.

Monday, July 10, 2017

ஞானத்தந்தை
தோழர் ஞானையாஅவர்களுக்கு
புகழஞ்சலி
கடலூர் மாவட்ட பொதுமேலாளர் அலுவலக வாயிலில் இன்று (10.7.2017) காலை 9.30 மணியளவில் மாவட்ட தலைவர் தோழர் R.செல்வம் தலைமையில் மறைந்த தோழர் ஞானையா அவர்களுக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
தோழர்கள் N.அன்பழகன், லோகநாதன், சம்மேளனச்செயலர் தோழர் G.ஜெயராமன், SNEA தோழர் P.சிவக்குமரன், தோழர் பால்கி, AIBSNLEA தோழர் P.வெங்கடேசன், BSNLEU தோழர் K.T.சம்மந்தம், AIBSNLPWA தோழர் N.திருஞானம்,   AIBDPA தோழர் A.அண்ணாமலை ஆகியோர் தலைவரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, புகழுரைத்தனர். சங்க வித்தியாசமின்றி SEWA சங்கத்தோழர்கள் உள்ளிட்ட, அனைத்து சங்கத் தோழர்களும் கலந்து கொண்டு தோழரின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
    திண்டிவனத்தில் AIBSNLPWA தோழர் P.ஜெயராமன் அவர்கள் கலந்து கொண்டு தோழர் ஞானையா அவர்களின் புகழுரைத்தார்.






No comments:

Post a Comment