.

Wednesday, May 25, 2016

அண்ணாச்சி திருஉருவப் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலிக் கூட்டம்
           
24/05/16 செவ்வாய்க்கிழமை மாலை கடலூர் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றதுமாவட்டத்தலைவர் தோழர் ஆர், செல்வம் தலைமை தாங்கி வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். சேலத்திலிருந்து கடலூர் கோட்டம் பிரிந்து உருவானபோது முந்திரித் தோப்பில் முப்பது பேர் என அண்ணாச்சி விதைத்த வித்து அவரால் வளர்க்கப்பட்டு இன்று தழைத்து நிற்கிறதுசேவை விரிவாக்கத்திற்காக ஸ்டோர்களைத் தேடித் திரட்டியவர். கறாராகப் பேசுபவர்சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்அவருடைய வழிகாட்டுதலினால்தான் கடலூர் மாவட்டத்தில் சாதி மதம் என்ற பிரிவினை கடலூரில் எடுபடவில்லை என அண்ணாச்சியின் பெருமைகளை விவரித்தார்.
            சிதம்பரம் கிளைச் செயலாளர் தோழர் V. கிருஷ்ணமூர்த்தி அண்ணாச்சி D. ரெங்கநாதன் அவர்களின் திருஉருவப் படத்தினைத் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்த தொடர்ந்து பல தோழர்கள் மலரஞ்சலி செலுத்தினர்அண்ணாச்சியின் நினைவாய் ஒருநிமிடம் அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.
            மாநில அமைப்புச் செயலர் தோழர் N. அன்பழகன் முதலில் அஞ்சலி உரையாற்றினார். அவர் தமது உரையில், என்ரானை எதிர்த்து கூட்டு இயக்கத்தில் அவரோடு பங்கேற்றதை நினைவுகூர்ந்தார். அனைவருக்கும் டூல்ஸ் பேக் பெற்றுத் தருவதில் விடாப்பிடியாக இருந்தவர்அண்ணாச்சி என்றால் நேர்த்தியான வெள்ளை ஆடைபுகைப்பழக்கம் கிடையாதுபோதைப்பழக்கம் கிடையாது என்பது மட்டுமல்ல, மற்ற ஊழியர்களும் அதனைக் கடைப்பிடிக்க வற்புறுத்தியவர்ஒலிக்கதிர் புத்தகம் கீழே கிடந்தால் பொறுக்க மாட்டார்எனது சங்கம்அதனால் நான் பெருமை பெற வேண்டும். என்னால் எனது சங்கம் பெருமை பெற வேண்டும் என வாழ்ந்தவர், வழிகாட்டியவர் என்றார்,
            அடுத்து அண்ணாச்சியோடு 50 ஆண்டுகாலம் பழகியவரும், ஓய்வூதிய சங்கப் பொறுப்பாளருமான தோழர் P. ஜெயராமன் அண்ணாச்சியை வேறுஒரு கோணத்தில் படம் பிடித்துக் காட்டினார்எல்லோரும் ரெங்கநாதன் அண்ணாச்சியை ஒரு கடுமையான மனிதர் போல எண்ணுகின்றனர்ஆனால் உண்மையில் அவர் வேறொரு மனிதன் கஷ்டப்படுவதைப் பொறுக்காதவர். ஆங்கிலத்தில் மனிதாபிமானம் என்பதை humanitarian என்பார்கள், அதாவது மற்றவர்களின் கஷ்டம் பார்த்து ஐயோ பாவம் என்று பரிதாபப்படுபவர்கள்மற்றொரு வகை கருணை உள்ளம் கொண்டவர்கள் அவர்களை ஆங்கிலத்தில் Philanthropist என்பார்கள்அண்ணாச்சி அப்படி கருணை உள்ளம் கொண்டவர். உடன் இருந்து உதவி அவர்களின் கஷ்டம் போக்குபவர். பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.
