.

Monday, October 10, 2016


பறிகொடுத்த போனஸ் உரிமை மீட்பு 


நமது NFTE சங்கத்தின்... இந்த வரலாற்று சாதனையால்...,
லாபம் வந்தால் மட்டுமே போனஸ் என்று, BSNLEU நிர்வாகத்துடன்
போட்ட உடன்பாடு உடைக்கப் பட்டுள்ளது.
 

ஐந்து ஆண்டுகளாக இழந்த போனஸ்... மீட்டெடுக்கப் பட்டுள்ளது...
இரண்டு இலக்க போனஸை NFTE ஏற்றுக் கொண்டது...,
என்ற தேர்தல் கால பொய் பிரச்சாரம்
முறியடிக்கப் பட்டுள்ளது.
 

போனஸ்... எப்படி கிடைக்கும்... NFTE கேட்டால் கிடைத்து விடுமா...
இனி போனஸ், இல்லவே இல்லை... கிடைக்கவே கிடைக்காது...
சம்பளம் வருவதே பெரிது என்ற BSNLEU-வின்
ஆரூடம் பொய்த்து போனது.
 

நம்பிக்கை... அது தானே எல்லாம்..., என்பது போல...
நமது நிறுவனத்தில் தொழிற் சங்கம் என்றால்...
தொழிற் சங்க நம்பிக்கை என்றால்... அது தானே NFTE...,
என்ற நம்பிக்கை... மீண்டும்... மீண்டும்...,
நிரூபிக்கப் பட்டுள்ளது.
 

போனஸ் தொகை குறைவு என்றாலும்...,
ஐந்து ஆண்டுகளாக..., நாம் இழந்த உரிமையை...,
பெற்றுத் தந்தது..., இந்த போனஸ்...,
உரிமையை... உணர்வை... உத்தரவை...,
பெற்று தந்தது நமது NFTE.
 

உரிமை வந்த... இந்த மகிழ்ச்சி பெரு வெள்ளத்தில்...,
நமக்கு உரிமையை பெற்று தந்த... நமது NFTE மத்திய சங்கத்தையும்...,
நமது தலைவர்களையும் கெளரவிப்பதோடு...,
இந்த மகிழ்ச்சியை..., ஊழியர்களோடு...,
பகிர்ந்து கொள்ளும் விதமாக...,
 


 

அதன் அடிப்படையில்... நமது கடலூர்  மாவட்டத்தில்...
 

15-10-2016 அன்று அனைத்து கிளைகளிலும்...,
இனிப்பு வழங்கி..., இந்த உரிமை பெருவிழாவை..., 
கொண்டாடிட.., NFTE கடலூர்  மாவட்ட சங்கம்...,
 
வேண்டு கோள் விடுக்கிறது.

குறிப்பு :- தோழர்கள் அனைவரும் மாநில சங்கம், மாவட்ட சங்கம், கிளை சங்கத்திற்கு தலா ரூ  50/- வீதம் நன்கொடையாக வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


தோழமையுடன் 
மாவட்டச் சங்கம், கடலூர் 

No comments:

Post a Comment