.

Thursday, March 10, 2016

அனைத்து அதிகாரிகள் ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து நடத்திய
கடலூர் மகளிர் தின விழாமார்ச் 10, 2016
கடலூர் வாடிக்கையாளர் சேவை மையத்தில் உணவு இடைவேளை விழாவாகச் சிறப்பாக நடைபெற்றது. மகளிர் தினத்தை முன்னிட்டு டில்லி முதல் சான்பிரான்ஸிஸ்கோ வரை 17 மணி நேரம் விமானத்தை பெண்கள் மட்டுமே இயக்கினார்கள்அது போன்று கடலூரில் பெண்கள் மட்டுமே நடத்திய விழா.
தோழியர்கள் B.S.நிர்மலா, K.லலிதா முன்னிலை வகிக்க தலைமைக் குழுவாக தோழியர்கள் R. உஷா, V.கீதா, D.கலைவாணி, சித்ரா நாகராஜன் தலைமையேற்று நடத்தினர். தோழியர் உஷா பெண்கள் தினம் பூக்களால் உருவாக்கப்பட்டதல்ல போராட்டங்களால் உருவானது என்றுரைத்து நல்ல துவக்கம் செய்தார்தோழியர் கீதா பெண்கள் தினத்தின் வரலாற்றை எடுத்துக் கூறி துவக்க உரையாற்றினார்தோழியர் சரோஜாதேவி கணீரென அனைவரையும் வரவேற்றார்,
கடலூர் கந்தசாமி நாயுடு கலைக்கல்லூரி (K.N.C) யின் பேராசிரியர் தோழியர்  P.சாந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்அவருக்கு தோழியர் கலைவாணி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார், பேராசிரியர் தமது உரையில்,
அனைவருக்கும் உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள்இப்போது நாடெங்கும் பல அமைப்புகளால் வணிக நிறுவனங்களால் ஊடகங்களால் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறதுஆனால் மகளிர் தினம் யாரால் எப்போது கொண்டாடத் துவங்கப்பட்டது? அது அமெரிக்காவில் உழைக்கும் பெண்களால்எளிய பெண்களால்சிறு பொறியாகத் துவக்கப்பட்டது.  18—ம் நூற்றாண்டில் பெண்கள் 14 மணி நேரம் உழைக்க நிர்பந்திக்கப்பட்டார்கள்அதுவும் அதே பணியைச் செய்யும் ஆண்களை விட குறைந்த கூலிக்குஇந்த அநீதியை எதிர்த்து அவர்கள் பெரிய போராட்டம் எதுவும் செய்யவில்லை, 10 மணிநேர வேலைநேரக் குறைப்புக்காக ஊர்வலம் சென்றார்கள்லாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தொழிற்சாலை முதலாளிகள் பொறுப்பார்களா? ஊர்வலம் வன்முறையால் நசுக்கப்பட்டது.
அமெரிக்கா  “லோவல்ஆயத்த ஆடை தயாரிப்பு ஆலையில் பணி புரிந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் 10 மணி நேர வேலை, சமவேலைக்கு சம கூலி என்ற கோரிக்கைகளை முன் வைத்து மீண்டும் ஊர்வலம். மீண்டும் அடக்குமுறை.  1908-ல் 15 ஆயிரம் பெண்கள் ஊர்வலம், 1911 ல் டிராய்டில் 146 பெண்கள், கும்பகோணம் தீ விபத்து போன்றதொரு விபத்தில் கருகிச் சாம்பலாயினர் (அவர்கள் ஆலையை விட்டு வெளியே வர முடியாதபடி வெளியே பூட்டப்பட்டிருந்தது, ஏனெனில் வேலை நேரத்தில் அவர்கள் வெளியே திரியக் கூடாது என்பதற்காக முதலாளிகளின் ஏற்பாடுபணி செய்யும் ஆலைகளில் போதுமான கழிவறைகள் கிடையாது. கழிவறைக்குச் சென்று ஏன் தாமதமானது எனக் கேட்டு அதற்கு சம்பளப்பிடித்தம்,,,, இப்படி எத்தனை அராஜகங்கள். தீ விபத்திற்குப் பின் அரசு சில மாற்றங்களைக் கொண்டு வந்ததுஇதைக் கொண்டாடும் வகையில் அமெரிக்காவில் பிப்ரவரி கடைசி ஞாயிறு மகளிர் தினமாக அனுசரிக்கப்பட்டது.

