது.

பிரச்சினையை தீர்த்து வைத்த Sr .GM ,DGM (CFA ) ஆகியோருக்கு நமது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.

No comments:

Post a Comment