.

Wednesday, November 4, 2015

ஒப்பந்த ஊழியர் போனஸ் ஆர்ப்பாட்டம் 4-11-2015

அனைத்து ஒப்பந்த ஊழியருக்கும் போனஸ் வழங்கக்கோரி மாவட்டம் முழுவதும் மிகச்சிறப்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனடிப்படையில் இன்று நிர்வாக தரப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. NFTE சார்பில் மாவட்ட உதவிசெயலர் தோழர்.குழந்தைநாதன், TMTCLU மாவட்ட அமைப்பு செயலர் தோழர் முத்துவேல், BSNLEU மாவட்ட செயலர் தோழர் சம்பந்தம், மாநில துணைத்தலைவர் தோழர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில்,
ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி காண்ட்ராக்டர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என நிர்வாகம் கூறியுள்ளது. அனைத்து ஒப்பந்த ஊழியரும் போனஸ்  பெற நிர்வாகமும் உத்தரவாதம் வழங்கியுள்ளது.  
நாமும் நிர்வாகத்திடம்  குறிப்பிட்ட தேதிக்குள் போனஸ் வழங்கப்படவில்லையெனில் திட்டமிட்டபடி 6- ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுமென தெளிவுபடுத்தியுள்ளோம்.  
கடலூரில் இதனை விளக்கி விளக்ககூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இரு சங்க மாநில,மாவட்ட,கிளைச்சங்க நிர்வாகிகள் தோழர்கள், மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதைப்போன்று மாவட்டம் முழுமையும் உள்ள கிளைகள் தோறும் கூட்டு ஆர்ப்பாட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

கடலூர் விளக்கக்கூட்டம் 



பண்ருட்டி ஆர்பாட்டம் 


திண்டிவனம் ஆர்பாட்டம்


 செஞ்சி ஆர்பாட்டம் 




விருத்தாசலம் ஆர்பாட்டம் 




நெய்வேலி ஆர்ப்பாட்டம்



No comments:

Post a Comment