.

Monday, October 22, 2018


ஒப்பந்த ஊழியர்களுக்கான முக்கிய செய்தி
                                                                                                                          (22-10-2018)
தோழர்களே!..
             இன்று நமது மாவட்ட நிர்வாகம்  நமது சங்கங்களை அழைத்து பேசியது . பேச்சுவார்த்தைக்கு  மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.குழந்தைநாதன் , மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் R.பன்னிர்செல்வம் மற்றும் BSNLEU  சங்க தோழர்களும் சென்றனர்.  நமது முன்னிலையில் பாலாஜி ஏஜென்ஸி மேலாளரை அழைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது.   நமது  மாவட்ட நிர்வாகத்திடம்  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு  20-10-2018 அன்றே வழங்க இருக்க வேண்டிய உறுயதியளிக்கப்பட்ட போனஸ் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.

          ஒப்பந்த தொழிலாளர்களுக்கான போனஸை பற்றி பேசுகையில்  பாலாஜி ஏஜென்ஸி நிறுவனத்தின் மேலாளர்  போனஸ்  ரூபாய்5000/- தருவதாக  நமது தோழர்களிடம் கூறியுள்ளார். அதற்கு நமது தோழர்கள் மறுத்துவிட்டு கொடுத்தால் ரூபாய் 7000/- ஒரே தவணையாக  கொடுங்கள்  என்றும்  எடுத்து கூறியுள்ளனர். மாவட்ட நிர்வாகமும்  விரைந்து  நடவடிக்கை எடுக்க ஒப்பந்தகாரரை கேட்டுக் கொண்டனர்.     

           ஆனால் ஒப்பந்தகாரர் வழக்கம் போல்  எவ்விதமான பதிலும் கூறாமல் மழுப்பல் செய்து கொண்டிருந்தார். இறுதியாக  நமது தோழர்கள்   ஏற்கெனவே 20ஆம் தேதியே கொடுப்பதாக வாக்குறுதி தந்தீர்கள், இன்று தேதி22 ஆகியும் வரவில்லை. ஆகையால் வரும் 24-10-2018க்குள் ரூபாய் 7000/- போனஸ் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கவில்லையெனில் வரும் 25-10-2018 அன்று முதல்  NFTE, TMTCLU, BSNLEU, TNTCWU ஆகிய நான்கு சங்கங்களின் சார்பாக தொடர் போராட்டம்  நடத்துவோம் என கூறிவிட்டு வந்துள்ளனர்.

          ஆகவே தோழர்களே நாம் நமது கோரிக்கையான ரூபாய் 7000/-  போனஸை  ஒரே தவணையில் பெறுவதை  நாம் உறுதியாக இருக்கிறோம் போராட்ட களத்திற்கு தயார்படுத்துவோம்... வெற்றி பெறுவோம்..
                                                         
                                                                                       தோழமையுடன்
                                                                                      NFTE-TMTCLU
                                                                                   மாவட்டச் சங்கங்கள்

                                                                                              கடலூர்.

No comments:

Post a Comment