04-08-2014 அன்று கடலூர் தொலைபேசி நிலைய கான்பரன்ஸ் ஹாலில் மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் R செல்வம் தலைமையில் நடைபெற்றது. JCM கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் கான்பரன்ஸ் ஹாலில் நடந்த முதல் செயற்குழு என்பது முதல் வெற்றி.
பின் நிகழ்ச்சி நிரல் படி, சென்ற மாவட்ட சங்க கணக்குகளை முன்னாள் மாவட்ட பொருளாளர் தோழர் M மஞ்சினி வங்கிப்புத்தகம், நிரந்திர வங்கி ரசீதுகள் முதலிய தஸ்தாவேஜிகளுடன் மாவட்ட செயலர் இரா ஸ்ரீதரிடம் வழங்கினார். அதில் சிரில் தமிழ் பேரவை அமைப்பில் போடப்பட்ட தொகை பற்றி விவாதம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட மாநாடு கணக்கை வரவேற்புக்குழு செயலர் தோழர் E விநாயகமூர்த்தி மாவட்ட செயலரிடம் அளித்தார். விவாதம் இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மிகுதியான தொகை ரூ 255/- மாநாடு நடத்திய கடலூர் வெளிப்புற கிளைக்கு அளிக்கப்பட்டது. மாநாடு நடத்த மாவட்ட சங்க இருப்பை எடுத்து செலவு செய்வது எதிர்காலத்தில் தவிர்க்கவேண்டும், மாநாட்டை நடத்தும் கிளையே நிதியை திரட்டவேண்டும் என வழிகாட்டுதல் தரப்பட்டது.
மாவட்ட பொருளாளர் தோழர் A சாதிக் பாட்சா அவர்கள் சிதம்பரம் செயற்குழுவிற்கு பின் ஜூலை வரையிலான காலத்தின் மாவட்ட சங்க வரவு செலவு அறிக்கையை(தணிக்கை செய்யப்படாதது) தாக்கல் செய்தார். சிதம்பரம் செயற்குழுவில் பற்றாக்குறையான நிதிநிலை மேம்பட்டுள்ளதற்கு செயற்குழு பாராட்டு தெரிவித்தது.
மாவட்ட செயலர் சுருக்கமாக அடுத்துவரும் அறிக்கைகள் பற்றி கூறி துவக்கம் செய்ய, தோழர் K கிருஷ்ணகுமார், மாவட்ட உதவி செயலர் மற்றும் Works Committee உறுப்பினர், Works Committee பற்றியும் தோழர் K மகேஸ்வரன், JCM உறுப்பினர், JCM பற்றியும் உரையாற்றினர். தோழர் G ரங்கராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், TMTCLU ஒப்பந்த தொழிலாளர் பிரச்சினைகளை பற்றி எடுத்துரைத்தார். அவரது பேச்சுக்கு சில தோழர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்; அவர்களது ஆட்சேபம் தலைமையால் நிராகரிக்கப்பட்டு, TMTCLU அமைப்பே NFTE மாவட்ட, மாநில சங்கங்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என்பது தெளிவுபடுத்தப்பட்டது.
அடுத்து மாநில அமைப்பு செயலர் தோழர் N அன்பழகன் அவர்கள் தனது வாழ்த்துரையில் ஒற்றுமையின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். மாநில துணைத்தலைவர் V லோகநாதன் வாழ்த்துரைக்கு பின் சிறப்பான மதிய உணவு வழங்கப்பட்டது. கடலூர் தோழர் P குமார் RGB உறுப்பினர் உணவுக்கான பொறுப்பை ஏற்று சிறப்பாக உபசரித்தார்.
உணவுக்குப்பின் அமைப்பு நிலை விவாதத்தில் அனைத்து 15 கிளைசெயலர்களும் அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் பேசினர்.
சொந்த பணியின் காரணமாக காலையில் துவக்கவுரை ஆற்ற முடியாது போன சம்மேளன செயலர் தோழர் G ஜெயராமன் அவர்கள் நமது சங்கத்தில் சமீபத்தில் ஏற்பட்ட குழுபோக்குகள், ஒற்றுமைக்கு எடுத்த முன்முயற்சிகள் பற்றி பதிவு செய்தார் . ரூ 5 லட்சம் நிரந்திர வைப்பு நிதி போடப்பட்ட தோழர் சிரில் தமிழ் பேரவை அமைப்பை NFTE மாவட்ட சங்க முழு கட்டுப்பாட்டில் மாற்றி தர பொறுப்பேற்பதாக அறிவித்தார்.
