.

Thursday, August 20, 2015

ணி ய்வு பாராட்டு விழா -கடலூர் 

19-08-2015 புதன் கிழமை உணவு இடைவேளையின் போது அலுவலகக் கிளையின் ஒய்வு பெற்ற உறுப்பினர்களுக்குப் பணி ய்வு பாராட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கிளைத்தலைவர் தோழர் D.துரை அவர்கள் அவசர சொந்த வேலையின் காரணமாக வர முடியாத சூழலில் தோழர் K.சீனுவாசன் தலைமை ஏற்றார். விருந்து சமையலை விட,  சில நேரம், அவசரமாக தயாரித்த உணவு மிகச் சுவையாக அமைந்து விடும். அது போல தலைவரின் உரிய நகைச் சுவை மிளிர மிகச் சிறப்பாக அமைந்தது.
            விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் மிக நேர்த்தியாக செய்த  தோழர் A.S குருபிரசாத் வரவேற்புரை ஆற்றினார்.
            பணி நிறைவு பெற்று பாராட்டு பெறும் தோழர்,தோழியர்களின் சேவைகளைத் தோழர்கள் பாராட்டினார். மாவட்டத் துணைத் தலைவர் தோழியர் V.கீதா அவர்கள் தமது உரையை பொறுப்போடு எழுதி வாசித்தார். மாவட்டப் பொருளாளர் தோழர் A. சாதிக் பாஷா TRA-ல் SORTING ASST ஆக பெண்கள் பணி செய்ய முன் வராத போது தோழியர் T. வாசுகி மிகச் சிறப்பாக பணி ஆற்றியதையும், தோழர் V. நீலகண்டன் அவர்கள் பணியில்  சேர்ந்த நாள் முதலாக சங்கத்தின் போராட்டத் தட்டிகளை எழுதியதை நினைவுப் படுத்தினார்.
            மாவட்ட உதவிச் செயலர்கள் தோழர் M. தினகரன், தோழர் D. குழந்தைநாதன், முன்னாள் மாவட்டச் செயலர் தோழர் P. சுந்தரமூர்த்தி வெளிப்புறப்பகுதி செயலர் தோழர் E.விநாயகமூர்த்தி மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் M.S. குமார் முதலியோர் வாழ்த்தி பேசினார்கள்.
            தோழியர் T.வாசுகி அவர்களுக்கு தோழியர். உஷாகோபால கிருஷ்ணன் அவர்கள் பொன்னாடை போர்த்த, தோழியர் B.S.நிர்மலா கிளையின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கினார்.
            தோழர் V. நீலகண்டன் அவர்களுக்கு மூத்த தோழர் N. விஜயகுமார் பொன்னாடை போர்த்த, உறுதியான தோழர் V. முரளிதரன் அவர்கள் நினைவு பரிசு வழங்கினார்.
            தோழர் N. பாலசுப்ரமணியன் அவர்களுக்கு தோழர் P.ஜெயராஜ் அவர்கள் பொன்னாடை போர்த்த, தோழர் A.விஸ்வநாதன் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார்.
            தோழியர் லலிதா குருமூர்த்தி மற்றும் தோழர் M.சுகுமான் சொந்தப் பணியின் காரணமாக விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.
            சங்க அலுவலகத்திற்கு BROADBAND வசதி வழங்கப்பட்ட நல்ல நாள் இன்று எனத் தொடங்கி ஒய்வு பெற்ற அனைத்து தோழர்கள் பற்றியும் மாவட்டச் செயலர் இரா.ஸ்ரீதர் தமது சிறப்புரையில் வாழ்த்திப் பேசினார். தோழியர் லலிதா குருமூர்த்தி அவர்களின் இலாக்கா பணி அர்ப்பணிப்பு, பலதரப்பட்ட அலுவலக மற்றும் சங்க கோப்புகளை எழுதுவதில்  திறமையானவர்  என்றும் ,தோழர் V.நீலகண்டன் தமது மொழி அறிவை இலாக்கா மற்றும் சங்கப்பணிக்கு பயன்படுத்தியதையும் , தோழியர் T. வாசுகி அவர்களின் அமைதியான பணியையும் , தோழர் M. சுகுமாறன் அவர்கள் பிரச்சனை இன்றி ய்வு பெற சங்கம் உதவியதையும், தோழர் N.பாலசுப்ரமணியன் E4 கிளைச் செயலராக மிகச் சிறப்பாக பணியாற்றியதையும் சுருக்கமாகவும் அழுத்தமாகவும்  எடுத்துரைத்தார். மேலும் 78.2 போன்ற பிரச்சனைகள் NFTE அங்கீகாரம் பெற்ற பிறகே தீர்த்து வைக்கப்பட்டதைக் கூறி NFTE மேலும் வலுவுள்ளதாக்க வேண்டியதன் கடமையைக் கூறினார். செப்டம்பர் 2ம் தேதி நடக்க உள்ள பொது வேலைநிறுத்தத்தில் மாவட்ட அலுவல ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்பதனை வலியுறுத்தினார்.
            பாராட்டு பெற்ற தோழர்கள் ஏற்புரை வழங்கி கிளைச் செயலர் தோழர் S. ராஜேந்திரன் அவர்கள் நன்றி கூறினார். விபத்தின் காரணமாமருத்துவ மனையில் நீண்டகாலம் இருக்க நேர்ந்ததால் விழா ஏற்பாடு செய்வதில் தாமதம் என மன்னிப்பு கோரிய அவர், நன்கொடை அளித்து விழா சிறப்பாக ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
            விழாவின் வெற்றிக்குக் காரணம் திரளாக திரண்டு வந்த தோழியர்கள் என்றால் மிகையில்லை, தலைவர் நகைச்சுவை வழங்கினார் என்றால் தோழர் A.S. குருபிரசாத் ஏற்பாடு செய்து வழங்கிய உணவு மேலும் சுவை மிக்கதாய் இருந்தது. உணவு இடைவேளைக்குள் கட்டுக் கோப்பான, நெஞ்சில் பதிந்த நிகழ்வாய் பாராட்டு விழா அமைந்தது.























No comments:

Post a Comment