சேலம் செயற்குழு
மாநில செயற்குழு
சேலத்தில் 4.3.2017 காலை முன்னாள் மாநிலத்
தலைவர் தோழர் லட்சம் அவர்கள் தேசியக்கொடியையும், தோழியர் லைலாபானு அவர்கள்
சம்மேளனக் கொடியையும் ஏற்றி வைக்க இனிதே துவங்கியது.
மாநில தலைவர் தோழர் காமராஜ் அவர்கள்
செயற்குழுவினை தலைமை தாங்கி சிறப்பாக நடத்திவைத்தார்.
மாநில செயலர் தனது அறிமுக
உரையில் கடந்த ஆறு மாதங்களில் மாநில சங்கம் தீர்த்து வைத்த பிரச்சனைகளை தொகுத்து
வழங்கினார்.
முன்னாள் மாநில செயலர்
தோழர் பட்டாபி அவர்கள் தனது உரையில் பொதுத்துறை அதிகாரிகளின் ஊதியக்குழு விவரங்களை
சாதக பாதக அம்சங்களை பற்றி பட்டியலிட்டார்.
காரைக்குடி மாவட்ட
செயலரைத் தவிர மற்ற மாவட்ட செயலர்கள், நிர்வாகிகள்
கலந்துகொண்டு தங்களது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்தனர்.
கடலூர் மாவடத்திலிருந்து
ஐம்பதிற்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.
சேலம் பாலகுமாரின்
குழுவினர் மாநில மாநாடா என்று வியக்கும் அளவிற்கு சிறந்த ஏற்பாடுகள், சிறந்த உணவு உபசரிப்புகளை
செய்திருந்தனர்.
No comments:
Post a Comment