            மழை பெய்து கொண்டிருந்த ஒருநாளில் ஒரு மனிதன் கண்ணீரோடு போவதைப் பார்த்து அவரை அழைத்து விசாரிக்கிறார்அவர் ஒரு பார்ட் டைம் ஊழியர். 2 மணி நேரப் பணிஆனால் நாள் முழுதும் நான்கைந்து மைல் சென்று ஊருக்கே தண்ணீர் சுமந்து வரும் தொழிலாளி. அவருக்கு அந்த மாத சம்பளத்தில் அதிகாரி  அநியாயமாக 4 நாள் குறைத்து விடுகிறார்.  அவரோடு கூட போய் அநியாயத்தைத் தட்டிக் கேட்டு பாதிக்கப்பட்ட தோழரின் துயர் போக்கியவர்.
            கள்ளக்குறிச்சியில் மற்றொரு பார்ட் டைம் பெண் பணியாளர்பலராலும் இம்சைக்கு உள்ளானவர்அவரை கடலூருக்கு மாற்றலில் வரச் சம்மதிக்கச் செய்து முழு நேரப் பணியும் பெற்றுத் தந்த கருணையாளர்.
            சிதம்பரத்தில் தோழியர் இராதா ருக்மணிகுடும்பப் பிரச்னையில் இருந்தவர். ஒரு மனுவை பூர்த்தி செய்வதற்காக பல முறை அலைக்கழிக்கப்பட்டதைக் கண்டு, அண்ணாச்சி தாமே தலையிட்டு என்னிடம் அனுப்பி வைத்தார்பிரச்சனை தீர்க்கப்பட்டு அவரது வாழ்வு மேம்பட்டது.
            அண்ணாச்சிக்கு குடிப்பழக்கம் பிடிக்காது. ஆனாலும் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமும் கருணையோடு நடந்து கொள்பவர்அதற்கு எடுத்துக்காட்டுதான் கடலூர் தோழர் கஜவரதனை போலீஸ் கேஸிலிருந்து மீட்டு வந்தது.
            அண்ணாச்சி இலாக்கா வேலைகளில் மிகவும் நேர்த்தியானவர்கோயில் தேரோடும் வீதியைச் சுற்றி லோயரிங் என்று  வரைமுறையின்றி ஒர்க் ஆர்டர் ஊழல் நடைபெற்ற போது தொழில் நுட்ப ரீதியில் அற்புதமாக அதைத் தீர்த்து வைத்தவர் என பெருமையாகக் குறிப்பிட்டார்.
            புதுவை மாவட்டச் செயலர் தோழர் செல்வரங்கம் தமிழகத்திலேயே முதன் முறையாக மஸ்தூர் சங்கம் 1976 விழுப்புரத்தில் தோழர் ரங்கநாதன் முயற்சியால் அமைக்கப்பட்ட போது நான் தான் அதன் முதல் செயலாளர். கேபிள் பதிக்க பள்ளம் பறிக்கும் போது சாளவம் குறுக்கிட நாங்கள் அதனைத் தொடமாட்டோம் என மறுத்த போது உழைப்பின் மேன்மையை உணர்த்தியவர். தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்அண்ணாச்சி மாமனிதன் என்றார்.
            தோழமைச் சங்க நிர்வாகிகள் தோழர் V. நல்லதம்பி, (PEWA)  தோழர் R. ஜெயபாலன் (FNTO)   தோழர் K.T. சம்பந்தம் (BSNLEU), தோழர் S.நடராஜன் (AIBSNLEA), தோழர்  P. சிவக்குமரன் (SNEA) மற்றும் தோழர் P. சுந்தரமூர்த்தி (முன்னாள் மாவட்டச் செயலர் NFTE) தோழர் V. லோகநாதன் மாநில துணைத் தலைவர் முதலானோர் அஞ்சலி உரை நிகழ்த்தினர். அவர்கள் தமது உரையில் அண்ணாச்சி சுயநலமில்லாதவர் குறிஞ்சி மலர் போன்றவர்., பொறுமையானவர், அமைதியானவர் அனைவரையும் மதிக்கக் கூடிய பண்பாளர், மற்றவர் கருத்துக்கு மதிப்பு தருபவர், சிதம்பரம் பகுதி இன்றும் அவர் காட்டிய வழியில் சிறப்பாக சேவையாற்றுகிறது, அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் எனப் பெருமைப் படுகிறோம், பார்க்கும் தோழர்களைச் சாப்டியா எனக் கேட்கும் மனிதப்பண்பு மனித உறவு மேம்படச் செய்தவர், மஸ்தூர்களை அணிதிரட்டியவர், பல தலைவர்களை உருவாக்கியவர், ஆளுமையின் வெளிப்பாடு  என புகழ்ந்துரைத்தனர்.
