NFTE-TMTCLU
மாவட்ட செயற்குழு
( 28-10-2018 )
28-10-2018 அன்று மாவட்டத் தலைவர் தோழர் M.S.குமார் தலைமையில்
மாவட்ட செயற்குழு நமது NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
தோழர் R.பன்னிர்செல்வம் வரவேற்புரையாற்றிட, தோழர் G.ரங்கராஜ் நமது TMTCLU
சங்கம் தொடர்ந்து ஒப்பந்த ஊழியர்களுக்காக
நேர்மையாகவும், கொள்கை பிடிப்போடும் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதில்
பெருமிதம் என தமது துவக்கவுரையில் பதிவு செய்தார்.
மாவட்ட
செயலர் தோழர் A.S.குருபிரசாத் தமது
அறிமுகவுரையில் ஆய்படுபொருளை தெளிவாகவும்
விரிவாகவும் எடுத்து கூறினார். தோழர்கள் P.சுந்திரமூர்த்தி மாநில உதவிச்
செயலர் உரையில் சிறப்பாக செயல்பட்டு
கொண்டிருக்கும் TMTCLU மாவட்டச் சங்கத்தை
மனதார பாராட்டுக்கிறேன். மாநிலச் சங்கத்தின் சார்பில் செயற்குழு வெற்றி பெற
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தோழர் V.இளங்கோவன் மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர்
உரையில் உன்னதமான முறையில்
செயல்படும் மாவட்டச் சங்கத்திற்கு வாழ்த்துக்கள் கூறினார்.
NFTE மாவட்ட தலைவர் தோழர் G.கணேசன் கஷ்டப்படும்
ஒப்பந்த ஊழியர்களுக்கு அன்றிலிருந்து
இன்று வரையில் துடிப்போடும் சிறப்போடும்
செயல்படும் ஒரே சங்கம் TMTCLU சங்கம்
தான் என தனது உரையில் பதிவு செய்தார்.
மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.குழந்தைநாதன் உரையில்
தொழிலாளர்களின் நலனில் மிக அக்கறையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக ஒப்பந்த
ஊழியர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதில் உறுதியாகவும், கொள்கைப் பிடிப்போடும்
செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாவட்டச் செயற்குழு வெற்றி பெற NFTE மாவட்டச் சங்கத்தின் சார்பில்
வாழ்த்துக்கள் தெரிவித்தார். தோழர் A.சுப்ரமணியன்
மாநில உதவிச் செயலர் நமது சங்கம் மிகச்
சரியான பாதையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றும் நமது சங்கத்தில்
இணைந்துள்ள பாரதி உள்ளிட்ட தோழர்களை மாநிலச்
சங்கத்தின் சார்பில் வாழ்த்தி வரவேற்கிறோம். தோழர் S.ராமசாமி நாம் என்றும் NFTE பேரியக்கத்தில்
இருப்பதில் தான் மகிழ்ச்சி. ஆகவே தான் NFTCL
சங்கத்திலிருந்து விலகி நான் NFTE-TMTCLU இணைந்தேன் என்று தனது உரையில் பதிவு செய்தார்.
தோழர் பாரதி NFTE-TMTCLU
சங்கங்கள் தொழிலாளர்களின் நலனில் மிக அக்கறையோடும் சரியான
பாதையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் TNTCWU சங்கத்தில்
இருக்கும் போதெல்லாம் இச்சங்கத்தில் குறைவான தோழர்கள்தான் இருக்கிறார்கள் என
நினைத்திருந்தேன். ஆனால் இச் செயற்குழுவில் நான் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான
தோழர்கள் வந்திருப்பது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், அதிகப்படியான
தோழர்களைக் கொண்ட மாவட்டச் சங்கம் என இப்போது தான் தெரிந்து கொண்டேன்.
உண்மையில் நான் இச்சங்கத்தில் இணைந்ததில்
மிக பெருமையடைகிறேன். இச்சங்கத்தில் தொடந்து பயணிப்பேன் என்று தமது உரையில் பதிவு
செய்தார்.
