மக்கள் சந்திப்பு இயக்கம்-சிதம்பரம்
BSNL ஐ
பாதுகாக்க நாடு முழுவதும் மக்களிடமிருந்து ஒரு கோடி கையெழுத்து பெற்று பாரத பிரதமரிடம்
சமர்பிக்க BSNL அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரி
சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் 26-12-2014 அன்று மாலை 5.00 மணிக்கு சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.
NFTE கிளை தலைவர் தோழர்
இஸ்மாயில் தலைமையேற்ற இந்த நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட
தோழர்கள் கலந்து கொண்டனர். BSNLEU தோழர் G.S.குமார் வரவேற்புரையாற்றினார்.
BSNLEU மாவட்ட செயலர் K.T.சம்பந்தம் மக்கள் சந்திப்பு
இயக்கத்தின் நோக்கத்தை பற்றி எடுத்துரைத்தார். சிதம்பரம்
சட்டமன்ற உறுப்பினர் தோழர் K.பாலகிருஷ்ணன் CPI(M) அவர்கள்
கையெழுத்து இயக்கத்தை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.CPI மாநில குழு உறுப்பினர் தோழர் T.மணிவாசகம், CPI நகர செயலர்
தோழர் V.M.சேகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் K.S.அழகிரி, திராவிட
முன்னேற்ற கழகம் R.S.வெங்கடேசன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலர்
செல்லப்பன்,பாட்டாளி
மக்கள் கட்சி மாநில பொறுப்பாளர் வேணு புவனேஸ்வரன்,அண்ணாமலை பல்கலை
கழக ஊழியர் சங்க நிர்வாகி மதியழகன், CPI(M) மாவட்ட குழு உறுப்பினர் C. வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினர். மாவட்ட செயலர்கள் இரா.ஸ்ரீதர், P.வெங்கடேசன்-AIBSNLEA, C.பாண்டுரங்கன்-SNEA, கடலூர் தோழர்கள் A.அண்ணாமலை,V.இளங்கோவன், V.முத்துவேல், R.பன்னீர் செல்வம்,R. கிருஷ்ணமூர்த்தி, A.C.முகுந்தன், T.V.பாலு,E.பாலு ஆகியோர் கலந்துகொண்டனர். NFTE மாநில துணைத்தலைவர் தோழர். V.லோகநாதன் நிறைவுரையாற்றினார். SNEA கிளை செயலர் தோழர். A.நடராஜன் நன்றியுரை
வழங்கினார். சிதம்பரம்
கிளை சங்கங்கள் சிறப்பாக விழா ஏற்பாடு செய்திருந்தன.
சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.K .பாலகிருஷ்ணன் (CPIM ) முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை துவக்கி வைத்தார்.
No comments:
Post a Comment