NFTE – BSNLEU
தண்ணீர்.....
தண்ணீர்..... தண்ணீர்....
தோழர்களே!
கடலூர் வண்ணாரப்பாளையம்
ஊழியர் குடியிருப்பில் கடந்த ஐந்து
நாட்களாகச் சொட்டுத் தண்ணீர் இல்லை. காரணம் தண்ணீர் மோட்டார் பழுது. இதனை உடனே
நிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். ஆனாலும் தீர்க்கப்பட வில்லை.
சில
ஊழியர்கள் தம் குடும்பத்தை வெளியூருக்கு அனுப்பிவிட்டனர். ஹோட்டலில்
சாப்பிடுகின்றனர்.
நிர்வாகம் லாரியில் தண்ணீர் ஏற்பாடு செய்கிறது. நன்றி. ஆனால் மூன்றாவது மாடிக்கு எப்படி எடுத்துச் செல்வது?. அப்படியும் தண்ணீர் தூக்கிச் சென்ற ஒரு ஊழியரின் துணைவியார் மாடிப்படியில் தடுக்கி விழுந்து தலையில் அடிபட்டுவிட்டது.
இனியும் பொறுக்க முடியாது.....
இரண்டு ஊழியர் சங்கங்கள் இணைந்து முதற்கட்டமாக
இன்று 09-06-2017 மதிய உணவு இடைவேளையின் போது
இணைந்த ஆர்ப்பாட்டம்
போராடுவோம்!
ஊழியர் குடும்பங்களின் துயர் களைவோம்!!.
தோழமையுடன்
NFTE – BSNLEU
மாவட்டச் சங்கங்கள்,கடலூர்.
No comments:
Post a Comment