.

Monday, July 14, 2014

தமிழ்மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
தமிழ்மாநிலம்
                                                                                                                                                            12-07-2014
அன்பார்ந்த தோழர்களே !
                வணக்கம் , காரைக்குடி சிறப்பு மாநாட்டில் ஒப்பந்த தொழிலாளர்  நிலைகுறித்து விரிவாகவே விவாதித்தோம். தீர்வு கோரும் தீர்மானங்கள் கண்டோம். தீர்வுக்காண  வழிகாட்டலையும் மாநாடு வரையறுத்தது.
                முதற்கட்டமாக மே - 17 அன்று தலைமை பொது மேலாளரை சந்தித்தோம். தயக்கம் தென்பட்டாலும், தலையிடல் மறுக்கப்படவில்லை. விரைவான தலையிடல் வேண்டியும், மாவட்டங்களுக்கு உத்தரவு நகல்களுடன் பிரச்சனைக்களுக்குத் தீர்வு காணவேண்டும் என்ற அழுத்தம் தரும் குறிப்பு அனுப்புதல் தேவை என வேண்டியும் மீண்டும் தலைமைப் பொது மேலாளருக்கு கடிதம் கொடுத்தோம்.
        ஜூலை 17 அன்று சென்னை CGM  அலுவலக வளாகத்தில் ஒருநாள் தர்ணா என்றும் முடிவு செய்து, அதனை நிர்வாகத்திற்கும், தொழிலாளர் நல ஆணையருக்கும் தெரிவித்தோம். CLC-ன்  தலையீட்டையும் கோரினோம். இதற்கிடையில் தோழர்கள் பட்டாபி, முரளி இருவரும் CGM மற்றும் GM (HR) ஆகியோரை  சந்தித்தனர். தொடர்ந்து நிர்வாகத்துடன் பேசி தீர்வு ஏற்படுவதற்கான  முனைப்பை உருவாக்கினார். உத்திரவுகள் மாவட்டங்களுக்கு , தலையிட்டு தீர்வுக்காண  வேண்டும் என்கிற குறிப்போடு சென்றிருக்கிறது . அலட்சியம் தவிப்பதும், ஏனோ  தானோ போக்கை  கைவிட்டு செயல்படுவதும் மாவட்ட நிர்வாகங்களுக்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது .
        நாம் சுட்டிகாட்டிய பிரச்சனைகள் மாநிலம் முழுமைக்கும் ஓரே நிலைபாட்டில் இல்லை. தஞ்சை , வேலூர் , கடலூர்  போன்ற மாவட்டங்களில் பல தீர்வுகள் காணப்பட்டுள்ளன . மற்ற மாவட்டங்களில் பிரச்சனைகளின் தன்மைகள் ஏற்றமிறக்கம் உள்ளது. எனவே மேலிடத்து உத்தரவுகளை கையில் வைத்துக்கொண்டு மாவட்ட நிர்வாகத்தை அணுகி தீர்வுக்கு உடன் வழி காணவேண்டும். ஒப்பந்தக்காரர்களை (CONTRACTORS) தேவைப்படின் நிர்வாகத்தை விட்டு அழைக்க சொல்லி நேரடியாக பேச்சுவார்த்தை தீர்வு என்பதை உறுதிபடுத்த வேண்டும்.
இதில் NFTE மாவட்டச் சங்கத்துடன் இணைந்து,  துணையோடும்,
வழிகாட்டலோடும்  செயல்பட வேண்டியது அவசியம். .
                உத்திரவு நகல்கள் மாவட்டங்களுக்கு அனுப்புகிறோம். நிர்வாகம் சிறிது அவகாசம் தேவை எனக்கருதுகிறது. CLC-ம் மாவட்ட மட்டத்தில் தான் தலைமட்ட பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் , அதற்கு ஒப்பந்ததாரை அழைத்துப் பேசுவதும் அவசியம் எனக் கருதுகிறது.
                நமது தொடர் முயற்சி தீர்வை நோக்கியே நகரும். தேக்கம் உடைத்து நகர்வை ஏற்படுத்தியிருக்கிறோம். அடுத்தடுத்து தீர்வுகள், அனைத்து கோரிக்கையிலும் தீர்வுகள்  என்பதை சாத்தியப்படுத்துவோம்.
                இச் சூழலில் ஜூலை 17 தர்ணாவை தள்ளிவைக்கிறோம். முடிவுகளைக் பெற முயற்சிப்போம். அதன்பின் பரிசீலித்து தேவையெனில் போராடத் திட்டமிடுவோம்.
                NFTE தமிழ் மாநிலச்சங்கம் குறிப்பாக தோழர்கள் பட்டாபியும் , முரளியும் நம்மினும் முனைப்பாகச் செயல்படுவது மிகவும் உதவிகரமாக உள்ளது.
                ஓரிரு மாதத்தில் மீண்டும் கூடுவோம், பரிசீலிப்போம்! திட்டமிடுவோம்.
குறிப்பு:-
அனுப்பட்டுள்ள உத்திரவுகளினபடி ஏற்பட வேண்டிய தீர்வுகள்
               
ஒப்பந்த ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தேதிக்குள் ஊதியப்பட்டுவாடா, ஊதியம் வங்கி மூலம், ஊதியப்பட்டுவாடா நிர்வாக அதிகாரி முன் வழங்குதல், EPF, ESI பிடித்தம், பிடித்தம் பற்றிய தகவல் தருதல், E-பாஸ் புக் , அடையாள அட்டை, ஒப்பந்த ஷரத்தின் அடிப்படையில் ஊதியம், ஒப்பந்த ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு என பலவற்றை அமுல்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு கடுமையாக சொல்லப்பட்டுருக்கிறது. ஒப்பந்தகாரர்கள் மாவட்ட அளவில் உள்ளதால் நமது மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தை நெருக்கி உத்திரவுகளை அமுல்படுத்தச் செய்ய வேண்டும்.
தொடர்ந்து கண்காணிப்போம் ..... அடுத்தநிலை நோக்கி நகர்வோம்.....

தோழமையுடன்
 ஆர் கே          விஜய் ஆரோக்யராஜ்             R.செல்வம்
மாநிலத் தலைவர்          மாநிலப் பொருளாளர்                மாநிலச் பொதுச் செயலர்   

No comments:

Post a Comment