ஒப்பந்த ஊழியர்களுக்கான போனஸ்-சம்பளம்
தோழர்களுக்கு வணக்கம்!
நமது நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த
ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன் VDA (Variable Dearness Allowance) வை
இணைத்து தரவேண்டுமென கார்பரேட் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் அடிப்டையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
ஆகவே மாவட்ட நிர்வாகிகள் தங்களது மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம்
வழங்கப்படுகிறதா என கவனிக்கவும்.
மேலும் இந்த ஆண்டு ஒப்பந்த ஊழியர்களுக்கான
போனஸ் விரைவில் வழங்கப்பட வேண்டுமெனவும்
நிர்வாகத்தால் அந்த அந்த ஒப்பந்ததாரர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி சில பகுதிகளில் மட்டும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் மற்ற பகுதிகளில்
பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இதுவரை போனஸ் வழங்கப்படவில்லை. ஆகவே விரைவில்
அனைவருக்கும் போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென தங்களது மாவட்ட நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகிகள்
வலியுறுத்தும்படி கேட்டுகொள்கிறேன்.
தோழமையுடன்
R.செல்வம்
மாநிலப்பொதுச்செயலர்-TMTCLU
No comments:
Post a Comment