.

Thursday, November 27, 2014

வீரவாழ்த்துக்கள்!
              JAC அறிவித்த ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில்
 80 சதவீததிற்குமேல் கலந்து கொண்டு வெற்றிகரமாக்கிய
 தோழர்களுக்கும், தோழியர்களுக்கும்
 மாவட்ட சங்கத்தின் வீரவாழ்த்துக்கள்.
வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக்க கடுமையாக உழைத்த மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும், கிளைச்செயலர்களுக்கும்,                   JAC தோழர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.
 கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 15 கிளைகளில் 12 கிளைத் தோழர்கள் 95 சதவீதம் பேர்  கலந்துகொண்டனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள TMTCLU, TNTCWU சங்கத்தை சேர்ந்த  ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டது சிறப்பாகும். 
கடலூர் வெளிப்பகுதி, விழுப்புரம், திட்டக்குடி கிளையிலிருந்து சிலர் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ளாதது கண்டனத்துக்குரியது.
மாவட்டச்செயலர் உண்ணாவிரத போராட்டம்  அறிவித்த (19-11-2014) அதே நாளில் கடலூரில் வேலைநிறுத்த விளக்கக் கூட்டம் நடத்தி அதில் வீரமாக கர்ஜித்த ஆனந்தன், மஞ்சினி, மற்றும் அக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்த தோழர்கள் பலரும் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளாதது கண்டனத்துக்குரியது.
இச்செயலை மாவட்டசங்கம் கடுமையாக கண்டிக்கிறது.

தகவல் பலகைக்கு

கடலூரில் நடந்த ஆர்பாட்டம் 






Tuesday, November 25, 2014

நவம்பர்’27 வேலைநிறுத்த விளக்க சிறப்புக்கூட்டம் திண்டிவனம் 



Monday, November 24, 2014

நவம்பர் 24
சம்மேளன தின வாழ்த்துக்கள் 

நாம் 60 ஆண்டு வைரவிழாவை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். நீண்ட பயணத்தில் இயக்கம் சந்தித்த சோதனைகளையெல்லாம் சாதனைகளாக மாற்றியிருக்கிறோம். பண்டித நேரு காலம்தொட்டு இன்று வரை எந்த அரசையும் கண்மூடித்தனமாக ஆதரித்ததுமில்லை; எதிர்த்ததுமில்லை. கோரிக்கைகளின் அடிப்படையில் எல்லா அரசுகளையும் எதிர்த்து வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். பல வெற்றிகளை பெற்றுருக்கிறோம்.

தோழர் பாபு தார பாதா,   தோழர் ஹென்றி பேட்டன், தோழர் தாதா கோஷ், தோழர் ஓ பி குப்தா, தோழர் கே ஜி போஸ், தோழர் ஜெகன், தோழர் சந்திரசேகர், தோழர் விச்சாரே ஆகியோரின் தியாகம் நினைந்து பெருமை கொள்வோம்.

ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்ற நிலையிலிருந்து கட்சிக்கு ஒரு சங்கம் என்று தள்ளப்பட்டாலும் ஊழியர் பிரச்சினைகள் மீது நாம் அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறோம். வரும் காலங்கள் சோதனை மிகுந்த காலங்களே. விழிப்புடன் செயல்படுவோம். இயக்கத்தில் பெற்ற அனுபவங்கள் நமக்கு வழிகாட்டட்டும்.

