.
Tuesday, February 27, 2018
கண்ணீர் அஞ்சலி
நமது புதுப்பாளையம்
தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும் தோழர் A.வீரமணி ( ஒப்பந்த ஊழியர்) அவர்களின் தந்தையார்ஆலடியான் அவர்கள் இன்று (27-02-2018 ) இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த
வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரை பிரிந்து வாடும்
அவரது குடும்பத்தாருக்கு நமது கிளை மற்றும் மாவட்ட சங்கங்களின் சார்பில் ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி
28-02-2018 ஊர்வலம் அவரது சொந்த ஊரான
நெல்லிக்குப்பம் அருகிலுள்ள வாழப்பட்டு கிராமத்திலிருந்து புறப்பட்டு
சென்று இடுகாட்டில் நல்லடக்கம்
செய்யப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்
BY
NFTE-TMTCLU
கிளை மற்றும் மாவட்டச் சங்கங்கள்,கடலூர்
Sunday, February 25, 2018
கண்ணீர் அஞ்சலி
நமது பொது மேலாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு
பெற்ற தோழர் R.தணிகாசலம் STS/CDL அவர்கள் (25-04-2018 ) இன்று இயற்கை எய்தினார்
என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரை பிரிந்து வாடும்
அவரது குடும்பத்தாருக்கு நமது மாவட்ட
சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரது இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான கடலூர்- OT, வசந்தராம்பாளையம் கிராமத்தில் நல்லடக்கம்
செய்யப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தோழமையுடன்
NFTE- TMTCLU
மாவட்டச்
சங்கங்கள்,
கடலூர்.
Tuesday, February 20, 2018
பணி ஓய்வு
பாராட்டு விழா மற்றும்
கிளை மாநாடு
18-02-2018 அன்று
சிதம்பரம் கிளையின் ஆறாவது ஆண்டு மாநாடு மற்றும் தோழர் M.மாரியப்பன்
TT அவர்களின்
பணிஓய்வு விழாவும் தெற்கு சன்னதி இந்து நாடார் திருமண மண்டபத்தில் காலை 09:30 மணிக்கு
தோழர் K.லட்சுமணன்
TT.SSM அவர்கள்
பலத்த கோஷங்கள் முழங்க சம்மேளன கொடியை ஏற்ற தோழர்கள் K.நாவு, M.மணிவேல்
ஆகியோர் கூட்டு தலைமையில் விழா இனிதே துவங்கியது. வரவேற்புரை தோழர் D.ரவிச்சந்திரன், அஞ்சலியுரை
தோழர் A.செல்வகுமார்
ஆற்றினார்கள். தோழர் V.லோகநாதன்
மாநில துணை தலைவர் துவக்கவுரையாற்றினார்.
வாழ்த்துரையாக தோழர்கள் A.நடராஜன் SNEA, V.உஷா AIBSNLEA, R.ரவிகுமார்,BSNLEU, K.சீனிவாசன் கிளை தலைவர் G.M அலுவலக கிளை கடலூர், E.விநாயகமூர்த்தி கிளை செயலர் வெளிப்பிரிவு, கடலூர், D.குழந்தைநாதன் மாவ.உ.செயலர் NFTE, திருமதி E.S.கீதா கோட்டப்பொறியாளர், N.மனோகரன் PEWA, திருமதி.ஆனந்தலட்சுமி SDE, H.இஸ்மாயில் மரைக்கார் AIBSNLPWA, இரா.ஸ்ரீதர் மாவட்ட செயலர் NFTE ஆகியோரும், சிறப்புரையாக தோழர்கள் P.காமராஜ் மாநில தலைவர் NFTE, R.செல்வம் மாநில பொது செயலர் TMTCLU பேசினார்கள். விழாவின் தொடர்ச்சியாக தோழர் M.மாரியப்பன் TT அவர்களின் பணிஓய்வு விழாவும் கொண்டாடப்பட்டது. கிளையின் சார்பாக அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தோழர் V.கருணாநிதி JE புதிய கிளை தலைவர் நன்றிக்கூற விழா இனிதே நிறைவுற்றது.
பணி ஓய்வு
பாராட்டு விழா மற்றும்
கிளை மாநாடு
06-02-2018 அன்று உளுந்தூர்பேட்டை தொலைபேசி நிலையத்தில் தோழர்
P.மனிபாலன் கிளைத் தலைவர் தலைமையில் தோழர்
M. நாராயணன் பணி ஓய்வு பாராட்டு விழாவும் மற்றும் கிளை மாநாடு மிகச்
சிறப்பாக நடைபெற்றது. தோழர் M. நசீர் பாஷா
வரவேற்புரையாற்றினார். தோழர் V.லோகநாதன் மாநிலச் சங்க
சிறப்பு அழைப்பாளர் தனக்கே உரிய பாணியில்
துவக்க உரையாற்றினார்.