தோழர் R.அகஸ்டீன் NFTE மாவட்ட
அமைப்புச் செயலர், தோழர் S. மணி NFTE மாவட்ட உதவிச் செயலர் , தோழர் P.ராஜா மாவட்ட துணைத் தலைவர், தோழர் டெல்லிபாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தோழர் S.தமிழ்மணி மாநில இணைப்
பொதுச் செயலர் எதற்காக இச்சங்கம்
துவங்கப்பட்டதோ அதனை நோக்கி இச்சங்கம் சிறப்பாக செயல்படுகிறது . ஆகவே மிகச் சரியான
பாதையை நோக்கி பயணியுங்கள் , வாழ்த்துக்கள்.
தோழர் விஜய் ஆரோக்கியராஜ் மாநிலப்
பொருளாளர் என்றும் தனது பாணியில் சங்கம்
எவ்வாறு செயப்படுகிறது, நாம் எப்படி இருக்கிறோம், நாம் நமது சங்கத்தின்பால் எவ்வறு
இருக்க வேண்டும். நமது துறைக்கும் அரசியால் சார்ந்து எப்படி புரிதல்
வேண்டும், நமது தேவைகளை நிறைவேற்ற அரசியல்
சார்ந்து எவ்வாறு செயல்பட வேண்டும். பிற சங்கங்களை போல் அல்லாமல் நமக்கென தனி
அடையாளம் இருக்க ஒவ்வொவ்வரும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்றும். நமது NFTE-TMTCLU சங்கங்கள் கடலூர்,குடந்தை, தஞ்சாவூர் ஆகிய உறுதியால் நாம்
போனஸ் முழுமையாக பெற்றுள்ளோம். ஆகவே நமது சங்க தலைமையோடு ஒன்றினைந்து வலு
சேர்ப்போம் என தமது உரையில் பதிவு செய்தார்.
அடுத்தப்படியாக தோழர் R.செல்வம் மாநிலப் பொதுச்
செயலர் நமது NFTE-TMTCLU மாநிலச் சங்கங்களின் தொடர் முயற்சியின் காரணமாக
தமிழ்நாட்டிலேயே முதன் முதலில் ரூ 7000/-
போனஸ் பெற்றது நமது கடலூர் மாவட்டம் தான்.
அதன் தொடர்ச்சியாக தான் மற்ற மாவட்டங்கள் பெற்றுள்ளன. அதன் வழியில் தொடர்ச்சியாக
செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டச் சங்கத்திற்கு வாழ்த்துக்கள்.
இறுதியாக
நமது NFTE மாவட்டச் செயலர் தோழர்
இரா.ஸ்ரீதர் கடலூர் NFTE-TMTCLU மாவட்டச் சங்கம் கொள்கையில் உறுதியோடு செயல்படுவதின் காரணமாகத்தான் நமது ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த ஆண்டு போனஸ்
பெற்றுத் தந்துள்ளோம். அதன்வழியே நாம் இன்னும் பற்பல கோரிக்கைகளை வென்றெடுக்க நமது சங்கத்தை இன்னும் பலமுள்ளதாக கட்டிட
தொடர்ந்து பயணிப்போம், புதிதாக இணைந்த தோழர்களுக்கு NFTE
சங்கத்தின் வாழ்த்துகள். செயற்குழு வெற்றி பெற வாழ்த்துக்கள் என தமது உரையில்
பதிவு செய்தார்.
இறுதியாக தோழர் J.கந்தன் மாவட்டப் பொருளாளர் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூற
கூட்டம் நிறைவுற்றது.