Sunday, November 23, 2014

NFPTE
சம்மேளன வைரவிழா
22-11-2014 அன்று புதுவை சாய்பாபா திருமண மண்டபத்தில் மதியம் 02:30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா இனிதே துவங்கியது. தேசிய கொடியை மூத்த தோழர் சேலம் M.S. அவர்களும், சம்மேளன கொடியை 68 போராட்ட தியாகி தோழர் சுவாமிநாதனும் ஏற்றினர்.
தோழர் M.லட்சம் மாநில தலைவர் தலைமையேற்க ,
தோழர்கள் K.அசோகராஜன், P.சென்னகேசவன் வரவேற்க,
தோழர் V.லோகநாதன் அஞ்சலியுரை நிகழ்த்த ,
தோழர் K.சேது துவக்கவுரை ஆற்றினார். விழாவில்
தோழமை சங்க தலைவர்கள்
S.செல்லப்பா.  அகிலஇந்திய துணை செயலர்-BSNLEU,
A. பாபு ராதாகிருஷ்ணன்.மாநில செயலர்- BSNLEU,
D.சந்திரசேகரன். மாநில செயலர்-FNTO,
A.செல்லப்பாண்டியன். மாநில செயலர்-TEPU,
M.கோபிநாதன்.மாநில செயலர்-SNEA,
S.சிவகுமார். மாநில செயலர்-AIBSNLEA,
திரு. குணசேகரன் மாநில சங்க நிர்வாகி-AIBSNLOA,
P.N.பெருமாள். மாநில செயலர்-SEWA
, D.சிவசங்கர்.மாநில தலைவர்.SNATTA, முன்னாள் மாநில செயலர் தோழர் S.தமிழ்மணி, தோழர். தினேஷ் பொன்னையா AITUC ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். மாநிலத்தின் பல்வேறு  மாவட்டத்திலிருந்து பெரும்பாலான தோழர்களும், தோழியர்களும் 600க்கும் மேற்பட்டோர் விழாவில் பங்கேற்றனர். விழாவில் செப்.1968 ல் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற  
மூத்த தோழர்கள் கவுரவிக்கப்பட்டனர். தோழர்கள்.R.பட்டாபிராமன்.மாநிலசெயலர்,
சம்மேளன செயலர்கள் G.ஜெயராமன். S.S.கோபாலகிருஷ்ணன். ஆகியோர் சிறப்புரையாற்ற
தோழர்.ஆர்.கே நிறைவுரையாற்றி விழாவை முடித்துவைத்தார்.
வழக்கம் போல ஒலிக்கதிர் பொன்விழாவை போல் குழுபோக்கு நீடித்திருந்தது. கடலூர் தோழர்கள் 90 பேர் கலந்து கொண்டனர். விழாவினை குறுகிய காலத்தில் நடத்திய மாநில சங்கத்திற்கும், விழாவை ஏற்று சிறப்பான முறையில் நடத்தி தந்த
புதுவை மாவட்ட செயலர் தோழர் P.காமராஜ்,
சங்க முன்னணிதோழர். N.செல்வரங்கன் குழு தோழர்களுக்கும் 
கடலூர் மாவட்ட சங்கம் வாழ்த்துக்களையும்,வீர வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.
















Friday, November 21, 2014

தமிழ் மாநிலச் செயலரின் வேண்டுகோளின்படி நாளை (22-11-2014) புதுவையில் நடைபெறும் NFPTE வைரவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு (SPECIAL CASUAL LEAVE) சிறப்பு விடுப்பு அளித்து மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 01-12-2014 முதல் ERP முறை அமுலாக்க இருப்பதால்
( For ERP Test Rs.10/- has been credited into Employee's
Bank Account through NEFT on 19-11-2014)
சோதனை ஓட்டமாக ஊழியர்கள் அனைவரின் வங்கி கணக்கிலும்
ரூ.10/- நிர்வாகத்தால் செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்து
அனைத்து ஊழியர்களின் கைபேசிக்கும் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
எனவே ஊழியர்கள் தங்கள் வங்கி கணக்கில் ரூ.10/- வரவு
வந்து உள்ளதா என சரி பார்க்கவும். யாருக்கேனும் SMS வரவில்லை
எனில் உடனடியாக நமது மாவட்ட செயலரின் கவனத்திற்கு
கொண்டுவர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

ரூ.10/- பின்னர் சம்பளத்தில் பிடித்தமும் செய்யப்பட்டுவிடும்.



