“பெண்மை வாழ்கவென
கூத்திடுவோமடா”
மார்ச் 8, சர்வதேச பெண்கள் தினம். புடவை, வளையல், பொட்டு இத்யாதி விற்பவர்கள் எல்லாம்
தள்ளுபடி போட்டு, தமது சரக்கைத் தள்ளிவிட வாய்ப்பளிக்கும் நாளாக இது தற்போது
மாற்றப்பட்டு வருகிறது.
உண்மையில் இது பெண்கள் தினமல்ல;
உழைக்கும் பெண்கள் தினம்.
இது
மகிழ்சிக் கொண்டாட்டமும் அல்ல; பொருட்களை வாங்கிக் குவிப்பதற்குமான நாளுமல்ல.
“ஆண்களோடு பெண்களும் சரிநிகர்
சமானமாக வாழும்” நாட்டினை உருவாக்க, பாலியல் வன்கொடுமைகளை வேரோடு அகற்றவும், சமமற்ற
பாரபட்சங்கள் அனைத்தையும் நீக்க உறுதி எடுக்கும் நாள் இது. இது பெண்கள் மட்டும் கொண்டாட
வேண்டிய நாளன்று. ஆண்கள் பெண்களைக் கொண்டாட வேண்டிய நாள்.
மனித வாழ்வுக்கும், விடுதலைக்கும்,
தொழிலாளர் உரிமைக்குமாக போராடிய, போராடுகின்ற பெண்கள் அனைவரும் நீடுழி வாழ்க!
நன்றி -தொழிற்சங்க
செய்தி மார்ச்’2017
No comments:
Post a Comment