1910 ல் உலக மகளிர் சங்க மாநாடு நடைபெற்றதுஅதில் தோழியர் கிளாரா ஜெட்கின் முன்மொழிந்தது தான் மார்ச் 8 ம் நாள் உலகெங்கும் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் பலநாடுகளைச் சேர்ந்த பெண்கள் பணி செய்ததால் எழுச்சிக்கும் சர்வதேச பார்வைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. 200 ஆண்டு கால போராட்ட வரலாற்றுப் பின்னணி கொண்டது இந்த தினம்.
ஆனால் போராட்டம் கோரிக்கைகள் தியாகம் என்பதையெல்லாம் மழுங்கடிக்கும் வகையில் ஆடல்,பாடல்,கோலம்,சமையல் போட்டி என நம்மை முடக்கும் வகையிலேயே கொண்டாட்டங்களைத் திட்டமிட்டு நடத்துகிறார்கள்ஆனால் பெண்களின் நிலை?
இன்னும் பள்ளி முதல் காடு கழனி வரை பாலியல் துன்புறுத்தல்கள்நிர்பயா வழக்கில் என்ன நடந்ததுஅந்தப் பெண் ஏன் இரவு 10 மணிக்கு மேல் ஆண் நண்பருடன் செல்ல வேண்டும் என பெண்களை வைத்தே பேச வைத்தார்கள்காரணம் இங்கு பெண்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்அவள் எதை உடுத்த வேண்டும் எதை உண்ண வேண்டும் எப்படி நடக்க வேண்டும் என்பதெல்லாம் மற்றவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என வரையறை செய்து சட்டகத்தில் அடைக்க எண்ணுகிறார்கள்.
ஆற நூறு ஆக்குவாங்க சின்னக் கண்ணுஅதை --அம்மா கையிலே கொடுத்துப் பாரு செல்லக்கண்ணு என்ற சினிமா பாடல். அப்படி சேமிப்பது அவள் குணம், தன் நலம் தன் உணவு என்பதைக் கூட கவலைப்படாது குடும்பத்தை கவனிப்பவள் அல்லவா பெண்பிறகு ஏன் நாட்டில் 33 சதவீத இட ஒதுக்கீடு இன்னும் இழுபறியாகவே உள்ளது?