தோழர்
R.செல்வம் மாநில பொதுச் செயலர்
TMTCLU சிறப்புரையாற்றினார். தோழர் இரா.ஸ்ரீதர் பணி ஓய்வு பெறும் தோழர் நாரயணன் அவர்களை
பாராட்டியும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை நிர்வாகிகளை வாழ்த்தியும் நிறைவுரையாற்றினார். இறுதியில் தோழர் P.முத்துவேல் நன்றி கூற கூட்டம் இனிதே
முடிவுற்றது.
தோழர்கள் V.இளங்கோவன், P.அழகிரி, S.ராஜேந்திரன், S.மணி,
B.கிருஷ்ணமூர்த்தி,
மூத்த தோழர்கள் S.குருராஜன், L.ஜெகனாதன், D.மோகன்ராஜ் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினார்கள். தோழர் நாராயணன் மாவட்ட சங்கத்திற்கு ரூ 1000/- நன்கொடை
வழங்கினார்.
புதிதாக
தோழர்கள் A.ராமன், .T.கோவிந்தசாமி, P.செல்வி ஆகியோர் தலைவர் , செயலர் , பொருளர் முறையே தேர்வு செய்யப்பட்டனர்.
தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்..
Saturday, February 17, 2018
NFTE
– TMTCLU
மாநிலச் சங்கச் சிறப்பாய்வு கருத்துக் கேட்பு கூட்டம்
நமது தமிழ்மாநிலத் தொலைத்தொடர்பு
ஒப்பந்தத்
தொழிலாளர்
சங்கத்தின்
மாநில
அளவிலான
சிறப்பு
அமர்வு
14—02—2018ல்
சிதம்பரத்தில்
மிகச்
சிறப்பாக
நடைபெற்றது. சேலம் தோழர் சண்முகசுந்தரம்
தலைமை
வகித்தார். சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் 10 மணிக்குத் துவங்கிய கூட்டத்தில் கலந்து கொள்ள மாநிலம் முழுமையிலிருந்தும்
வந்திருந்த
TMTCLU மற்றும் NfTE சங்கத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களைக்
கடலூர்
ஒப்பந்த
ஊழியர் சங்கத்தின்
மாவட்டச்
செயலாளர்
தோழர்
A.S. குருபிரசாத்
வரவேற்றார். அதனை தொடர்ந்து சிதம்பரம் கிளைச் செயலர் தோழர் D.ரவிச்சந்திரன் அஞ்சலியுரையாற்றினார்.
மாநிலப்பொருளாளர்
தோழர்
எம்.
விஜய்
ஆரோக்கியராஜ்
சிறப்புக்
கூட்டத்திற்கான
அவசரத்
தேவை
மற்றும்
எதிர்நோக்கியுள்ள
பிரச்சனைகளின்
கடுமையை
விவரித்தார். அதை எதிர்கொள்ள பலமான அமைப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு அந்த அமைப்பின் நிதி நிலமை பலமானதாக இருக்க வேண்டியதும் மிகமிக அவசியம் என்பதை விவரித்துக் கூறினார். எனவே நமது சங்கத்தின் நிதிநிலமையை நாம் விரும்புகின்ற
அளவு
முன்னேற்ற
சந்தா
முறைப்படுத்தல்
உடனடிக்
கடமையாகக்
கொள்ள
வேண்டும். தோழர்களும் தாமே முன்வந்து சந்தா செலுத்திடல் வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
மாநிலப் பொதுச்செயலாளர்
தோழர்
ஆர்.
செல்வம்
கூட்டத்திற்கான
ஆய்படு
பொருளை
அறிமுகம்
செய்தபின்,
NFTE மாநிலத்
தலைவர்
தோழர்
P. காமராஜ்
BSNL நிர்வாகம்
நிதி
நெருக்கடி
காரணமாக,
சிக்கன
நடவடிக்கையாக, ஒப்பந்த முறையிலான செலவுகளைக் குறைக்க ஆட்குறைப்பு செய்ய, ஒப்பந்த முறைப் பணிகளைச் சீரமைப்பு செய்ய எண்ணுகிறது. இது எதார்த்தமாக நம்முன் உள்ள நிலமை. இதனை ஏற்க முடியாது என ஒற்றைவரியில் நாம் சொல்லிவிட முடியாது. மாறாக, ஆட்குறைப்பை அதிக பாதிப்பு இல்லாமல், அதிகபட்சமான தொழிலாளர்களின்
பணியை
உறுதி
செய்கின்ற
வகையில்
நாம்
திட்டமிட
வேண்டும். அதனை ஆலோசிப்பதற்காகவே
நாம்
இங்கு
கூடியிருக்
கின்றோம், நிச்சயமாக வெற்றிகரமாக இதனைக் கையாள்வோம் என உறுதிபடக் கூறினார்.
அதன்பின்னர் 12 மாவட்டங்களிலிருந்து
வந்திருந்த
மாவட்டச்
செயலாளர்கள்,
மாவட்டப்
பொறுப்பாளர்கள்
மற்றும் கடலூர் மாவட்டத் தலைவர் M.S. குமார் மற்றும் மாவட்ட பொருளாளர் ஜெ. கந்தன் உட்பட, சுருக்கமாக தங்கள் கருத்துகளை நேர்த்தியாக எடுத்துக் கூறினர்.
