முக்கிய செய்தி
ஒப்பந்த தொழிலாளருக்கான போனஸ் -2018
தோழர்களே!..
இன்று (
04-10-2018 ) நமது கடலூர் பொது மேலாளர்
அவர்களோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு 2018
ஆண்டிற்க்கான போனஸ் இம்மாதம் 20ஆம் தேதிக்குள் கிடைத்திடும் என்று நமது மாவட்ட சங்க நிர்வாகிகளிடம்
தெரிவித்துள்ளார். மேலும் 2009 ஆம் ஆண்டு
நிலுவை தொகையினை ஒப்பந்த ஊழியர்களுக்கு கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக
தெரிவித்துள்ளார். மற்றும் இதர பிரச்சனைகள் குறித்த காலத்தில் அமுல்படுத்திட
உறுதியளித்துள்ளனர்.
மற்றும் திண்டிவனம் தோழர் G.கணேசமூர்த்தி அவர்களின் சென்னை மாற்றல் உத்தரவு விரைவில் வழங்கப்படும் என்று நமது பொது மேலாளர் உறுதியளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கோட்ட பிரசனையை பொது மேலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம் . நிர்வாகமும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்த்து வைப்பதாக உறுதியளித்துள்ளது.
பேச்சுவார்த்தையின்
போது நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் D.குழந்தைநாதன், தோழர் A.S.குருபிரசாத், தோழர் R.பன்னிர்செல்வம் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
தோழமையுடன்
NFTE-TMTCLU
No comments:
Post a Comment