            பின்னர், முன்னாள் மாநிலச் செயலாளர் தோழர் எஸ். தமிழ்மணி உரையாற்றினார்லைன்ஸ்டாப் தோழர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு தோழர் ரங்கநாதனின் உழைப்பு மிகப் பெரிதுலைன்ஸ்டாப் தோழர்கள் சங்க தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கு ஊக்கம் தந்தவர்இன்னும் பல மாநிலங்களில் இது நடைமுறைக்கு வர இயலவில்லை..  லைன்மென் செலக் ஷனில் நடைமுறையில் இருந்த ஊழலை ஒழித்ததில் முன்நின்றவர்லைன்மேன் செலக் ஷனில் தோழர் ஜெகன் மூலம் கருத்துகளை முன் வைத்து பல வரைமுறைகளை மாநில நிர்வாகம் கொண்டுவருவதற்குக் காரணமாக இருந்தவர். சேவை பற்றி, பழுது நீக்கம் பற்றி, டிராப் ஒயர் தரம் பற்றி ஓயாது பல மட்டங்களிலும் முயன்றவர்தமிழ் தெரியாத குப்தாவுடன் இந்தி தெரியாத ரங்கநாதன் உரையாடுவதைப் பார்ப்பது அற்புதக்காட்சிஅது தொழிலாள உணர்வுகளின் உரையாடல்.  E 3 /  E 4 என்ற தடைக்கல்லை உடைத்தது கடலூர் மாவட்டம்கடலூர் மாவட்ட வரலாறு என்றால் அதில் அண்ணாச்சியின் பங்கு இல்லாமல் இல்லை என புகழ்ந்துரைத்தார்.
            மாவட்டச் செயலர் இரா.ஸ்ரீதர் நன்றி பாராட்டும் கடமை உணர்வோடு படத்திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்தோம்மற்ற விழாக்கள் போல நாம் முயலவில்லைஉணர்வின் வெளிப்பாடாய் இவ்வளவு தோழர்கள் கலந்து கொண்டுள்ளது பாராட்டுக்குரியதுதோழர் ரங்கநாதன் அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது தோழமை மட்டுமேநம்முள் கருத்து முரண்பாடுகள் வேறுபாடுகள் உண்டு எனினும் நாம் தோழமையை இந்த மாவட்டத்தில் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. அந்த வகையில் தான் அனைவரையும் அழைத்து இந்த விழாவை நடத்த முடிவு செய்தோம்கலந்து கொண்ட அனைத்து சங்கங்களுக்கும் நன்றிகுடும்ப நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு வரமுடியவில்லை என SEWA மாவட்டச் செயலர் தகவல் தந்து விட்டுத் தான் செல்கிறார் என்றால் அது இந்த மாவட்டத்தில் நாம் கட்டி வளர்க்கும் தோழமைஅண்ணாச்சியின்
குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்அண்ணாச்சியின் துணைவியார் கல்யாணி அம்மாள் அவர்களை வணங்குகிறேன்அவர் படும் கஷ்டம் நமது துயரங்களிலிருந்து மாறுபட்டதுஅண்ணாச்சி அவர்கள் வெள்ளை உடை, வெள்ளை மனம், கறைபடாத கரம்அவர்களுடையது நல்லதொரு குடும்பம்அண்ணாச்சி வழியில் தோழமையைக் கட்டியமைப்போம். கடமை உணர்வோடு சேவையாற்றுவோம், மாவட்ட வருவாய்ப் பெருக்கத்திற்குப் பாடுபடுவோம்,