அதனையடுத்து தஞ்சை NFTE மாவட்டச் செயலாளர் தோழர் கிள்ளிவளவன் தங்கள் பகுதி நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்கள் அதிகம் எனக் கூறி வருகிறது. அதனை உரிய வழியில் சரிசெய்து நமது தொழிலாளர்களைப்
பாதுகாப்பது
நமது
தலையாய
கடமையாகும்
என்றுரைத்தார்.
கடலூர் NFTE மாவட்டச் செயலாளர் தோழர் இரா.ஸ்ரீதர் தமிழ் மாநிலச்
சங்கம்
அங்கீகரித்த
( TMTCLU) ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயல்பாட்டிற்கு
கடலூர்
மாவட்டச்
சங்கம்
உறுதுணையாக
இருக்கும்
என
உறுதி
கூறினார்.
தோழர்களின் கருத்துரைகளின்
அடிப்படையில்
தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன
(தீர்மானங்கள்
தனியே)
நிறைவுரையாக NFTE மாநிலச் செயலாளர் அருமைத் தோழர் கே. நடராஜன் அவர்கள் பேசும் போது, TMTCLU மாநிலச் சங்கம் தோழர் ஆர். செல்வம் தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு
வருகிறார் எனப்
பாராட்டு
தெரிவித்தார்.
TMTCLU மாநிலச்
சங்கம்
எடுக்கும்
ஒவ்வொரு
தீர்மானத்திற்கும்
NFTE மாநிலச் சங்கமும் மத்திய சங்கமும் உறுதுணையாக நிற்கும் என அறிவித்தார். மேலும், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்ட
வழிமுறைகளுக்கு
மாறாகவோ
அல்லது
மாநில
நிர்வாகத்
தலைமை
மாறும்போது
நிலமை
கடுமையாகுமென்றால்
நிச்சயம்
போராடித்
தொழிலாளர்
நலம்
காப்போம்
எனச்
சூளுரைத்தார்.
இறுதியாக, மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஆர். செல்வம் தொகுத்து உரையாற்றினார். அவர் தமது தொகுப்புரையில் NFTE மாநிலச் சங்கத்தோடு இணைந்து பணியாற்றுவதால்
நம்மால்
சாதிக்க
முடிகிறது. நமது மாநிலச் சங்கத்தின் சார்பில் சமவேலைக்குச் சம ஊதியம், ஊதியத்துடன் கூடிய வாராந்திர ஓய்வு முதலிய வழக்குகள் சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளன. சாதகமானத் தீர்ப்பு வரும் என நம்புகிறோம். மாநில நிர்வாகத்துடன்
தொடர்ந்து
பேச்சுவார்த்தை
நடத்தி
பல
சாதகமான
மாறுதல்களைச்
செய்து
வருகிறோம். நமக்குத் தேவை ஒற்றுமை. மேலும் ஊழியர்களை நமது சங்கத்தின் பால் திரட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு சிறப்புக் கூட்டத்திற்கான
ஏற்பாடுகளைச்
செய்த
சிதம்பரம்
தோழர்களுக்கு
நன்றி
கூறினார்.
குறிப்பாக
காலை
மாலை
தேனீர்
வழங்கிய
சிதம்பரம்
தோழர்களுக்கும்
மதிய
உணவு
வழங்கிய
தோழர்
இரா
ஸ்ரீதர்
அவர்களுக்கும்
நன்றி
கூறினார்.
இறுதியில் சிதம்பரம் NFTE கிளைச் செயலாளர் தோழர் V. கிருஷ்ணமூர்த்தி
நன்றி
கூற
கருத்தாய்வுக்
கூட்டம்
நிறைவடைந்தது.
தீர்மானங்கள் :
1.
ஒப்பந்தத் தொழிலாளர் ஊதியப் பிரச்சனைக்கு BSNLEU
சங்கத்துடன் இணைந்து போராடி மாதாந்திர ஊதியத்தை உறுதிப்படுத்திய மாநிலச் சங்கத்திற்கு நன்றி.
2.
அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கம் BSNL
நோடல் அதிகாரி கையொப்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.
3.
TMTCLU மாநில மாநாட்டை மே மாதத்தில் நடத்துவது .
4.
ஒப்பந்த ஊழியர்கள் ஆட்குறைப்பைத் தன்னிச்சையாக நடைமுறைப் படுத்துவதைத் தடுத்து நிறுத்தி, அதற்கு மாறாக, NFTE மாநிலச் சங்கம் வழங்கிய வழிகாட்டலைச் சரியானது என ஏற்றுக் கொள்வது.
5.
பணித் தன்மைக்கேற்ப ஊதியம் வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுத்திட மாநில நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.
6.
சிறப்புக் கூட்டம் நடத்த உதவிய கடலூர் மாவட்டச் சங்கங்களுக்கும் சிதம்பரம் கிளைக்கும் நன்றி பாராட்டுதல்.
Subscribe to:
Posts (Atom)