காலை முதல் செயற்குழு நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து வந்த மாநில செயலர் தோழர் R பட்டாபிராமன் , அனைத்து நிகழ்வுகளையும் உள்ளடக்கி சங்க அமைப்புகள் எப்படி நடத்தபடவேண்டும், கருத்து வேறுபாடுகளை எப்படி கையாளவேண்டும், மேலமைப்புகளின் அறைகூவல்களை JAC இணைந்த போராட்டங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கடமை பொறுப்புகளை அற்புதமாக எடுத்துரைத்தார். கடலூர் மாவட்டத்தில் ஒற்றுமை பாதை அமைக்கப்பட்டதை வரவேற்றார். நமது இலாக்கா எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை அவை நம்மை எப்படி பாதிக்கிறது; தொழிற்சங்கங்கள் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் JAC அமைப்பில்பிற சங்கங்களை ஒருங்கிணைத்து பொறுப்பு- வேறுபாடுகளையும் மீறி தலமட்ட தலைவர்களுக்கு பெரிதும் உண்டு எனக் கூறி மாவட்ட சங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அடுத்து மாவட்ட செயலர் தோழர் இரா ஸ்ரீதர் தொகுப்புரையாற்றினார். மாநாட்டுக்குப்பின் நிகழ்ந்த நிகழ்வுகளை, மாவட்ட சங்கத்தின் மீது கூறப்படும் விமர்சனங்களுக்கு சுருக்கமாக உண்மையை தெளிவுபடுத்த வேண்டி எடுத்துரைத்தார். மாவட்ட சங்கம் ஊழியர் பிரச்சினைகளை தீர்ப்பதில் அணி பார்ப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டுகளுடன் கூறி, மாவட்ட செயற்குழுவில் எழுப்பப்பட்ட வாத, பிரதிவாதங்களை கான்பரன்ஸ் ஹாலோடு விட்டுவிட்டு ஒற்றுமையாக செயல்பட வேண்டினார்.
வரும் 11-ம் தேதி (இந்த ஆண்டு மட்டும் தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை சார்பில் )நடைபெறவுள்ள தமிழ் விழா அழைப்பிதழ் குறித்தும் அதில் எஸ்ஸார்சி பாராட்டில் தோழர் P S அழைக்கப்பட்டுள்ளார் என்றும் நாளை நடைபெறவுள்ள JAC அமைப்பு கூட்டத்தில் தோழர் R செல்வம், தோழர் இரா ஸ்ரீதர், தோழர் N அன்பழகன் ஆகியோர் NFTE சார்பில் பங்கேற்பர் என்றும் அறிவித்தார்.
தோழர் G ரங்கராஜ் சூடான விவாதங்களுக்கு மத்தியிலும் குளிர்ச்சியான முடிவுகளோடு முடிந்த செயற்குழுவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.
செயற்குழுவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்த GM அலுவலக கிளை செயலர் தோழர் S ராஜேந்திரன், அமைப்பு செயலர் AC முகுந்தன், வெளிப்புறக் கிளை தோழர்கள் R ஜெயராஜ், V முத்துவேல். R பன்னீர்செல்வம் உள்ளிட்ட தோழர்களுக்கு நன்றி.
உணவு வழங்கிய RGB தோழர் P குமார், வெற்றிலை பாக்கு வாழைப்பழம் வழங்கிய தோழர் குணசேகரன், காலை மாலை வடை தேநீர் வழங்கிய தோழர் P சொக்கலிங்கம், கடுமையாக உழைத்திட்ட ஒப்பந்த ஊழியர் தோழர்கள் M S குமார், M மணிகண்டன், சுரேஷ், விஜய், அண்ணாதுரை ஆகியோருக்கு நன்றி.
கான்பரன்ஸ் ஹாலுக்கு அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகள்.
ஒற்றுமை பாதைக்கு வழிவகுத்த மூத்த தோழர்களுக்கு நன்றிகள்
No comments:
Post a Comment