Thursday, November 20, 2014


நவம்பர்’27 வேலைநிறுத்த விளக்க சிறப்புக்கூட்டங்கள்
விருத்தாசலம் கிளையில்  17-11-2014 அன்று காலை வேலைநிறுத்த  போராட்ட விளக்கக் கூட்டம்  நடைபெற்றது. தோழர்கள்.V.இளங்கோவன்,கலைமணி தலைமையில்  NFTE தோழர்கள். R.செல்வம்,  இரா.ஸ்ரீதர், BSNLEU தோழர்கள் K.T. சம்பந்தம்,      A. அண்ணாமலை போராட்ட விளக்கவுரையாற்றினர்.  விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த தோழர்களுக்கு நன்றி.


உளுந்தூர்பேட்டையில் 17-11-2014 அன்று மதிய உணவு இடைவெளியில் தோழர் .அம்பாயிரம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. NFTE சார்பில் தோழர்கள்.R.செல்வம்  இரா.ஸ்ரீதர், BSNLEU சார்பில் தோழர்கள் K.T. சம்பந்தம்,  A. அண்ணாமலை போராட்ட விளக்கவுரையாற்றினர். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த உளுந்தூர்பேட்டை தோழர்களுக்கு நன்றி.


20-11-2014 அன்று காலை சிதம்பரம் வண்டிகேட்  தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்கு தோழர்கள் H.இஸ்மாயில் மரிகார் NFTE,  N.அனந்தன் BSNLEU,K ,ராமையா FNTO, M.தேவராஜன் NFTE-KTL ஆகியோர் கூட்டு தலைமையில் கிளைசெயலர் BSNLEU  தோழர் V.சிதம்பரநாதன் வரவேற்க, FNTO  தோழர்  K.ராமையா துவக்கவுரை ஆற்றினார். தோழர்.K.T.சம்மந்தம். மாவட்டசெயலர்-BSNLEU, தோழர்.இரா.ஸ்ரீதர்.மாவட்டசெயலர்-NFTE. போராட்ட விளக்கவுரையாற்றினார்கள்.
 சிறப்புரை :
தோழியர்.P.இந்திரா. மாநில துணை செயலர்-BSNLEU, தோழர். V.லோகநாதன். மாநில துணைத் தலைவர்-NFTE.
நன்றியுரை: தோழர் D.ரவிச்சந்திரன் மாவட்ட  உதவிசெயலர் NFTE           கூட்டத்தில் 100  க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.​




















அன்று மதியம் நெய்வேலியில் போராட்டவிளக்க சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. சிறப்புரையாக
தோழியர்.P.இந்திரா மாநில துணைத்தலைவர் BSNLEU,       தோழர். V.லோகநாதன்.மாநில துணைத்தலைவர்-NFTE. விளக்கவுரையாற்றினர்.



 20-11-2014 மாலை கடலூரில் GM அலுவலக வளாகத்தில் நடைபெற்றது, BSNLEU –B. சந்திரசேகர் தலைமையேற்றார், BSNLEU மாவட்டத் தலைவர் A.அண்ணாமலை வரவேற்புரை நிகழ்த்தினார், தோழர்கள்.G.ரங்கராஜ்-TMTCLU, M.பாரதி-TNTCWU, NFTE இரா.ஸ்ரீதர்,BSNLEU K.T.சம்பந்தம் விளக்கவுரையாற்றினர். BSNLEU மாநிலத்துணைத்தலைவர் தோழியர்.இந்திரா, NFTE மாநிலத்துணைத்தலைவர் லோகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். NFTE மாவட்ட பொருளாளர்  A.சாதிக்பாஷா நன்றிவுரையற்றினார். பெருந்திரளாக தோழர்கள், தோழியர்கள் கலந்துகொண்டது கூட்டத்தின் சிறப்பம்சமாகும். விழா ஏற்பாடுகளை சிறப்பாக ஏற்பாடுகளை செய்த கிளைத் தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.