            இறுதியாக மத்திய சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்  P. காமராஜ் நிறைவுரையாற்றினார்
1980 போராட்டத்திற்கு பிறகு நான் கடலூர் வந்தேன்பல தண்டனைகள் தேர்வு எழுதக் கூட முடியாத நிலைசென்னையில் பொது மேலாளரைச் சந்திக்கும் முன் புதன் கிழமைகளில் கூட்டங்கள் நடக்கும்நான் ஒரு பார்வையாளனாகக் கலந்து கொண்டிருக்கிறேன்பிரச்சனைகளை விவரிக்கம் போது தோழர் ரங்கநாதனும் ஜெகனும் கண்ணில் நீர் தளும்ப நிற்பதைப் பார்த்திருக்கிறேன்இரண்டு மாவட்ட மாநாடுகளில் அவரோடு ஸ்டியரிங் கமிட்டியில் பணியாற்றி இருக்கிறேன்யூனியனில் சாதியை அனுமதிக்க முடியாது என்றவர். தோழர் ரகுநாதனும் ரங்கநாதனும் கடலூர் வரலாற்றோடு பிணைந்தவர்கள்சங்க நடைமுறைகளில் நெளிவு சுளிவு இல்லை என்பவர் நிர்வாகத்தோடு பேசும் போது அவரது வாதம் லாஜிகலாக இருககும். தரமான சேவை தந்தவர் தரமான கருவிகளுக்காகவும் சமரசமின்றி போராடியவர்நீங்கள் நினைப்பது போல அல்ல, அண்ணாச்சி நிரம்ப நகைச்சுவை உணர்வு மிக்கவர்தனி உரையாடல்களில் பல கதைகளைக் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்அவரது நினைவு நம்மில் என்றும் நீங்காது நிலைபெற்றிருக்கும் எனக் கூறி தமது உரையயை நிறைவு செய்தார்.
            தோழர் D. குழந்தைநாதன் மாவட்ட உதவிச் செயலர் ஒரு கவிதையை வாசித்து கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
            கூட்டத்தில் திரளான தோழர்களோடு அண்ணாச்சியின் குடும்பத்தினர், இஸ்மாயில், ராஜூ உள்ளிட்ட சிதம்பரம் தோழர்கள் பலர், தோழர் பால்கி, தோழர் பாண்டுரங்கன் முதலிய அதிகாரிகள், தோழர் ஆர்.வி, ஜெயராமன் மாவட்ட உதவிச் செயலர் BSNLEU, மூத்த தோழர் ரகோத்தமன் முதலிய பலர் கலந்து கொண்டனர்தவிர்க்க இயலாத பணியின் காரணமாக சம்மேளனச் செயலர் தோழர் ஜி.ஜெயராமன் மற்றும் தோழர் ஆர்.கே. கலந்து கொள்ள இயலவில்லை. ரகு இல்லாத அண்ணாச்சி விழா இல்லை, ஆனால் அழைப்பிதழ் அச்சடிக்கும் போதே உடல்நிலை காரணமாக தோழர் டி, ரகுநாதன் தன்னால் கலந்து இயலாது தனது பெயரை அழைப்பிதழில் போட வேண்டாம் எனக் கூறி விட்டார்தவறான கருத்துகள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டே இதனை பதிவு செய்ய நேரிட்டது.
            செவியெலாம் அண்ணாச்சி புகழ் நிறைந்திருக்க வயிற்றுக்கொன்று  வழங்க ஏற்பாடு செய்யப்படவில்லை, உணர்வு வெள்ளமாய் நம் உள்ளம் நிறைந்த தலைவனுக்கு நாம் எடுத்த நினைவேந்தல் விழாவும் நினைவில் நிற்கும்.
ஓங்கு புகழ் அண்ணாச்சி நினைவுகள்
தங்குக என்றும் நம் நெஞ்சில்,

நாளும் நம்மை வழிநடத்தவே ! ‘       

No comments:

Post a Comment