மாவட்டச் சங்க நிர்வாகிகளில் 18 தோழர்கள் உட்பட 50க்கும்
மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும், சுமார் 30 நிரந்தர ஊழியர்களும் இச்செயற்குழுவில் பங்கேற்றனர். செயற்குழுவில் பங்கேற்று உரையாற்றிய
தோழர் விஜய் ஆரோக்கிய ராஜ் உள்ளிட்டத் தலைவர்களுக்கு நன்றி. செயற்குழுவிற்கு வந்திருந்த அனைவருக்கும் உணவு உபசரிப்புக்கு நிதி அளித்து உதவி செய்திட்ட
மூத்த தோழர் V. நீலகண்டன், தோழர் N.ராஜாராமன், தோழர் T.பாலாஜி அவர்களுக்கும் நமது நன்றி...
மாவட்ட
செயற்குழுவில் ஒருமனதாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
v இந்த ஆண்டு போனஸ் ரூ7000/- பெற்றே தீருவோம் என்று போராட்ட அறைகூவல் விடுத்து போனஸ் பெற்றோம். போராட்டத்திற்கு உறுதுணையாக நின்ற NFTE மற்றும் BSNLEU மாவட்டச் சங்கங்களுக்கும், உறுதியாகச் செயல்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி.
v நமது மாவட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட சிப்காட், பெண்ணடம் பகுதி தோழர்களுக்கு மீண்டும் விரைந்து பணி வழங்க வேண்டும். மேலும் நீதிமன்ற
தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தும் வகையில் தோழர் ராமநாதன் அவர்களுக்கும் பணி
வழங்கிட மாவட்ட நிர்வாகத்தை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
v A/C பிளாண்ட் பகுதியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதா மாதம் சம்பள பட்டுவாடா நடைபெறுவதில்லை. தொழிலாளர் நலச் சட்டங்களும் முறையாக நடைமுறைப் படுத்தப்படுவதில்லை; ஆகவே A/C பிளாண்ட் பகுதி ஒப்பந்த ஊழியர்களை House Keeping Tender ல் சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தை
இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
v TMTCLU மாவட்டச் சங்க நடவடிக்கைகளை விரிவாக்கிட மூன்று புதிய பதவியினை உருவாக்க இச்செயற்குழு
அங்கீகரிக்கிறது. தோழர் M.பாரதிதாசன்
மாவட்ட இணைச் செயராகவும், தோழர் S.ராமசாமி
மாவட்டத் துணைத் தலைவராகவும், தோழர் M.கபிலன் மாவட்ட அமைப்புச் செயலராகவும் இச்செயற்குழு ஒருமனதாகத் தேர்வு செய்கிறது.. புதிய
நிர்வாகிகளுக்கு மாவட்டச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.
v இந்த ஆண்டு குறைந்த பட்ச போனஸ் ரூ 7000/=
வழங்கப்பட்டாலும் அது அனைவருக்கும் ஒரே அளவில் வழங்கப்படவில்லை எனத் தெரிய
வந்துள்ளது. பல ஒப்பந்த ஊழியர்களுக்குப்
போனஸ் குறைவாக வழங்கிய ஸ்ரீபாலஜி ஏஜென்ஸி அது கணக்கிடப்பட்ட விவரத்தை உடனடியாக
நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும்.. அந்த விவரத்தைப் பெறவும், மேலும் விடுபட்ட
தோழர்களுக்கு போனஸ் வழங்கிடவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை
எடுக்குமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
v BSNLEUவின் ஒப்பந்த
ஊழியர் சங்கமான TNTCWU சங்கத்திலிருந்து விலகிய அதன் மாவட்டச் செயலர் தோழர் M.பாரதிதாசன், TMTCLU சங்கத்தின் செயல்பட்டால் ஈர்க்கப்பட்டு, TMTCLU சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். தோழர் M.பாரதிதாசன் மற்றும் அவரோடு இணைந்த அனைத்துத் தோழர்களையும் , மற்றும் தோழர் S. ராமசாமி உள்ளிட்ட அனைத்து தோழர்களையும் வாழ்த்தி TMTCLU
மாவட்ட சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.
தோழமையுடன்
A.S.குருபிரசாத்
மாவட்டச் செயலர்
No comments:
Post a Comment