கும்பகோணம் மகாமகத்தை ஒட்டி நமது BSNL
சார்பில் குடந்தை
ரயில்நிலையம் அருகில் TELECOM CENTRE போட இரயில்வே நிர்வாகத்தை அணுகியது. ஆனால்
குடந்தை ரயில்வே DRM அவர்கள் அனுமதி மறுத்தார். இதனை
அறிந்த குடந்தை மாவட்ட சங்கம் குடந்தை தபால் பிரிவு NFPE P3 மாவட்ட செயலர் தோழர்.பெருமாள் அவர்களை சந்தித்து நிலைமையை கூற தோழர் தலைமை
தபால் நிலையம் அருகிலும், RMS அருகிலும் அனுமதி பெற்றுக் கொடுத்தார். மேலும் SEWA மாநிலத்தலைவர்
தோழர் கனகராஜ் அவர்கள் ரயில் நிலையம் அருகில் உள்ள CHRIST THE KING பள்ளியின்
தாளாளரிடமும் அனுமதி பெற்றுக்கொடுத்தார். நமது குடந்தைத் தோழர்கள் திட்டம்
சொன்னதும் உற்சாகம் தந்தார் DGM(CFA), உடன் திட்டமிட்டார் PRO
திரு.சிவசங்கரன் கூட்டு
முயற்சிக்கு ஈடு இணையில்லை என்பதை நமது குடந்தைத் தோழர்கள் மாவட்ட செயலர் தோழர். விஜயுடன் இணைந்து சாதித்துள்ளனர். தோழர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
முயற்சிக்கு ஈடு இணையில்லை என்பதை நமது குடந்தைத் தோழர்கள் மாவட்ட செயலர் தோழர். விஜயுடன் இணைந்து சாதித்துள்ளனர். தோழர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
ஆனால், ஒரு சங்கடம் இரயில்வே நிர்வாகம்
மறுப்பு தெரிவித்தவுடன் குடந்தை மாவட்ட நிர்வாகம், மாநில நிர்வாகத்திடம்
பிரச்சனையை எடுத்து சென்று ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெற
முயற்சித்திருக்கவேண்டும்.
No comments:
Post a Comment