பொருளாதார ரீதியாக நாம் நன்றாக உள்ளோம்பொதுத் துறையான BSNL –ல் பல பெண்கள் பணியாற்றுகிறீர்கள்இந்தத் துறை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்கான பொதுப் போராட்டங்களில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாமாபோராட்டங்களில் உருவான பெண்கள் தினத்தைக் கொண்டாடும் நாம் நமது துறையைக் காக்கும் வேலைநிறுத்த இயக்கங்களில் பங்கேற்க வேண்டாமா?
ஆனால் போராட்டங்களில் பெண்கள் ஈடுபடுவதை இந்த சமூகம் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை தான்ஏன் எங்கள் கல்லூரியில் மாணவிகள் போராடினார்கள்பல நூறு பெண்கள் பயிலும் கல்லூரியில் கழிவறைகள் இல்லை. குறைந்த பட்ச அடிப்படை வசதியைக் கேட்டுப் போராடுவது குற்றமாஅப்படி நாங்கள் போராடும் போது நீங்கள் வந்து ஆதரவு தெரிவித்திருக்க வேண்டாமாஇங்கே உள்ள பெண் அதிகாரிகள் எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவிகள். ஆனால் எங்கள் மாணவிகளின் போராட்டம் கொச்சைப்படுத்தப்பட்டது என்பது தான் உண்மை
ஆனால் இதனை மாற்ற தொடர்ந்து போராடத்தான் வேண்டும்சமூக அநீதிகளை எதிர்த்து நாம் குரல் எழுப்ப வேண்டும். அத்தகைய போராட்ட குரல்களோடு நமது குரலும் சேர்ந்து ஒலிக்க வேண்டும்அதுதான் பெண்கள் தினம் கொண்டாடத் துவங்கிய அந்த நூற்றாண்டு பெண்களின் தியாகத்திற்கு நாம் நியாயம் செய்தவர்களாக இருப்போம்மே ஒன்றாம் நாள் மேதினம் போல மார்ச் 8 பெண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டும்மேம்போக்காக பொழுபோக்காகக் கொண்டாடும் நிலையை மாற்றுவோம். சமூகத்திற்கான நமது பங்களிப்பைச் செலுத்துவோம்வாய்ப்புக்கு நன்றி அனைவருக்கும் மீண்டும் சர்வதேச உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!
அடுத்து நமது DGM (CM & EB ) தோழியர் ஜெயந்தி அபர்ணா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவருக்கு சித்ரா நாகராஜன் பொன்னாடை போர்த்தினார். தமது உரையில், அலுவலக பணி காரணமாக தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கோரி இந்த விழா அடுத்த ஆண்டு முழுநாள்        
விழாவாக மாலை நேர விழாவாக நடத்தப்பட வேண்டும்அதற்கு பெண்களாகிய நாம் ஒருநாளாவது நமக்கான விழாவை 5 மணிக்குப் பிறகும் இருந்து நடத்த முன்வரவேண்டும்பேராசிரியர் கழிவறைவசதி பற்றி குறிப்பிட்டார்  உண்மைதான் நான் பள்ளியில் கல்லூரியில் படிக்கும் போதும் அதே நிலைமைதான்ஆனால் இது போன்று போராட முடியும் என்று எங்களுக்குத் தோன்றியதில்லைபல கிராமப்புற/ அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதிகள் சுகாதாரம் மேம்படுவதற்கு நம்மால் ஆனவற்றை நாம் செய்து உதவ முடியும்இதற்கெல்லாம் நமது பார்வை விசாலமடைய வேண்டும்புடவை நகைகள் என நாம் நம்மையே முடக்கிக் கொள்வதிலிருந்து வெளியே வரவேண்டும்அனைவருக்கும் வாழ்த்துகள்
இறுதியாக தோழியர் S. மணிமேகலை நன்றி கூறினார்.
அனைவருக்கும் துவக்கத்தில் எலுமிச்சை சாறு  வழங்கப்பட்டது போல கூட்ட முடிவில் இனிமையான சுவையான உணவு வழங்கப்பட்டதுஇதில் குறிப்பிட வேண்டிய ஒன்று திட்டமிடும் போது மதிய உணவு ஏற்பாடு இல்லைஆனால் எங்கள் விழாவில் உணவில்லாமலா என விழா மகளிர் அணி உணவுக்கு ஏற்பாடு செய்தார்கள் என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்இதனைச் சொல்லும் போது மகளிர் தினத்தை ஒட்டி வந்த ஒரு கவிதையின் ஒரு பகுதி மிகப் பொருத்தமானது
அம்மா --
அவளை எந்த பொய் சொல்லியும்
ஏமாற்றிவிடலாம்ஆனால்
பசி இல்லை,
சாப்பிட்டு விட்டேன்
என்று மட்டும் கூறி
ஏமாற்றவே முடியாது 
மிகச் சிறப்பான விழா பெருந்திரளாக மகளிர், ஊழியர்கள்,அதிகாரிகள், அனைத்து தொழிற்சங்கத் தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதனை விஞ்சப் போவது அடுத்தடுத்த ஆண்டுகளில் இவர்கள் நடத்தும் விழாக்களாகவே இருக்கும்.



No comments:

Post a Comment