.

Thursday, December 25, 2014

மக்கள் சந்திப்பு இயக்கம்

BSNL ஐ பாதுகாக்க நாடு முழுவதும் மக்களிடமிருந்து 1 கோடி கையெழுத்து பெற்று பாரத பிரதமரிடம் சமர்பிக்க BSNL அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் 24-12-2014 அன்று மாலை 5.00 மணிக்கு உழவர் சந்தை அருகில்  மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.
NFTE மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் தலைமையேற்ற இந்த நிகழ்வில்  150 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இந்த இயக்கத்தின் கடலூர் பகுதி ஒருங்கிணைப்பாளரும் AIBSNLEA மாவட்ட செயலருமான  P வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். கன்வீனர் BSNLEU மாவட்ட செயலர் KT சம்பந்தம் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் நோக்கத்தை பற்றி எடுத்துரைத்தார். CPI மாவட்ட செயலர் M சேகர்,CPI(M ) மாவட்ட செயலர் P ஆறுமுகம் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள புகழேந்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் PRS வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலர் தாமரைசெல்வன் மற்றும் திருமார்பன், NFTE சம்மேளன செயலர் G ஜெயராமன் ,நுகர்வோர் பாதுகாப்பு இயக்க நிஜாமுதீன் குடியிருப்போர் நல சங்க மருதவாணன் மற்றும் வெண்புறா குமார் ,C A தாஸ் ஆகியோர் கையொப்பமிட்டு இயக்கத்தை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர்.SNEA மாவட்ட செயலர் பாண்டுரங்கன் நன்றியுரை வழங்கினார்.
கிளை சங்கங்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தன. குறிப்பாக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள செய்ததில்  கடலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் வெங்கடேசன் அவர்களின்  பங்கு சிறப்பானதாகும்.






















No comments:

Post a Comment