.

Wednesday, December 23, 2015

---  இரும்பின் இனிப்பு ---

   இரும்பு என்றதும் சேலம் எஃகு தான் நினைவுக்கு வரும். சேலம் என்றதும் மாங்கனியின் இனிப்பு நாவில் ஊறும். நமது சேலம்  தோழர்களும் எஃகின் உறுதியையும் மாங்கனிச் சுவையையும் ஒன்றாய் வாய்க்கப்பெற்றவர்கள்.

   தண்ணீர் மட்டுமா மலையிலிருந்து பள்ளம் நோக்கிப்பாயும்? கனிவும் கருணையும் தான் என உலகறிய உரத்துக்கூறி சேலத்திலிருந்து நமது தோழர்கள் நிவாரணப் பொருள்களைச் சுமந்து வந்தனர்.

  சேலம் மாவட்ட செயலர் தோழர் C.பாலகுமார், மாவட்ட தலைவர் தோழர் S.சின்னசாமி, மாநில துணைத்தலைவர் தோழர் G.வெங்கட்ராமன், மாவட்ட உதவிசெயலர் தோழர் G.ஜெயக்குமார், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் R.மணி மற்றும் GMO கிளைசெயலர் தோழர் K.பாலசுப்ரமணியன் ஆகியோர் வந்தனர். நமது நிர்வாகம் வாகனம் தந்து உதவியது. பொதுத்துறையான நமது BSNL ஒவ்வொரு பகுதி அதிகாரிகளும் புதிய முன்னுதாரணம் படைத்துவருகின்றனர். நாம் பெருமைபடுகிறோம். நன்றி பாராட்டுகிறோம்.

 தங்கள் அன்போடும் பெரு உள்ளத்தோடும் ரூ.85,000/-மதிப்புள்ள பொருட்களை நூறு குடும்பத்திற்கு தரும் வகையில் எடுத்து வந்தனர்.

 மலையிலிருந்து பள்ளத்திற்குப் போவது தானே இயல்பு. நமது தோழர்களும் அதையே பரிந்துரைத்தனர். தாழ்வான பகுதியான கடலூர் மஞ்சகுப்பம் வண்ணான்குட்டை பகுதிக்கு தோழர்களை அழைத்து சென்றோம்.
  
   எண்பது குடும்பங்களுக்கு தோழர்கள் நிவாரணப் பொருள்களை வழங்கி மன நிறைவடைந்தனர். நிறைவு நம்மால் உதவ முடிந்ததே என்பதற்குத் தானே தவிர, நிறைவாகக் கொடுத்தோம் என்ற எண்ணத்தில் அல்ல. சென்று பாருங்கள் உங்களால் முடிந்த அருகில் உள்ள இடங்களை. பெருமழையின் பாதிப்பு தொடர்வதை உணரமுடியும்.
  
  அப்பகுதியை சார்ந்த மேலும் இருபது நபர்களுக்கு நமது தொழிற்சங்க அலுவலகத்தில் மூத்தத் தொழிற்சங்க தலைவர் தோழர் S.தமிழ்மணி அவர்களின் தலைமையில் வழங்கினோம்.
இடம் பெரிதுண்டு நெஞ்சில், நமது பணி தொடரும்.
ஒத்துழைத்த தோழர்களுக்கு நன்றி!






No comments:

Post a Comment